ஃப்ரிட்ஜில் மறந்தும் இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள்!

சமீப காலமாக ஃப்ரிட்ஜ் வெடிக்கும் சம்பவங்கள் சில நடைபெற்று வருகிறது, நாம் சில வழிமுறைகளை கடைபிடித்து ஃபிரிட்ஜை பராமரிப்பதன் மூலம் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் பாதுகாக்கலாம்.  

Written by - RK Spark | Last Updated : Nov 8, 2022, 10:20 AM IST
  • சமீபத்தில் பிரிட்ஜ் வெடிக்கும் சம்பவங்கள் நடைபெறுகிறது.
  • சரியான பராமரிப்பு இல்லாததே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.
  • சில தவறுகள் செய்வதை நாம் தவிர்க்க வேண்டும்.
ஃப்ரிட்ஜில் மறந்தும் இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள்!  title=

சமீப காலமாக ஃப்ரிட்ஜ் வெடிக்கும் சம்பவங்கள் சில நடைபெற்று வருகிறது, நாம் சில வழிமுறைகளை கடைபிடித்து ஃபிரிட்ஜை பராமரிப்பதன் மூலம் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் பாதுகாக்கலாம். ஃப்ரிட்ஜ் மூலம் எந்த ஆபத்தும் ஏற்படாமலிருக்க நீங்கள் தவறாமல் செய்யவேண்டியவை:

1) சூடான உணவு பொருளை கண்ணாடி அலமாரிகளில் வைத்தால் அலமாரி உடைந்துவிடும், அதுபோல ப்ரிட்ஜில் சூடான பொருட்களை வைக்கக்கூடாது.  சூடான பொருள் பிரிட்ஜின் வெப்பநிலையை அதிகரிக்கும், இது கம்ப்ரசரின் மீது ஒரு சுமையை ஏற்படுத்தக்கூடும்.  அறை வெப்பநிலையில் உணவை அதிக நேரம் வைத்தால் அதில் பாக்டீரியா வளரும்.  எனவே 2 மணி நேரத்திற்கு மேல் குளிர்சாதன பெட்டிக்கு வெளியே உணவை வைக்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும், மேலும் அறையின் வெப்பநிலை 90 °F க்கு மேல் இருந்தால் 1 மணி நேரத்திற்கு மேல் உணவை வெளியில் வைக்கக் கூடாது.

மேலும் படிக்க | பான் கார்டு & பே ஸ்லிப் இல்லாமல் தனிநபர் கடன் பெறுவது எப்படி?

2) ஃப்ரீசர் மற்றும் ப்ரிட்ஜுக்கு இடையில் காற்றை சுழற்ற மற்றும் பிரிட்ஜின் குளிரூட்டும் செயல்பாடுகளுக்கு வென்ட்கள் முக்கியமானவை.  வென்ட்களை நீங்கள் அடைத்தால் ப்ரிட்ஜில் உறைதல் அல்லது அதிக வெப்பமடைதல் மற்றும் மோட்டாரில் கோளாறு போன்ற பல சிக்கல்கள் ஏற்படலாம்.

3) ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பிரிட்ஜின் அடிப்பகுதியில் அல்லது பின்புறத்தில் மென்மையான ப்ரஷ் போன்ற இணைப்புடன் அமைந்துள்ள கண்டன்சர் காயிலை சுத்தம் செய்ய வேண்டும்.  அதனை சுத்தம் செய்யவில்லை என்றால் அதில் தூசி, அழுக்கு மற்றும் வெப்பம் உருவாகலாம், இது இறுதியில் சாதனத்தை சேதப்படுத்திவிடும்.

4) பிரிட்ஜின் கைப்பிடிகள் உடைந்திருந்தாலோ அல்லது அது வளைந்து இருந்தாலோ அல்லது ப்ரிட்ஜ் கதவில் ஏதேனும் கோளாறு இருந்தாலோ குளிர்ந்த காற்று அதிலிருந்து வெளியேறக்கூடும்.  அதனால் இதுபோன்ற சிக்கல்களை உடனடியாக சரிசெய்துவிட வேண்டும்.

5) கதவு கேஸ்கட்கள் குளிர்ந்த காற்று வெளியேறுவதைத் தடுக்கும் வகையில் உள்ளன, அதனால் அவற்றில் தூசுகள் மற்றும் அழுக்குகள் எதுவும் படாமல் இருக்க அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும்.  அதேசமயம் மிக கடினமான பொருட்களை கொண்டு சுத்தம் செய்தால் கேஸ்கட்களை சேதமடைந்து குளிர்ந்த காற்று வெளியேறிவிடும்.

6) குளிர்சாதனப்பெட்டிக்கும் அதன் சுற்றுப்புறத்திற்கும் இடையில் எப்போதும் சிறிது இடைவெளி இருக்க வேண்டும், குறைந்தட்சம் 6 இன்ச் அளவில் இடைவெளி இருக்க வேண்டும்.  இடைவெளி இருந்தால் தான் அதிலிருந்து வரும் சூடான காற்று வெப்பமடைதலை ஏற்படுத்தாது.

மேலும் படிக்க | ஆதார் எண் இல்லாமலும் e-Aadhaar டவுன்லோட் செய்யலாம்: முழு செயல்முறை இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News