எல்லா வருடமும் போல இந்த வருடமும் மே.30ஆம் தேதி உலக புகையிலை எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த தினத்தை புகையிலையை ஒழிப்பதற்காகவும் அது குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்காகவும் நாம் கடைப்பிடிக்கிறோம்.
உலக புகையிலை எதிர்ப்பு தினம்:
உலக சுகாதார அமைப்பு வருடாவருடம், புகையிலை ஒழிப்பு தினத்தை கடைப்பிடிக்க வேண்டி பல்வேறு நாடுகளை வலியுறுத்தி வருகிறது. புகையிலையினால் உடல் நலனிற்கு ஏற்படும் தீங்கு குறித்தும் அதை உட்கொள்வதால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பது குறித்து எடுத்துறைக்கும் வகையில் இந்த தினம் நம் அனைவராலும் கடைப்பிடிக்க படுகிறது. புகையிலை நுகர்வு குறித்து விழிப்புனர்வு ஏற்படுத்த பல்வேறு நாடு மற்றும் மாநிலங்களை சேர்ந்த அரசுக்கும் உலக சுகாதார தினம் வேண்டுகோள் விடுத்துள்ளது. சரி, புகையிலையினால் அப்படி என்ன தீங்கு உடலில் நேர்கிறது? இதைத்தடுக்க உலக சுகாதார அமைப்பு இந்த அளவிற்கு போராடுவது ஏன்?
புகையிலையினால் ஏற்படும் பாதிப்பு:
உலக சுகாதார அமைப்பின் கூற்று படி, நீங்கள் ஒவ்வொரு முறை புகையிலையை நுகரும் போதும் உங்கள் நுரையீரலின் ஆயுள் குறைகிறது. புகைப்பவரை மட்டுமன்றி அவரை சுற்றியிருக்கும் ஜீவன்களின் உடல் நலனையும் புகையிலை பாதிக்கிறது. உலக அளவில் சுமார் 8 மில்லியன் உயிர்கள் புகையிலையை புசிப்பதனால் மாய்ந்து போவதாக உலக சுகாதார அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதை தடுக்கும் நோக்கிலும் பலரை காக்கும் நோக்கிலும் உலக புகையிலை எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
“எங்களுக்கு உணவு வேண்டும்..புகையிலை வேண்டம்..”
பலரால் ஆண்டு தோறும் கடைப்பிடிக்கப்படும் உலக புகையிலை ஒழிப்பு தினத்தின் தீம் வருடா வருடம் மாற்றப்படும். இந்த வருடம் “எங்களுக்கு உணவு வேண்டும்..புகையிலை வேண்டம்..” என்ற வாசகத்தை (தீம்) வைத்தை கடைப்பிடிக்க படுகிறது. புகையிலையை பயன்படுத்துவோர் மட்டுமன்றி, அதை உருவாக்குபவர்களுக்கும் உறைக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த ஆண்டின் புகையிலை எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிரது. புகையிலைக்கு சில இடங்களீல் தடை விதிக்கப்பட்டாலும் ஒரு சிலர் அதற்கு மாற்றாக வேறு சிலவற்றை உபயோகத்திற்காக உருவாக்கி வருகின்றனார். இப்படி செய்யும் விவசாயிகள், இது போன்ற தீங்கு விளைவிக்கும் பொருட்களை விட்டுவிட்டு உணவுக்கு பயன்படும் பொருட்களை விதைக்க வேண்டும் உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் இன்றைய தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
வரலாற்று பின்னணி:
1987ஆம் ஆண்டு முதல் புகையிலை எதிர்ப்பு தினம் கடைபிடிக்க படுகிறது. ஏப்ரல் 7ஆம் தேதி புகைப்பிடிக்க கூடாத நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. 24 மணி நேரமாவது புகைப்பிடிப்பவர்களை கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இந்த நாள் கொண்டுவரப்பட்டுள்ளது. புகையிலை பழக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், அதன் விளம்பரங்களை உலக சுகாதார அமைப்பு கடந்த 2008ஆம் ஆண்டு தடை செய்தது.
மேலும் படிக்க | நந்த கோபால குமரனை நினைவிருக்கிறதா? என்.ஜி.கே படம் வெளியாகி 4 ஆண்டுகள் நிறைவு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ