சதாப்தி / இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு பதிலாக வந்தே பாரத்... ரயில்வேயின் முக்கிய அறிவிப்பு!

ரயில் அபயண நேரத்தை குறைக்க ரயில்வே எடுத்து வரும் முயற்சியில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்களில் பயணிப்பதால், பயணிகளின் பயண நேரம் வழக்கத்தை விட மிகக் குறைவாக உள்ளது.  

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 23, 2023, 07:35 PM IST
  • புதிய வந்தே பாரதத்தின் சோதனை பல வழித்தடங்களில் நிறைவடைந்துள்ளது.
  • சதாப்தி, ஜன் சதாப்தி மற்றும் இன்டர்சிட்டி ரயில்களுக்குப் பதிலாக வந்தே பாரத் ரயில்கள்.
  • குறைந்த நேரத்தில் பயணிகளை நீண்ட தூரம் பயணிக்க வைப்பதே ரயில்வேயின் நோக்கம்.
சதாப்தி / இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு பதிலாக வந்தே பாரத்... ரயில்வேயின் முக்கிய அறிவிப்பு! title=

ரயில்களில் சதாப்தி அல்லது இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்ஸில் பயணம்  செய்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை இந்திய அரயில்வே வெளியிட்டுள்ளது. இந்திய ரயில்வே சார்பில், பயணிகளின் வசதிக்காக தொடர்ந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறைந்த நேரத்தில் பயணிகளை நீண்ட தூரம் பயணிக்க வைப்பதே ரயில்வேயின் நோக்கம். மிக வேகமாக செல்லும் வந்தே பாரத் ரயில்கள் மூலம் பயண நேரங்கள் தொடர்ந்து குறைந்து வருகின்றன. இந்த ரயில்களில் பயணிப்பதால், பயணிகள் எடுக்கும் நேரம் வழக்கத்தை விட மிகக் குறைவு.

டெல்லி - டேராடூன் இடையில் வந்தே பாரத்

ரயில்வேயின் பல வழித்தடங்களில் வந்தே பாரத் ரயிலை தொடங்கிய பிறகு, இப்போது டெல்லியில் இருந்து டேராடூனுக்கு இடையில் இயக்க தயாராக உள்ளது. இதனுடன், பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படும் இன்டர்சிட்டி மற்றும் சதாப்தி எக்ஸ்பிரஸ்களுக்கு பதிலாக வந்தே பாரத் ரயில் சேவையை வழங்க ரயில்வே தயாராகி வருகிறது. இரண்டு ரயில்களும் வந்தே பாரத் ரயிலாக மாற்றப்பட்ட பிறகு, பயணிகளுக்கு பல விதமான அதிக நுட்பமான வசதிகள் கிடைப்பதுடன் பயணிக்க குறைந்த நேரமும் எடுக்கும். இந்த இரண்டு ரயில்களிலும் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணம் செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | மூத்த குடிமக்களுக்கான ஜாக்பாட் செய்தி, ரயில் கட்டணத்தில் தள்ளுபடி, முழு விவரம் இதோ

பயணம் முன்னெப்போதையும் விட மகிழ்ச்சியாக இருக்கும்

பயணிகளின் வசதிக்காக, குறிப்பிட்ட மூன்று ரயில்களுக்கும் பதிலாக வந்தே பாரத் ரயிலை, செமி அதிவேக ரயிலாக மாற்ற ரயில்வே தயாராகி வருகிறது. சதாப்தி, ஜன் சதாப்தி மற்றும் இன்டர்சிட்டிக்குப் பதிலாக வந்தே பாரத் ரயிலில் பயணிகள் பயணிக்கும்போது, ​​பயணம் முன்பை விட இனிமையாக மாறும். பிரதமர் மோடியின் அறிவிப்பின் பேரில் ரயில்வே துறை சார்பில் துரித கதியில் பணிகள் நடைபெற்று வருகின்றன. 2024 லோக்சபா தேர்தலுக்கு முன், நாட்டின் 75 நகரங்களை வந்தே பாரத் ரயிலுடன் இணைப்பது ரயில்வேயின் திட்டம். இப்போது புதிய வந்தே பாரத் டெல்லியில் இருந்து டேராடூனுக்கு இடையில் அறிமுகப்படுத்தப் பட உள்ளது.

புதிய வந்தே பாரதத்தின் சோதனை பல வழித்தடங்களில் நிறைவடைந்துள்ளது. வரும் காலங்களில்  சதாப்தி, ஜன் சதாப்தி மற்றும் இன்டர்சிட்டி ரயில்களுக்குப் பதிலாக வந்தே பாரத் ரயில்களை இயக்க இந்திய ரயில்வே தயாராகி வருவதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கடந்த காலத்தில் தெரிவித்திருந்தார். இதற்காக 27 வழித்தடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. முதல்கட்டமாக டெல்லி-லக்னோ, டெல்லி-அமிர்தசரஸ், பூரி-ஹவுரா உள்ளிட்ட 27 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என்று வைஷ்ணவ் தெரிவித்திருந்தார்.

மேலும் படிக்க | ரயில்வேயின் ‘இந்த’ வழித்தடத்தில் டிக்கெட்டே தேவையில்லை... TTR-க்கும் வேலையில்லை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News