பொடுகு தொல்லையில் இருந்து தப்பிக்க வேண்டுமா? ‘இந்த’ 5 விஷயங்களை செய்யுங்கள்!

Hair Care Tips In Tamil: குளிர்காலம் ஆரம்பித்துவிட்டது. இந்த காலத்தில் கண்டிப்பாக அனைவருக்கும் அதிகளவில் பொடுகு பிரச்சனை ஏற்படும். இதிலிருந்து தப்பிப்பது எப்படி?  

Written by - Yuvashree | Last Updated : Dec 17, 2023, 06:25 PM IST
  • குளிர்காலத்தில் தவிர்க்க முடியாத பிரச்சனை, பொடுகு பிரச்சனை.
  • இதை சில ஆயுர்வேத முறைகளை வைத்து தவிர்க்கலாம்.
  • அதற்கான சில டிப்ஸ் இதோ!
பொடுகு தொல்லையில் இருந்து தப்பிக்க வேண்டுமா? ‘இந்த’ 5 விஷயங்களை செய்யுங்கள்! title=

குளிர்காலம் வந்தால் குளிர் வருகிறதோ இல்லையோ, அதனுடன் சேர்த்து வசதியாக பொடுகு பிரச்சனையும் சேர்ந்து வந்துவிடும். இந்த சமயத்தில் நம்மால் அடிக்கடி தலைக்கு குளிக்கவும் முடியாது. குளிர்காலத்தில் வெப்பநிலை மாறுவதால், உச்சந்தலையில் பலவிதமான பிரச்சனைகள் ஏற்படும். இதனால், அரிப்பு, பொடுகு போன்ற பிரச்சனைகளும் வந்துவிடும். இதிலிருந்து தப்பிக்க சில ஆயுர்வேத முறைகள் இருக்கின்றன. அவை என்னென்ன தெரியுமா?

1.சூடான எண்ணெய் மசாஜ்:

ஆயுர்வேதம் எண்ணெய் மசாஜ்களை மருத்துவர்கள் பலர் பரிந்துரைப்பதுண்டு.  குறிப்பாக குளிர்காலத்தில், உச்சந்தலையில் முடியை வளர, தேயிலை மரம் அல்லது வேம்பு போன்ற அத்தியாவசிய எண்ணெய்களின் சில துளிகளுடன் சூடான தேங்காய் எண்ணெய், எள் எண்ணெய் அல்லது இரண்டையும் கலந்து பயன்படுத்தவும். உச்சந்தலையில் மெதுவாக மசாஜ் செய்யவும். இது, உங்களுக்க் எண்ணெயின் செழுமையை ஊடுருவி ஹைட்ரேட் செய்ய அனுமதிக்கிறது. இந்த மசாஜ், உங்கள் தலையில்  இரத்த ஓட்டத்தையும் மேம்படுத்துகிறது.

2.வேம்பு மற்றும் நெல்லிக்காய் ஹேர் பேக்:

வேப்பிலை மற்றும் நெல்லிக்காயில் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் உள்ளன. அவை பொடுகை எதிர்த்துப் போராடுவதற்கு ஏற்றதாக அமைகின்றன. காயவைத்து தூள் செய்யப்பட்ட வேப்பிலை மற்றும் நெல்லிக்காயைப் பயன்படுத்தி ஒரு பேஸ்ட்டை உருவாக்கவும். அதை தண்ணீர் அல்லது கற்றாழை ஜெல்லுடன் கலக்கவும். இந்த ஆயுர்வேத ஹேர் பேக்கை உங்கள் உச்சந்தலையில் தடவி, 30 நிமிடங்களுக்கு பின் கழுவவும். இதனால் பொடுகு வராமல் தடுக்கலாம். இதை அடிக்கடி செய்து வந்தால் உச்சந்தலையில் முடி வளரும் இடத்திற்கும் ஊட்டமளிக்கும். 

மேலும் படிக்க | உடல் எடையை வேகமாக குறைக்க வேண்டுமா? ‘இதை’ சாப்பிடுங்கள் போதும்!

3.வெந்தய பேஸ்ட்:

வெந்தையத்தில் பல அற்புதமான பண்புகள் நிறைந்திருக்கின்றன. வெந்தையத்தை ஒரு இரவு ஊற வைத்து அதை பேஸ்டாக நன்றாக அரைத்துக்கொள்ளுங்கள். பின்பு, உங்கள் உச்சந்தலையில் அதை தடவவும். இந்த பேஸ்ட், உங்கள் உச்சந்தலை காயமல் இருப்பதற்கும் அறிப்பு வராமல் தடுப்பதற்கும் உதவும். இதனால் பொடுகு வராமல் தப்பிக்கலாம்.

4.கற்றாழை சாறு:

கற்றாழையில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இதை, இயற்கையான மாய்ஸ்சரைசர் என்றும் குறிப்பிடுவர். புதிதாக வெட்டிய கற்றாழையில் இருந்து எடுக்கப்பட்ட சாற்றினை நேரடியாக உங்கள் உச்சந்தலையில் தடவி, 20-30 நிமிடங்கள் கழித்து கழுவவும். இதன் குளிர்ச்சி மற்றும் ஈரப்பதமூட்டும் விளைவுகள் உச்சந்தலையை செழுமையாக வைக்கவும் பொடுகை குறைக்கவும் உதவுகிறது.

5.மூலிகை ஹேர்-பேக்:

ரோஸ்மேரி, தைம் இலை போன்ற மூலிகைகளை தண்ணீரில் கொதிக்க வைக்க வேண்டும். இது ஒரு இயற்கை ஆயுர்வேத மூலிகை பேக் ஆகும். பின்னர், அதை குளிர்வித்து அந்த திரவத்தை வடிகட்டி, ஷாம்பு போட்டு தலையை அலசிய  பிறகு இறுதியில் உங்களது தலையை இந்த தண்ணீரை வைத்து அலச வேண்டும். இந்த மூலிகைகள் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் மற்றும் உச்சந்தலையின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது.

மேலும் படிக்க | மலச்சிக்கலை தீர்க்க வேண்டுமா? ‘இந்த’ 5 பழங்களை சாப்பிடுங்கள்!

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News