State Bank of India Mega E-Auction: நாட்டின் மிகப்பெரிய அரசு வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு பெரும் சலுகைகளை வழங்கியுள்ளது. நீங்கள் ஒரு புதிய வீடு, கடை அல்லது மனை வாங்க திட்டமிட்டால், SBI உங்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பைக் கொண்டு வந்துள்ளது.
விலையுயர்ந்த சொத்துக்களை மலிவாக வாங்க எஸ்பிஐ ஒரு நல்ல வாய்ப்பை வழங்குகிறது. அக்டோபர் 25 ஆம் தேதி வணிக மற்றும் குடியிருப்பு சொத்துக்களுக்கான ஆன்லைன் ஏலத்தை ஏற்பாடு செய்வதாக ஒரு அறிவிப்பு மூலம் வங்கி தெரிவித்துள்ளது.
எஸ்பிஐ இந்த தகவலை ட்வீட் செய்துள்ளது
அடமானம் வைக்கப்பட்ட சொத்துக்களை வங்கி (Banks) ஏலம் விடுகிறது. இந்த ஏலத்தில் பங்கேற்றால் சிறந்த சலுகைகளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் கீழ், சந்தையில் தற்போதைய வட்டி விகிதத்தை விட குறைந்த விலையில் வீடு, மனை அல்லது கடையை ஏலம் எடுத்து லாபம் காண உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது. ஏலத்திற்காக வெளியிடப்பட்ட பொது அறிவிப்பில் மற்ற விவரங்கள் பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளன.
ALSO READ: SBI வங்கிக்கு 1 கோடி அபராதம்; வாடிக்கையாளர்களுக்கு என்ன பாதிப்பு
எஸ்பிஐ (SBI) தனது ட்வீட்டில், 'பெரிய முதலீட்டிற்கான வாய்ப்பு வந்துள்ளது. மின்-ஏலத்தில் எங்களுடன் இணைந்து சிறந்த ஏலத்தை எடுக்கவும். கடனை மீட்க கடனை திரும்ப கட்டாதவர்களின் அடமான சொத்துக்களை வங்கி ஏலம் விடுகிறது’ என்று குறிப்பிட்டுள்ளது.
வங்கி எப்படி சொத்தை ஏலம் விடுகிறது
வங்கி, மக்களுக்கு கடன் வழங்குவதற்காக, வங்கி உத்தரவாத வடிவில், கடன் பெறுபவரிடன் குடியிருப்பு சொத்து அல்லது வணிக சொத்து போன்றவற்றை அடமானமாகப் பெறுகிறது. வங்கியின் பிற கிளைகள், செய்தித்தாள்கள் மற்றும் ஊடகங்கள் மூலம் விளம்பரங்கள் வெளியிடப்படுகின்றன. சொத்துக்கள் ஏலம் தொடர்பான தகவல் இந்த விளம்பரத்தில் கொடுக்கப்படுகிறது.
மெகா இ-ஏலத்தில் பங்கேற்பது எப்படி
இ-ஏலத்தின் (E-Auction) அறிவிப்பில் கொடுக்கப்பட்ட சொத்துக்கு EMD டெபாசிட் செய்யப்பட வேண்டும். இது தவிர, சம்பந்தப்பட்ட வங்கி கிளையில் KYC ஆவணம் காட்டப்பட வேண்டும். மறுபுறம், ஏலத்தில் பங்கேற்கும் நபரிடம் டிஜிட்டல் கையொப்பம் இருக்க வெண்டும். இல்லையென்றால், மின்-ஏலதாரர் அல்லது இதற்காக அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தை தொடர்பு கொள்ளலாம்.
ALSO READ:SBI offer: ரூ. 2 லட்சம் இலவச காப்பீடு; யாருக்கெல்லாம் கிடைக்கும்..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR