இந்த ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட வார்த்தை என்ன தெரியுமா?

ஒவ்வொரு நாளும் ஐந்தெழுத்து சொற்றொடர்களை கண்டறிய உதவும் கேமான 'Wordle' தான் உலகஅளவில் பிரபலமான தேடலாக உள்ளது என்று கூகுள் தெரிவித்துள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Dec 8, 2022, 09:42 AM IST
  • Wordle வார்த்தை அதிகம் தேடப்பட்டுள்ளது.
  • உக்ரைன் போரை தாண்டியும் அதிகம் தேடப்பட்டுள்ளது.
  • இது ஒரு வார்த்தை கண்டுபிடிக்கும் போட்டியாகும்.
இந்த ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட வார்த்தை என்ன தெரியுமா? title=

இன்றைய காலகட்டத்தில் நமக்கு ஏதேனும் ஒன்றை பற்றிய தகவலை அறியவேண்டும் என்றால் நூலகத்திற்கோ அல்லது நன்கு கற்றுத்தேர்ந்தவர்களிடமோ செல்ல வேண்டியதில்லை, கையில் ஸ்மார்ட்போன் வைத்திருந்தால் போதும். கூகுளின் உதவியை பயன்படுத்தி நமக்கு வேண்டிய எந்தவித தகவலையும் பெற்றுக்கொள்ள முடியும்.  ஒவ்வொரு ஆண்டும் கூகுளில் எதைப்பற்றி அதிகம் தேடப்பட்டு இருக்கிறது என்கிற தரவை நிறுவனம் கண்டறியும். அதேபோல இந்த வருடமும் கூகுளில் அதிகம் தேடப்பட்ட வார்த்தை கணடறியப்பட்டுள்ளது.  அதன்படி இந்த ஆண்டு அமெரிக்காவிலும் சர்வதேச வகையிலும் 'Wordle' என்கிற வார்த்தை தான் அதிகம் தேடப்பட்ட சொல் என்று கூகுள் கண்டறிந்துள்ளது, இது ஒரு ஐந்தெழுத்து யூகிக்கும் கேம் ஆகும்.

மேலும் படிக்க | Aadhaar Update: ஆதார் கார்ட் அப்டேட் செய்யணுமா? எளிய செயல்முறை இதோ

இது தேர்தல் முடிவுகள் மற்றும் அமெரிக்காவில் "பெட்டி ஒயிட்", "ராணி எலிசபெத்" மற்றும் " உக்ரைன் " போன்ற வார்த்தைகளை விட அதிகம் தேடப்பட்டுள்ளது.  கடந்த புதன்கிழமையன்று கூகுள் அதன் இணையதள பக்கத்தில் வெளியிட்டிருந்த அறிவிப்பில், இந்த வருடாந்திர தேடுதல் ஆய்வானது மக்களின் ஆர்வத்தை தூண்டும் தருணங்கள், நபர்கள் மற்றும் ட்ரெண்டிங்கில் உள்ளவை போன்றவற்றை ஆராய்கிறது.  ஒவ்வொரு நாளும் ஐந்தெழுத்து சொற்றொடர்களை கண்டறிய உதவும் கேமான 'Wordle' தான் உலகஅளவில் பிரபலமான தேடலாக உள்ளது என்று கூகுள் தெரிவித்துள்ளது.

wordle

'Wordle' என்பது ஒரு பிரபலமான ஆன்லைன் கேம், இந்த கேமின் செயல்முறை என்னவென்றால் இதனை திறந்ததும் ஐந்து எழுத்து வார்த்தையை யோசிக்க தினசரி ஆறு வாய்ப்புகள் வழங்கப்படும்.  சில சமயம் விடையை கண்டறிவது மிகவும் சிக்கலாக இருக்கும், இதில் தனிநபர்கள் குறிப்புகள், ஆலோசனைகள் போன்ற  விஷயங்கள் நிரம்பியிருக்கும்.  இந்த பிரபலமான கேம் ஆனது ரெட்டிட்டின் முன்னாள் ஊழியர் ப்ரூக்ளின் என்பவரால் உருவாக்கப்பட்டது.  பின்னர் பிப்ரவரி 2022 வணிகத்தை அதிகரிக்க இந்த 'Wordle' பயன்பாட்டை நியூயார்க் டைம்ஸ் வாங்கியது.  அதன்பிறகு கடந்த ஜூலை மாதம் ஹாஸ்ப்ரோவுடன் இணைந்து 'Wordle'-ஐ போர்டு கேமாக மாற்றியமைத்தது.

மேலும் படிக்க | குறைந்த பட்ஜெட்டில் தாய்லாந்துக்கு போகணுமா? ஐஆர்சிடிசி செம்ம ஆஃபர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News