நாளை வைகுண்ட ஏகாதசி: முழு விவரம் உள்ளே!!

பெருமாளுக்கு உகந்த பண்டிகையான வைகுண்ட ஏகாதசி நாளை. இத்தினத்தில் அனைத்து பெருமாள் ஆலயங்களிலும் சொர்க்க வாசல் எனப்படும் பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. 

Last Updated : Dec 28, 2017, 09:17 AM IST
நாளை வைகுண்ட ஏகாதசி: முழு விவரம் உள்ளே!! title=

பெருமாளுக்கு உகந்த பண்டிகையான வைகுண்ட ஏகாதசி நாளை. இத்தினத்தில் அனைத்து பெருமாள் ஆலயங்களிலும் சொர்க்க வாசல் எனப்படும் பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. 

சொர்க்கவாசல் திறக்கப்படுவதையொட்டி வைகுண்ட ஏகாதசி மற்றும் மறுநாள் துவாதசியன்று திரளான பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க திருமலைக்கு வருவார்கள்.

வைகுண்ட ஏகாதசி: திருப்பதியில் தரிசனம், நேரங்கள் மாற்றம்!!

பிரசித்தி பெற்ற ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் சிறப்பு எற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திருப்பதியில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அதிகாலை முதல் பக்தர்கள் சொர்க்க வாசல் வழியாக ஏழு மலையானை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள். 

ஏகாதசி தரிசனத்துக்காக வரும் இலவச தரிசன பக்தர்கள் இன்று காலை திருமலையில் உள்ள வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் தங்க வைக்கப்படுகின்றனர்.

> அரசியல் கட்சிகளைச் சேர்ந்த விஐபிக்கு ஒரு டிக்கெட் வீதம் வழங்கி அதில் 6 பேர் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். 
> அரசு அதிகாரிகளைச் சேர்ந்த விஐபிக்கு ஒரு டிக்கெட் வீதம் வழங்கி அதில் 4 பேர் தரிசனத்துக்கு அனுமதிப்படுகின்றனர். 

மேலும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று முதல் ஜனவரி 1-ம் தேதி வரை அனைத்து ஆர்ஜித சேவைகள், விஐபி பிரேக் தரிசனம், சிபாரிசு கடிதங்கள் ஆகியவை ரத்து செய்யப்படுகிறது. இதேபோல் நடைபாதை பக்தர்களுக்கு வழங்கப்படும் டோக்கன்களும் ரத்து செய்யப்படுகிறது. 

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 29 வைகுண்ட ஏகாதசி விழா நடக்கிறது. அதிகாலை நேரத்தில் சொர்க்கவாசல் திறக்கப்படும். சொர்க்கவாசல் திறந்ததும் முதலில் விஐபி தரிசனத்தில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். பின்னர் இலவச தரிசனத்தில் செல்லும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். 

வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை:-

ஏகாதசி அன்று விரதம் மேற்கொள்வதை அனைத்து சாஸ்திரங்களும் வலியுறுத்துகின்றன. அனைத்து ஏகாதசிகளிலும் விரதம் இருந்து வழிபடுவோர் பிறவி துயர் நீங்கி வைகுண்ட பதவியை அடைவர் என்பது நம்பிக்கை. வருடம் முழுவதும் ஏகாதசி விரதத்தை கடைபிடிக்க இயலாதவர்கள், மார்கழி மாதம் வரும் வைகுண்ட ஏகாதசியில் மட்டுமாவது விரதம் இருப்பது சிறப்பான பலனை தரும். 

* ஏகாதசி விரதத்தை மேற்கொள்ள இருப்பவர்கள் ஏகாதசிக்கு முதல் நாளான தசமியன்று பகலில் ஒரு வேளை மட்டுமே உணவு சாப்பிடவேண்டும்.

* ஏகாதசி அன்று அதிகாலையிலேயே கண்விழித்து குளித்து விட்டு, பூஜைசெய்து விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.

* ஏகாதசி திதி_முழுவதும் முடிந்தவரை பூரண உபவாசம் (பட்டினியாக) இருக்கவேண்டும். குளிர்ந்த நீரை குடிக்கலாம் . ஏழு_முறை துளசி இலையை சாப்பிடலாம். 

* இரவு முழுவதும் கண்விழித்து புராண நூல்களை படிப்பதும்,விஷ்ணு சகஸ்ரநாமம், விஷ்ணு பாடல்கள் மற்றும் ரங்கநாதர் ஸ்துதி முதலியவற்றை ஓதுவதுமாக பொழுதுபோக்க வேண்டும். 

Trending News