தமிழகத்தில் கோடை வெயில் கடுமையாக கொளுத்தி வரும் நிலையில், தமிழகத்தின் 13 மாவட்டங்களில் வழக்கத்தை விட 2-4 டிகிரி செல்சியஸ் வரை வெயில் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இயல்பை விட வெப்பம் அதிகமாக இருந்து வருகிறது. இதனால் தேர்தல் பிரசாரம் கூட காலை மற்றும் மாலை வேலைகளில் வைத்துக்கொள்ளுமாறு வானிலை ஆய்வு மையம் அறிவிறுத்தி உள்ளது.
குறிப்பாக அதிகபட்ச வெப்பநிலை திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், திருப்பூர், திண்டுக்கல் மற்றும் மதுரை போன்ற மாவட்டங்கள் இருக்கும் என எச்சரித்து உள்ளது. மேலும் அடுத்த 2 நாட்களுக்கு வறண்ட வானிலையே காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்திற்கு காலையில் வானிலை ஓரளவு மேகமூட்டமாகவும் தெளிவானதாகவும் இருக்கும். வெப்பநிலை அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும், குறைந்தபட்ச 28 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும் கூறப்பட்டு உள்ளது.