Super tax saving: HDFCயின் இந்த திட்டத்தில் 25 ஆயிரம் ரூபாய் 16 லட்சமாகிவிட்டது!

நீண்ட காலத்திற்கு முதலீட்டாளர்களுக்கு பெரும் வருமானத்தை அளித்துள்ள திட்டங்கள் பற்றி தெரியுமா?

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Nov 5, 2021, 05:04 PM IST
  • 25 ஆயிரம் ரூபாய் முதலீடு; 20 ஆண்டுகளில்16 லட்சம்
  • நீண்டகால முதலீட்டு திட்டத்தின் சிறப்பு
  • வருமான வரி சேமிக்க உதவும் சேமிப்புத் திட்டம்
Super tax saving: HDFCயின் இந்த திட்டத்தில் 25 ஆயிரம் ரூபாய் 16 லட்சமாகிவிட்டது! title=

புதுடெல்லி: ஒருவர் எவ்வளவு சம்பாதிக்கிறார் என்பதை விட, எப்படி சேமிக்கிறார் என்பதே முக்கியமான விஷயம் என்று பொருளாதார நிபுணர்கள் சொல்கின்றனர். இது நிதர்சனமான உண்மை. பணத்தை சேமிப்பது அனைவரும் செய்வதுதான் என்றாலும், அதிக வருவாய் கிடைக்கும் வகையில் அதை முதலீடு செய்வது ஒரு கலை. அந்தக் கலையை கற்றிருந்தால், சாதாரணமாக சம்பாதிப்பவர்களும் கோடீஸ்வரராக முன்னேறலாம்.
 
மியூச்சுவல் ஃபண்டுகளின் ஈக்விட்டி லிங்க்டு சேவிங்ஸ் ஸ்கீம் (Equity Linked Savings Scheme (ELSS) வகைகளில் முதலீடு செய்வதற்கு வரிச் சலுகை உண்டு. சந்தையில் இதுபோன்ற பல ELSS திட்டங்கள் உள்ளன, அவை நீண்ட காலத்திற்கு முதலீட்டாளர்களுக்கு பெரும் வருமானத்தை அளித்துள்ளன.

பணத்தை முதலீடு செய்யும் போது, நமது வருமானத்திற்கு செலுத்தும் வரியை எப்படி சேமிக்கலாம் என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். இதற்காக, சந்தையில் பல திட்டங்கள் உள்ளன. முதலீட்டின் மீதான வரி விலக்கின் பலனை ஒருவர் பெறும் திட்டங்களில், அரசு திட்டங்கள் உட்பட வங்கிகள், தனியார் வங்கிகள் என பல நிதி நிறுவனங்களும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.

அவற்றில் ஒன்று தான் HDFCயின் HDFC Long Term Advantage Fund scheme of HDFC Mutual Fund என்ற திட்டம்.  மியூச்சுவல் ஃபண்டுகளின் ஈக்விட்டி லிங்க்டு சேவிங்ஸ் ஸ்கீம் (ELSS) வகைகளில் முதலீடு செய்வதற்கு வரிச் சலுகை உண்டு. அவை நீண்ட கால முதலீடு செய்பவர்களுக்கு பெரும் வருவாயை அளித்துள்ளன.  

Read Also | 7th Pay Commission: உயர்த்தப்பட்டது குடும்ப ஓய்வூதியத்தின் வரம்பு

எச்டிஎஃப்சி லாங் டேர்ம் அட்வாண்டேஜ் ஃபண்டில் லாக்-இன் காலம் 3 ஆண்டுகள். ஆனால் நீண்ட கால அடிப்படையில் முதலீட்டாளர்களுக்கு இது மிகப்பெரிய லாபத்தை அளித்துள்ளது. இந்த நிதி 2001 ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது. தொடங்கப்பட்டதிலிருந்து, இது 21% CAGR வருமானத்தை அளித்துள்ளது. 20 ஆண்டுகளில் முதலீட்டாளர்களின் பணம் சுமார் 63 மடங்கு அதிகரித்துள்ளது. சதவீத அடிப்படையில், ஃபண்ட் 20 ஆண்டுகளில் 6200 சதவீத வருமானத்தை அளித்துள்ளது. அதாவது, HDFCயின் இந்தத் திட்டத்தில் 25 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தவர்களின் பணம், 20 ஆண்டுகளில் 16 லட்சம் ரூபாயை நெருங்கிவிட்டது.

20 ஆண்டு வருவாய்: 23%
முதலீட்டின் மதிப்பு ரூ.25 ஆயிரம்: ரூ.16 லட்சம்
ரூ 2500 மாதாந்திர SIP இன் மதிப்பு: ரூ 50 லட்சம்

15 ஆண்டு வருவாய்: 13%
ரூ.25 ஆயிரம் முதலீட்டின் மதிப்பு: ரூ.1.60 லட்சம்
ரூ 2500 மாதாந்திர SIP இன் மதிப்பு: ரூ 16 லட்சம்

10 ஆண்டு வருமானம்: 16%
ரூ.25 ஆயிரம் முதலீட்டின் மதிப்பு: ரூ.1.15 லட்சம்
ரூ 2500 மாதாந்திர SIP இன் மதிப்பு: ரூ 7.5 லட்சம்

குறைந்தபட்ச முதலீடு
குறைந்தபட்ச மொத்த முதலீடு: ரூ 500
குறைந்தபட்ச எஸ்ஐபி: ரூ 500
லாக் இன் காலம்: 3 ஆண்டுகள்

Also Read | IRCTC உடன் இணைந்து மாதம் ₹80,000 சம்பாதிக்கும் சிறந்த வழி

திட்ட விவரங்கள்
வகை: ELSS
வெளியீட்டு தேதி: 2001, ஜனவரி 2
தொடங்கப்பட்டதிலிருந்து வருமானம்: 21.50% CAGR
அளவுகோல்: எஸ்&பி பிஎஸ்இ சென்செக்ஸ் டிஆர்ஐ
மொத்த சொத்துக்கள்: 1366 கோடி (செப்டம்பர் 30, 2021)
செலவு விகிதம்: 2.23% (மார்ச் 31, 2021)

உங்கள் பணம், எந்த பங்குகளில் முதலீடு செய்யப்படுகிறது?
HDFC லாங் டேர்ம் அட்வாண்டேஜ் ஃபண்டின் முதன்மையான பங்குகள் RIL, HDFC வங்கி, ICICI வங்கி, இன்ஃபோசிஸ், HDFC, SBI, L&T, ITC, Redington India, Carborundum Universal, BPCL மற்றும் Powerfrid.

சிறந்த மற்றும் குறைவான செயல்திறன்
24 ஏப்ரல் 2003 முதல் 23 ஏப்ரல் 2004 வரை HDFC லாங் டேர்ம் அட்வாண்டேஜ் ஃபண்டின் சிறந்த செயல்திறன் இருந்தது. இந்த காலகட்டத்தில் சுமார் 149 சதவிகிதம் சிறந்த வருமானத்தை அளித்துள்ளது. அதே சமயம், 2008 ஜனவரி 14, முதல் 2009 ஜனவரி 13ம் தேதிக்கு இடையில் இந்த நிதி மிகவும் மோசமாகச் செயல்பட்டது. இந்த காலகட்டத்தில் இந்த திட்டத்தின் வருவாய் என்பது -54.67 சதவீதமாக இருந்தது.
(source: value research)

Read Also | அசத்தலான இந்த பாலிசியில் 12 ஆம் வகுப்பு வரை ஊக்கத்தொகை கிடைக்கும்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News