எஸ்பிஐ ஏடிஎம்-ல் பணம் எடுக்கும் வரம்பு குறைப்பு: விவரம் உள்ளே

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்.பி.ஐ.) அதன் வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 1, 2018, 01:34 PM IST
எஸ்பிஐ ஏடிஎம்-ல் பணம் எடுக்கும் வரம்பு குறைப்பு: விவரம் உள்ளே title=

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்.பி.ஐ.) அதன் வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது.

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்.பி.ஐ.) ஏடிஎம் இருந்து பணத்தை எடுப்பதற்கான வரம்பை குறைத்துள்ளது. தற்போது எஸ்பிஐ வங்கி ஏடிஎம்-யில் இருந்து வாடிக்கையாளர்கள் ஒரு நாளைக்கு ரூ. 40,000 எடுக்கலாம். ஆனால் வரும் அக்டோபர் 31 முதல், ஏடிஎம்-ல் இருந்து ரூ 20,000 மட்டும் தான் எடுக்க முடியும் என அறிவித்துள்ளது. இதுக்குறித்து எஸ்.பி.ஐ. வங்கி அதன் அனைத்து கிளைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. 

ஏடிஎம்களில் இருந்து வரும் பரிவர்த்தனைகளில் அதிகமாக மோசடி நடப்பதாக புகார்களை வந்த வண்ணம் உள்ளது. அதைக் கருத்தில் கொண்டு டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதற்காக ஏடிஎம்களில் இருந்து பணம் பெறுவதற்க்கான வரம்பு குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வரம்பு "கிளாசிக்" மற்றும் "மேஸ்ட்ரோ" பற்று அட்டைகளுக்கும் மட்டும் பொருந்தும் என எஸ்.பி.ஐ. தெரிவித்துள்ளது.

Trending News