5 லட்சம் வரையிலான gold voucher வெல்ல வாய்ப்பு: TATA Motors-ன் அற்புத offer

நாட்டின் முன்னணி வணிக வாகன தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டார்ஸ் 2020 டிசம்பர் 31 வரையிலான ஒரு சிறப்பு சலுகையை கொண்டு வந்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 12, 2020, 05:34 PM IST
  • டாடா மோட்டார்ஸின் சலுகையில், ரூ .5 லட்சம் வரையிலான தங்க வவுச்சரை வெல்லும் வாய்ப்பு கிடைக்கும்.
  • இந்த சலுகையின் கீழ், நீங்கள் Tata Ace Gold BS6-ஐ வாங்கலாம்.
  • உங்கள் வணிகத்தை முன்னேற்றுவதில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
5 லட்சம் வரையிலான gold voucher வெல்ல வாய்ப்பு: TATA Motors-ன் அற்புத offer title=

‘இந்தியாவின் இரண்டாவது தீபாவளி’ சலுகை: 5 லட்சம் ரூபாய் வரை தங்க வவுச்சரைப் பெற்றால் எப்படி இருக்கும்? நன்றாகத் தான் இருக்கும்!! தங்கத்தை யார்தான் வேண்டாம் என்பார்கள்? சிலருக்கு தங்க நகைகள் அணிவதில் ஆர்வம் இருக்கலாம். சிலர் அதை எதிர்காலத்திற்கான சேமிப்பாக கருதுகிறார்கள்.

தங்க வவுசரைப் பெறுவதற்கான உங்கள் கனவு நிஜமாகப் போகிறது. அதிக தொகை கொண்ட தங்க வவுசரை வெல்வதற்கான ஒரு அற்புதமான வாய்ப்பு உங்களிடம் உள்ளது. ஆம், டாடா மோட்டார்ஸ் (TATA Motors) இந்த சிறந்த வாய்ப்பை உங்களுக்கு வழங்குகிறது.

நாட்டின் முன்னணி வணிக வாகன தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டார்ஸ் 2020 டிசம்பர் 31 வரையிலான ஒரு சிறப்பு சலுகையை கொண்டு வந்துள்ளது. இதில், தங்க வவுச்சருடன், நீங்கள் 2500 ரூபாய் எரிபொருள் கூப்பனையும், பல பரிசுகளுக்கான ஸ்க்ரேட்ச் கூப்பன்களையும் வெல்லலாம்.

இந்த சிறப்பு சலுகையின் விவரங்கள்

டாடா மோட்டார்ஸின் இந்த சலுகையில், டாடா எஸ்சிவி அல்லது பிக்கப் வேனை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ .5 லட்சம் வரையிலான தங்க வவுச்சரை வெல்லும் வாய்ப்பு கிடைக்கும். டாடா மோட்டார்ஸ் இந்த சலுகையை ‘இந்தியாவின் இரண்டாவது தீபாவளி’ என்று பெயரிட்டுள்ளது. வாடிகையாளர்கள் இதில் மிக்சி, கிரைண்டர், எல்இடி டிவி, வாஷிங் மெஷின் மற்றும் மொபைல் போன் ஆகியவற்றையும் பரிசாக வெல்லலாம்.

இதை நினைவில் கொள்ளுங்கள்

இந்த சலுகை தமிழ்நாடு (Tamil Nadu) தவிர நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் செல்லுபடியாகும். டாடா மோட்டார்ஸ் ஊழியர்கள் அல்லது அவர்களது குடும்ப உறுப்பினர்கள் இதில் தகுதி பெற மாட்டார்கள். இந்த சலுகைகள் டாடா ஏசி, இன்ட்ரா மற்றும் யோதா மாடல்களில் பொருந்தும். இந்த சலுகை 2020 டிசம்பர் 31 வரை மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையில், தகுதியான வாடிக்கையாளர்கள் பான் கார்டு (PAN Card), ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை அல்லது ஓட்டுநர் உரிமம் மற்றும் பிற ஆவணங்களின் சுய சான்றளிக்கப்பட்ட நகலை வழங்க வேண்டும்.

ALSO READ: Good news: ஏராளமான வேலை வாய்ப்புடன் தமிழகத்தில் வரவுள்ளது Tata-வின் mobile parts plant

டாடா ஏஸ் கோல்ட் பிஎஸ் 6

இந்த சலுகையின் கீழ், நீங்கள் Tata Ace Gold BS6-ஐ வாங்கலாம். இதன் விலை 4.25 லட்சம் ரூபாயிலிருந்து தொடங்குகிறது. இது பல சிறப்பம்சங்களைக் கொண்ட டாடா பிராடெக்டாகும்.

இதன் பராமரிப்பு செலவும் குறைவாக உள்ளது. நீங்கள் மறுவிற்பனையிலும் நல்ல தொகை கிடக்கும். உங்கள் வணிகத்தை முன்னேற்றுவதில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த சலுகையின் கூடுதல் தகவலுக்கு, கட்டணமில்லா எண் 1800 20 97979 ஐ தொடர்பு கொள்ளலாம்.

ALSO READ: விரைவில் வருகிறது Ola-வின் Electric Scooter: இனி குறுகிய தெருக்களும் Ola வசம்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News