Hero Maestro Edge 110: தற்போது இரு சக்கர வாகனத் துறையில் ஏராளமான ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு உள்ளன. உங்கள் தேவைக்கேற்ப மற்றும் உங்களிடம் இருக்கும் பட்ஜெட்டை பொறுத்து ஸ்கூட்டரை வாங்கலாம். இதில் டிவிஎஸ், ஹீரோ, பஜாஜ், ஹோண்டா, சுஸுகி போன்ற நிறுவனங்களின் ஏராளமான மாடலில் ஸ்கூட்டர்கள் கிடைக்கும்.
இதில் இன்று நாம் ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 110 பற்றி பார்ப்போம். இந்த ஸ்கூட்டரின் ஸ்டைல் மற்றும் மைலேஜுக்காக பலரால் விரும்பப்படுகிறது. புதிய Hero Maestro Edge 110 ஐ வாங்க, நீங்கள் 65,900 முதல் 68,500 வரை செலவழிக்க வேண்டும். ஆனால் உங்களிடம் அவ்வளவு பெரிய பட்ஜெட் இல்லை என்றால், கவலை வேண்டாம்.
வெறும் 7 ஆயிரம் ரூபாய் செலுத்தி இந்த ஸ்கூட்டரை வீட்டிற்கு எடுத்துச் செல்லக்கூடிய திட்டத்தைப் பற்றி உங்களுக்கு சொல்கிறோம். ஆனால் அதற்கு முன் இந்த ஸ்கூட்டரின் சிறப்பம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள் பற்றிய முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும்.
ALSO READ | Electric Scooter: ஸ்கூட்டர் வாங்க போறீங்களா, எந்த ஸ்கூட்டர் சிறந்தது
Hero Maestro Edge 110 என்பது ஹீரோ நிறுவனத்தின் பிரபலமான ஸ்கூட்டர் ஆகும். அந்த நிறுவனம் சந்தையில் மூன்று வகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்கூட்டரில், 110.9 சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டு உள்ளது. இது 8.75 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இந்த ஸ்கூட்டரின் டிரான்ஸ்மிஷன் தானியங்கி ஆகும்.
ஸ்கூட்டரின் பிரேக்கிங் அமைப்பை பார்த்தால், அதன் முன் சக்கரத்தில் டிஸ்க் பிரேக்கும், பின்புற சக்கரத்தில் டிரம் பிரேக்கும் டியூப்லெஸ் டயர்களுடன் வழங்கியுள்ளது. மைலேஜ் பொறுத்தவரை இந்த ஸ்கூட்டர் 51 கிலோமீட்டர் வரை மைலேஜ் தருவதாக நிறுவனம் கூறுகிறது.
Hero Maestro Edge 110 இன் சிறப்பம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள் பற்றி அறிந்த பிறகு, எளிதாக முன்பணம் செலுத்தி இந்த இரு சக்கர வாகனத்தை எப்படி டேக் ஹோம் ஆஃபரில்ன் வீட்டுக்கு எடுத்து செல்வது என்ற விவரங்களையும் இப்போது தெரிந்துகொள்வோம்.
ALSO READ | பக்காவான வேகம், அட்டகாசமான அம்சங்கள்: இந்தியாவின் முன்னணி மின்சார ஸ்கூட்டர்கள்
இரு சக்கர வாகனம் குறித்து விவரங்களை வழங்கும் இணையதளமான BIKEDEKHO வில் கொடுக்கப்பட்டுள்ள தகவலின்படி, முன்பணம் மற்றும் மாத தவணை (EMI) அடிப்படையில், நிறுவனத்துடன் தொடர்புடைய வங்கி மூலம் இந்த ஸ்கூட்டர் வாங்க ரூ.71,323 கடனாக வழங்குகிறது.
இந்த கடனில், நீங்கள் குறைந்தபட்ச முன்பணமாக ரூ.7,925 செலுத்த வேண்டும். அதன் பிறகு ஒவ்வொரு மாதமும் ரூ.2,555 இஎம்ஐ செலுத்தப்படும். இந்த வாகனத்தின் மீதான கடன் காலம் 36 மாதங்கள் மற்றும் இந்த கடன் தொகைக்கு வங்கி ஆண்டுக்கு 9.7 சதவீத வட்டியை (Interest Rates) வசூலிக்கும்.
முக்கிய தகவல்: இந்த ஸ்கூட்டரில் கிடைக்கும் கடன், முன்பணம், EMI மற்றும் வட்டி விகிதங்கள் உங்கள் வங்கி மற்றும் CIBIL ஸ்கோரைப் பொறுத்தது.
வங்கி அல்லது CIBIL மதிப்பெண்ணில் எதிர்மறையான ரெபோர்ரிபோர்ட் இருந்தால், முன்பணம், கடன் தொகை, EMI மற்றும் வட்டி விகிதங்களில் வங்கி மாற்றங்களைச் செய்யலாம்.
ALSO READ | உலகின் அதிக மைலேஜ் தரும் கார், வெளியான முக்கிய தகவல்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR