UPI மூலம் பணம் செலுத்தும் போது இந்த விஷயங்களை மறந்துடாதீங்க!

ஏடிஎம்-ல் பணமெடுக்க நான்கு இலக்க ரகசிய எண் முக்கிமானதோ அப்படித்தான் யூபிஐ மற்றும் நெட் பேங்கிங்கின் பின் நம்பர்களுக்கும் முக்கியமானது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.  

Written by - RK Spark | Last Updated : Sep 18, 2022, 06:26 AM IST
  • பலரும் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவத்தை எளிதான ஒன்றாக கருதுகின்றனர்.
  • டிஜிட்டல் பரிவர்த்தனையில் பல மோசடிகள் நடக்கிறது.
  • ரகசிய இலக்க எண்களை யாருடனும் பார்ந்துகொள்ள கூடாது.
UPI மூலம் பணம் செலுத்தும் போது இந்த விஷயங்களை மறந்துடாதீங்க!  title=

இந்த நவீன காலகட்டத்தில் ஷாப்பிங் செய்யவோ அல்லது ஏதேனும் கட்டணங்களை செலுத்தவோ பைகளில் பணத்தை எடுத்து சென்று அதனை எண்ணி கொடுப்பதை விட டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவது அல்லது ஆன்லைன் மூலம் பணம் செலுத்துவது எளிதான ஒன்றாக மாறிவிட்டது.  மக்கள் பலரும் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவத்தை எளிதான ஒன்றாக கருதுகின்றனர், இதன்மூலம் இருந்த இடத்திலிருந்து கொண்டே எங்கு வேண்டுமானாலும் பணத்தை அனுப்பவோ பெறவோ முடிகிறது.  வங்கிகள் வழங்கும் நெட் பேங்கிங் மற்றும் யூபிஐ போன்றவற்றின் மூலம் விரைவாகவும், எளிதாகவும் பணம் அனுப்ப முடிகிறது. அதேசமயம் இதில் எவ்வளவு நன்மைகள் இருக்கிறதோ அதேயளவு தீமைகளும் இருக்கிறது என்பதை நாம் மனதில் கொள்ளவேண்டும்.  டிஜிட்டல் பரிவர்த்தனையில் பல மோசடிகள் நடக்கிறது, டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும்போது நாம் கவனத்தில் கொள்ளவேண்டிய சில விஷயங்களை பற்றி இங்கே பார்ப்போம்.

உங்களது யூபிஐ மற்றும் நெட் பேங்கிங்கின் ரகசிய இலக்க எண்களை யாருடனும் பார்ந்துகொள்ள கூடாது, எப்படி ஏடிஎம்-ல் பணமெடுக்க நான்கு இலக்க ரகசிய எண் முக்கிமானதோ அப்படித்தான் யூபிஐ மற்றும் நெட் பேங்கிங்கின் பின் நம்பர்களுக்கும் முக்கியமானது.  வங்கியிலிருந்து பேசுவதாக கூறி யாரேனும் உங்களது ஓடிபி, பாஸ்வேர்டு, கார்டு அல்லது வங்கி விவரங்களை கேட்டால் அந்த அழைப்புகளை நீங்கள் தவிர்க்க வேண்டும்.  யூபிஐ மற்றும் நெட் பேங்கிங் மூலமாக நீங்கள் பணம் அனுப்பவோ அல்லது பெறவோ முடியும், நீங்கள் ஒருவருக்கு பணத்தை அனுப்பும்போது அவரது யூபிஐ ஐடி மற்றும் மொபைல் எண்ணை நன்றாக சரிபார்த்து விட்டு அனுப்பவேண்டும்.  அப்படி தவறாக அனுப்பிவிட்டால் அந்த பணம் உங்களுக்கு திரும்ப கிடைப்பதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு, அதனால் ஒருதடவைக்கு இரண்டு தடவைகள் நன்கு ஆராய்ந்த பிறகே நீங்கள் பணத்தை அனுப்பவேண்டும்.

மேலும் படிக்க | 7th Pay Commission: டிஏ உயர்வுக்கு முன்னர் ஊழியர்களுக்கு அரசு கொடுத்த நல்ல செய்தி 

மேலும் மிக முக்கியமான ஒன்று என்னவென்றால் உங்களுக்கு மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது எஸ்எம்எஸ் மூலமாகவோ வரும் தேவையற்ற லிங்குகளை க்ளிக் செய்வது தவறான ஒன்று.  இதன்மூலம் அதிகளவில் மோசடிகள் நடக்கின்றன என்பதை நினைவில் கொள்ளவேண்டும், அப்படிப்பட்ட லிங்குகளை நீங்கள் க்ளிக் செய்தால் மோசடி கும்பல் உங்கள் போனை ஹேக் செய்து உங்கள் ரகசியங்கள், வங்கி கணக்குகளில் உள்ள பணத்தை கொள்ளையடித்து விடுவார்கள்.  பெரும்பாலும் உங்கள் மொபைலை நீங்கள் லாக் செய்து வைத்திருப்பது நல்லது, அதிலும் அறிமுகமல்லாத நபர்கள் இருக்குமிடத்தில் இருக்கும்பொழுது கண்டிப்பாக உங்கள் மொபைலை லாக் செய்தே வைத்திருங்கள்.  ஏனெனில் மொபைலில் நீங்கள் வைத்திருக்கும் பேமெண்ட் செயலிகள், ரகசிய தகவல்களை மோசடிக்காரர்கள் பயன்படுத்திடக்கூடும்.  மேலும் இதுவரை உங்களுக்கு அறிமுகமில்லாத அல்லது பிரபலமில்லாத இணையதள பக்கங்களில் இருந்து ஷாப்பிங் செய்வதை நிறுத்த வேண்டும்.  அப்படிப்பட்ட இணையதள பக்கங்களில் நீங்கள் ஷாப்பிங் செய்து டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும்பொழுது உங்களது விவரங்கள் திருடப்படக்கூடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு காத்திருக்கும் நவராத்திரி பரிசு, டிஎ ஹைக் அப்டேட் இதோ!!  

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News