2019-ல் காங்கிரஸ் நிச்சயம் நாட்டை மீட்டெடுக்கும் - சோனியா!

காங்கிரஸ் கட்சியின் 84-வது தேசிய மாநாடு டெல்லி இந்திரா காந்தி மைதானத்தில் நடைப்பெற்று வருகிறது. 3 நாட்கள் நடைப்பெறும் இம்மாநாட்டின் 2-வது நாளான இன்று....

Last Updated : Mar 17, 2018, 05:57 PM IST
2019-ல் காங்கிரஸ் நிச்சயம் நாட்டை மீட்டெடுக்கும் - சோனியா! title=

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் 84-வது தேசிய மாநாடு டெல்லி இந்திரா காந்தி மைதானத்தில் நடைப்பெற்று வருகிறது. 3 நாட்கள் நடைப்பெறும் இம்மாநாட்டின் 2-வது நாளான இன்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மூத்த தலைவர்கள் ப.சிதம்பரம், குலாம் நபி ஆசாத், மல்லிகார்ஜுன கார்கே, கபில் சிபல் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் பலர் கலந்துக்கொண்டனர்.

காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்து பொறுப்பு ஏற்ற பின்னர் முதன் முறையாக இம்மாநாட்டிற்கு தலைமை தாங்கினார். 

இநிநிலையில் இன்று மாநாட்டில் பேசிய முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பேசுகையில்...

"சவாலான நேரத்தில் கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்ற ராகுலுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றேன். காங்கிரஸ் கடசியின் வெற்றி என்பது இந்தியாவின் வெற்றி ஆகும். மேலும் காங்கிரஸ் என்பது அரசியல் கட்சியல்ல, ஓர் இயக்கம். தற்போது நமது இயக்கத்தை பலப்படுத்துவதே நமது முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும். 

கர்நாடகாவின் சிக்மகளூருவில் இந்திராவின் வெற்றி, அரசியல் சூழலை மாற்றியது. அதே சூழ்நிலை தற்போதும் ஏற்பட்டுள்ளது. 

2019-ல் காங்கிரஸ் நிச்சயம் வெற்றி பெற்று நாட்டை மீட்டெடுக்கும். அதற்கான திட்டங்களை தயாரிக்க வேண்டும். அரசியலில் நுழைய நான் நினைத்ததில்லை, ஆனால் சூழ்நிலை என்னை அரசியலுக்கு கொண்டு வந்தது. அது உங்களுக்கே தெரியும். தொண்டராக இருப்பதையே நான் பெருமையாக கருதுகின்றேன். 

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கொண்டு வந்த நலதிட்டங்களை மோடி அரசு வலுவிழக்க செய்துவிட்டது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி திட்டங்களை மோடி அரசு மதிக்கவில்லை. எதிர்த்து குரல் கொடுப்பரை நசுக்கவே நினைக்கிறது. வெறும் வாக்குறுதிகளை மட்டுமே கொடுத்துக்கொண்டு இருக்கின்றார். விரைவிலை அவரது பொய் முகத்தினை கிழித்தெரிவோம்.

மன்மோகன்சிங் ஆட்சி காலத்தில் பெரும் சவால்களை எதிர் கொண்டார், எனினும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி நன்றாக இருந்தது. நல திட்டங்கள் பலவற்றினை செயல்படுத்தினார். மீண்டும் இந்த நல்லாட்சி கொண்டுவந்து பழிவாங்கும் ஆட்சிக்கு முடிவு கட்டுவோம். இதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உறுதுணையாக இருப்பார்" என தெரிவித்தார்.

Trending News