ரயில் பயணிகளுக்கு இனி போர்வைகள் வழங்கப்படுமா? ரயில்வே அமைச்சகம் பதில்!

கொரோனா தொற்றிற்கு முன்னர் இருந்ததைப் போலவே, 100 சதவீதம் சேவையை ரயில் பயணிகளுக்கு வழங்க இந்திய ரயில்வே முயற்சி செய்து வருகிறது.  

Written by - RK Spark | Last Updated : Mar 26, 2022, 01:16 PM IST
  • கொரோனா காரணமாக பயணிகளுக்கு போர்வைகள் நிறுத்தம்.
  • மீண்டும் வழங்குவது குறித்து அமைச்சகம் யோசனை.
ரயில் பயணிகளுக்கு இனி போர்வைகள் வழங்கப்படுமா? ரயில்வே அமைச்சகம் பதில்! title=

லினன் துணிகள் மீதான கட்டுப்பாடுகளை திரும்பப் பெற்ற போதிலும், இந்திய ரயில்வே துறை பயணிகளுக்கு லினன் துணிகளை வழங்கவில்லை என்று சில செய்திகள் வெளியானது.  இது குறித்து ரயில்வே அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது, ரயில் பயணிகளுக்கு போர்வைகள், படுக்கை விரிப்புகள் போன்ற லினன் துணிகளை மீண்டும் வழங்குவது குறித்து தேசிய டிரான்ஸ்போர்ட்டர் அறிவித்த தேதியிலிருந்து லினன் துணிகள் (போர்வைகள், படுக்கை விரிப்புகள் போன்றவை) மீண்டும் விநியோகம் செய்ய ஆரம்பித்துள்ளது என்று ரயில்வே அமைச்சகம் கூறியது. 

மேலும் படிக்க | ஸ்மார்ட்ஃபோன் மூலம் இலவசமாக ரயிலை கண்காணிப்பது எப்படி?

மேலும் ரயில்வே அமைச்சகத்தின் கூற்றுப்படி, லினன் துணியின் சிறந்த தரத்தை உறுதி செய்யும் நோக்கில் இவற்றை வழங்குவது படிப்படியாக செய்யப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்றுநோய் தாக்கத்தால் பல தரப்பும் முடங்கியது, இதனால் அதிகளவில் இருந்த பழைய கையிருப்புகளை பயன்படுத்த முடியாததால், ரயில்வே பயணிகளுக்காக தேவையான அளவு புதிய லினன் துணிகளை கொள்முதல் செய்யப்போவதாக ரயில்வே அமைச்சகம் கூறியுள்ளது. 

railway

கொரோனா தொற்றிற்கு முன்னர் இருந்ததைப் போலவே, 100 சதவீதம் சேவையை ரயில் பயணிகளுக்கு வழங்க இந்திய ரயில்வே முயற்சி செய்து வருகிறது.  அதனையடுத்து இந்த மாத தொடக்கத்தில், ரயில்வே அமைச்சகம், ரயில் பெட்டிகளுக்குள் லினன் படுக்கை விரிப்புகள், போர்வைகள் மற்றும் கர்டெய்ன்ஸ்களை பயணிகளுக்கு வழங்கவுள்ளது.  கொரோனா தொற்று பரவுவதைத் தடுக்கும் பொருட்டு, முன்னாள் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் அனைத்து இந்திய ரயில்வே ரயில்களின் ஏசி பெட்டிகளிலும் போர்வைகள், படுக்கை விரிப்புகள் மற்றும் கர்டெய்ன்ஸ்களை வழங்குவதைத் திரும்பப் பெற முடிவு செய்தார். 

railway

தேசிய போக்குவரத்துக் கழகமானது ரயில் பயணிகளின் தேவைக்கேற்ப போர்வைகள் வழங்க ஏற்பாடு செய்தது.  இதனையடுத்து ரயில் பயணிகள் அவர்களின் நலன் கருதி ரயிலில் நீண்ட தூரம் பயணம் செய்யும்போது அவர்களின் சொந்த போர்வைகளையே பயன்படுத்துமாறு ரயில்வே அதிகாரிகள் அறிவுறுத்தினர்.  இருப்பினும் சில பயணிகளின் அவசர தேவைக்காக கூடுதலாக சில போர்வைகள் சுத்தம் செய்து வைக்கப்பட்டிருந்தது.

மேலும் படிக்க | Indian Railways: டிக்கெட் முன்பதிவு விதிகளில் மாற்றம், இதை செய்தால் அதிக நன்மைகள் கிடைக்கும்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News