சமீபத்தில் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ரெப்போ விகிதத்தை உயர்த்தியதில் இருந்தே பல வங்கிகளும் அவர்களது வாடிக்கையாளர்களை கவரும் நோக்கில் ஃபிக்ஸட் டெபாசிட் கணக்குகளுக்கு வட்டி விகிதங்களை உயர்த்தி வருகிறது. பல பெரிய பொது மற்றும் தனியார் வங்கிகள் ஏற்கனவே ஃபிக்ஸட் டெபாசிட்டுளுக்கான வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளன, இதன் மூலம் வாடிக்கையாளர்கள் அவர்களது ஃபிக்ஸட் டெபாசிட் கணக்குகளுக்கு அதிக வட்டி விகிதங்களைப் பெறமுடியும். பொதுவாக ஃபிக்ஸட் டெபாசிட் என்பது நிலையான அதே சமயம் பாதுகாப்பான முறையில் வருமானத்தை ஈட்டும் ஒரு வழியாகும். பெரும்பாலான மக்கள் அதிக பணவீக்கம் மற்றும் பங்குச் சந்தையில் ஏற்ற இறக்கங்கள் இருப்பதால் ஃபிக்ஸட் டெபாசிட்டுகளில் முதலீடு செய்வதை லாபகரமானதாக உணர்ந்து தேர்வு செய்கின்றனர்.
மேலும் படிக்க | 7th Pay Commission: டிஏ நிலுவைத் தொகை பற்றிய முக்கிய அப்டேட்
இதுபோன்ற ஆபத்தில்லாத நிதி பயன்பாட்டை வங்கிகள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் மற்றும் தபால் நிலையங்கள் வழங்குகின்றன, இதில் முதலீடு செய்து பயன்பெற்று கொள்ளலாம். தமிழ்நாடு பவர் ஃபைனான்ஸ் அண்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் என்பது ஒரு அரசு நிறுவனமாகும், இது ஃபிக்ஸட் டெபாசிட் கணக்குகளுக்கு முதலீட்டாளர்களை கவரும் வகையிலான வட்டி விகிதங்களை வழங்குகிறது. இந்நிறுவனம் மூத்த குடிமக்களுக்கு 8.5 சதவீத வட்டி வழங்க முடிவு செய்துள்ளது, மேலும் நிறுவனம் தற்போது முதலீட்டாளர்களின் விருப்பத்திற்கேற்ப இரண்டு விதமான ஆப்ஷன்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதில் ஒன்று நான்-குமுலேட்டிவ் ஃபிக்ஸட் டெபாசிட் மற்றொன்று குமுலேட்டிவ் ஃபிக்ஸட் டெபாசிட் ஆகும். இந்த ஃபிக்ஸட் டெபாசிட் கணக்கின் கீழ் முதலீட்டாளர்கள் மாதாந்திர, காலாண்டு மற்றும் வருடாந்திர வட்டியைப் பெறலாம், ஃபிக்ஸட் டெபாசிட் முதிர்ச்சியடையும் போது, அவர்கள் தங்கள் முதலீட்டை திரும்பப் பெறலாம். இதில் நீங்கள் 2, 3, 4 மற்றும் 5 ஆண்டுகள் வரை முதலீடு செய்துகொள்ளலாம். இதற்கான வட்டி விகிதங்கள் மற்றும் காலத்தைப் பொறுத்து மூத்த குடிமக்கள் அல்லாதவர்களுக்கு 7.25 சதவீதம் முதல் 8 சதவீதம் வரை இருக்கும்.
மூத்த குடிமக்களுக்கு 8.5 சதவீத வட்டி கிடைக்கும், 60 மாதங்களில் முதிர்ச்சியடையும் எஃப்டிகளுக்கு மட்டும் 8.5 சதவீத வட்டி கிடைக்கும், 48 மாதங்களில் முதிர்ச்சியடையும் எஃப்டிகளுக்கு 8.25 சதவீத வட்டி கிடைக்கும். இந்த தமிழ்நாடு பவர் ஃபைனான்ஸ் மற்றும் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வட்டி விகிதம் காலாண்டுக்கு ஒருமுறை கூட்டப்பட்டு, முதிர்வு காலத்தில் முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படும். 58 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் 60 மாத நிலையான வைப்புத்தொகைக்கு 8.5 சதவீத வட்டி விகிதத்தைப் பெறலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ