Indian Railway Ticket Booking: பல சமயங்களில் அவசர அவசரமாக செல்ல வேண்டிய நிலை ஏற்படும் சூழ்நிலையில் கன்பார்ம் ரயில் டிக்கெட்டை உடனடியாக முன்பதிவு செய்வது மிகவும் கடினம். அதுபோன்ற சூழ்நிலையில் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகுகிறார்கள். பயணிகளின் இந்த பிரச்சனைகளை மனதில் கொண்டு, இந்திய ரயில்வே அதன் தீர்வுக்காக ஒரு சிறப்பு செயலியை உருவாக்கியுள்ளது. அதாவது இந்திய ரயில்வேயால் 'கன்ஃபர்ம் தட்கல்' என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. தட்கல் டிக்கெட் பெற முடியாத அல்லது திடீரென பயணம் செய்ய வேண்டிய பயணிகளுக்கு இந்த ஆப் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த செயலி மூலம் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டுகளை மிக எளிதாக பெறலாம். இந்த செயலி மூலம் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யவும், உங்களுக்கான இருக்கை கிடைப்பதை உறுதி செய்யவும், ரயில் அட்டவணையை தெரிந்துக்கொள்ளவும் செய்யலாம். இந்த செயலியை பயன்படுத்தி நீங்கள் எந்த நேரத்திலும் இ-டிக்கெட்டுக்கான TDR ஐப் பதிவு செய்யலாம் அல்லது டிக்கெட்டை ரத்து செய்யலாம்.
ConfirmTicket மொபைல் செயலின் நன்மைகள்
ConfirmTicket மொபைல் ஆப் மூலம், தட்கல் ஒதுக்கீட்டின் கீழ் கிடைக்கும் இடங்களைப் பற்றிய முழுமையான தகவலைப் பெறலாம். இந்த செயலில் நீங்கள் பயணிக்க இடத்திற்கு செல்ல வெவ்வேறு ரயில் பெயர்களை நிரப்ப வேண்டிய அவசியமில்லை. அதற்குப் பதிலாக, குறிப்பிட்ட வழித்தடத்தில் இயக்கப்படும் வெவ்வேறு ரயில்களில் உள்ள தட்கல் இருக்கைகளின் அனைத்து விவரங்களையும் பற்றிய தகவல்களை இந்த செயலி மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
இந்த மொபைல் செயலி மூலம் உங்களுக்கான ரயில் இருக்கைகள் கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது. மேலும் ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியும் கிடைக்கும். ஆனால், பயணிகள் ரயில் டிக்கெட்டை ரத்து செய்தால், அவர்களுக்கு பணம் திரும்ப கிடைக்காது என்பதை கவனத்தில் கொள்ளவும்.
மேலும் படிக்க: Indian Railways: ஜூலை 20 வரை இந்த ரயில்களை ரத்து! அதன் முழு விவரம்
இது தவிர, ரயில் எண், பிஎன்ஆர், ரயில் அட்டவணை போன்ற தகவல்கள் ConfirmTicket மொபைல் செயலியில் கிடைக்கும். நீங்களும் இந்த மொபைல் செயலி மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய விரும்பினால், ஒரு சிட்டிகையில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும்.
ConfirmTicket மொபைல் செயலி மூலம் டிக்கெட் எவ்வாறு புக் செய்வது
1. முதலில் கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோருக்குச் சென்று கன்ஃபர்ம் டிக்கெட் ஆப்-ஐ பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
2. பதிவிறக்கம் செய்த பிறகு, செயலியை ஓபன் செய்யவும்.
3. இந்த செயலில் நீங்கள் பயணம் செய்ய விரும்பும் இடத்தைத் தேர்வு செய்யுங்கள்
4. அதன் பிறகு, பயணம் செய்யும் நாள், உங்களுக்கான வகுப்பைத் தேர்ந்தெடுக்கவும்.
5. இப்போது Search பட்டனை தட்டவும்.
6. நீங்கள் பயணம் செய்ய விரும்பும் வழித்தடத்தில் இயங்கும் அனைத்து ரயில்களின் தகவல்களும் கிடைக்கும்.
7. இப்பொழுது உங்களுக்கு ஏற்ற ரயில் மற்றும் இருக்கை, வகுப்பை தேர்வு செய்யவும்.
8. டிக்கெட்டை முன்பதிவு செய்ய ஆன்லைனில் பணம் செலுத்துங்கள்.
9. இறுதியாக உங்களுக்கு முன்பதிவு செய்யப்பட ரயில் டிக்கெட் குறித்த விவரம் தொலைபேசி செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலம் உறுதி செய்யப்படும்.
10. இந்த சேவை தட்கல் டிக்கெட் முன்பதிவு காலை 10 மணி முதல் திறக்கப்படும்
மேலும் படிக்க: ரயில் டிக்கெட்டுகளில் லோயர் பெர்த் வேண்டுமா? IRCTC வெளியிட்ட புதிய விதி!
டிக்கெட் முன்பதிவு செய்யும் போது நேரம் வீணாகாது
உங்கள் எல்லா விவரங்களையும் முன்கூட்டியே பதிவு செய்வதற்கான முதன்மை பட்டியலும் இந்த செயலில் உள்ளது. உங்கள் முன்பதிவை உறுதிப்படுத்தும் முன் உங்களின் அனைத்து பயணத் தகவல்களையும் சேமித்து வைத்துக்கொள்ளலாம். எனவே முன்பதிவு செய்யும் போது உங்கள் நேரம் வீணாகாது. இந்த செயலியை கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் IRCTC இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்.
இந்த செயலி மூலம் முன்பதிவு செய்யப்பட்ட தட்கல் டிக்கெட்டுகள் உறுதிசெய்யப்படலாம் அல்லது காத்திருப்போர் பட்டியலில் இருக்கலாம் என்பதையும் பயணிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க: ரயில்வே பயணிகளுக்கு மிகப்பெரிய செய்தி, IRCTC புதிய விதி அமல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR