உங்கள் பாதங்களை பாதுகாக்க வந்துவிட்டது ‘Shoe Condom’...

நவநாகரீக ஆடைகள் என்று வந்துவிட்டால் அதிக் காலணிகளுக்கும் முக்கிய பங்கு ஒதுக்கப்படுவதுண்டு. தங்களுக்கு பிடித்தமாக வெளியாடை எதுவென்று சிலரை கேட்டால் தயங்காமல் காலணி அவர்கள் கூறுவதை நாம் கேட்க முடியும்.

Last Updated : May 23, 2019, 04:24 PM IST
உங்கள் பாதங்களை பாதுகாக்க வந்துவிட்டது ‘Shoe Condom’... title=

நவநாகரீக ஆடைகள் என்று வந்துவிட்டால் அதிக் காலணிகளுக்கும் முக்கிய பங்கு ஒதுக்கப்படுவதுண்டு. தங்களுக்கு பிடித்தமாக வெளியாடை எதுவென்று சிலரை கேட்டால் தயங்காமல் காலணி அவர்கள் கூறுவதை நாம் கேட்க முடியும்.

அவ்வாறான காலணிகளை பாதுகாப்பாக வைக்க ஏதேனும் வழி உள்ளதா நம்மிடம்?... அதுவும் தற்போது வெயில் காலம் வேறு., வெயில் காலம் என்றால் பண்டிகைகளுக்கும், விழாக்களுக்கும் பஞ்சமில்லை.

இந்த விழாக்களின் போது நாம் அணியும் ஆடைகளுக்கு இணையாக நம்மை அழகாக காட்டும் காலணிகளையும் நாம் பாதுகாப்பாக வைக்க வேண்டாமா?. அதற்காகவே தற்போது பிரபல ஆன்லைன் விற்பனை அங்காடி Firebox புதுவித தயாரிப்புடன் சந்தைக்கு வந்துள்ளது.

Shoe Condoms
PC - www.firebox.com

Shoe Condom என பெயரிடப்பட்டுள்ள இந்த பிளாஸ்டிக் உறை உங்களுடைய பாதம் மற்றும் காலணிகளை அழுக்கு, தூசு படாமல் பாதுகாத்து வைக்கின்றது. அடி தட்டு இல்லாமல் மெல்லிய ரப்பர் இழையில் செய்யப்பட்டுள்ளி இந்த உறை ஆணுறைக்கு இணையாக ஒப்பிடப்படுகிறது. 

பயணத்தின் போது கொண்டு செல்ல எளிதான வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த உறை £7.99-விற்கு (இந்திய மதிப்பில் 707.16 ரூபாய்) விற்கப்படுகிறது.

Trending News