70,000 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது SSC!

ஸ்டாஃப் செலக்ஷன் கமிஷன் கூடுதலாக 70,000 பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பினை அறிவித்துள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Jun 21, 2022, 12:59 PM IST
  • பல்வேறு அரசுத் துறைகளில் 70,000 கூடுதல் காலி பணியிடங்கள்.
  • தேர்வுகளின் அறிவிப்புகள் இணையதளத்தில் சரியான நேரத்தில் பதிவேற்றப்படும்.
70,000 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது SSC! title=

பணியாளர் தேர்வாணையம் (SSC) பல்வேறு அரசுத் துறைகளில் 70,000 கூடுதல் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான செயல்முறையை மேற்கொள்ளும் என்று அறிவித்து இருக்கிறது.  இந்த அறிவிப்பானது ஜூன் 20 தேதியன்று வெளியிடப்பட்டு உள்ளது, மேலும் குறிப்பிட்ட தேர்வுகளின் அறிவிப்புகள் உரிய நேரத்தில் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றப்படும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது. 

மேலும் படிக்க | 10ம் வகுப்பு படித்தவர்களுக்கு ரூ.50,000 சம்பளத்தில் அரசு வேலை!

இந்திய அரசின் துணைச் செயலாளரால் கையெழுத்திடப்பட்ட நோட்டீஸில், "ஆட்சேர்ப்பு செயல்முறையை விரைவுபடுத்துவதற்கான அதன் தொடர்ச்சியான முயற்சிகளில், சுமார் 70,000 கூடுதல் காலியிடங்களை நிரப்புவதற்கான செயல்முறையை ஆணையம் மேற்கொள்ளும்." என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதனைத்தொடர்ந்து அறிவிப்பில், "குறிப்பிட்ட தேர்வுகளின் அறிவிப்புகள் அதன் இணையதளத்தில் சரியான நேரத்தில் பதிவேற்றப்படும்.  மேலும் புதுப்பிப்புகளுக்கு தேர்வர்கள் வழக்கமான இடைவெளியில் ஆணையத்தின் வலைத்தளத்தைப் பார்வையிட அறிவுறுத்தப்படுகிறார்கள்" என்றும் கூறப்பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து மற்றொரு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, தட்டச்சு சோதனை/DEST ஸ்கிரிப்ட்களை (ஆங்கிலம் / ஹிந்தி) மதிப்பீடு செய்வதற்கான வழிகாட்டுதல்கள் திருத்தியமைக்கப்படும் என்று ஆணையம் அறிவித்துள்ளது.  "பணியாளர் தேர்வு ஆணையம் தட்டச்சுத் தேர்வு / DEST ஸ்கிரிப்ட்களை (ஹிந்தி/ஆங்கிலம்) மதிப்பிடுவதற்கான தற்போதைய வழிகாட்டுதல்களைத் திருத்தியுள்ளது.  திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் மற்றும் விண்ணப்பதாரர்களுக்கான வழிமுறைகள் 'கேண்டிடேட்ஸ் கார்னர்' ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன.  ஆணையத்தால் திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வரப்படும்” என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

மேலும் படிக்க | தேர்வு இல்லை..விண்ணப்ப கட்டணம் இல்லை..எஸ்பிஐ வங்கியில் வேலை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News