Adipurush: ராமர் குறித்த சர்ச்சை கருத்திற்கு மன்னிப்பு கோரிய சயீப் அலி கான்

2022 ஆகஸ்ட் 11ஆம் தேதியன்று வெளியாகவிருக்கும் பிரம்மாண்டமான திரைப்படம் ஆதிபுருஷ். பிரபாஸ் மற்றும் சைஃப் அலிகான் நடிக்கும் ஆதிபுருஷ் குறித்த பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 6, 2020, 07:48 PM IST
  • 2022 ஆகஸ்ட் 11ஆம் தேதியன்று வெளியாகவிருக்கும் பிரம்மாண்டமான திரைப்படம் ஆதிபுருஷ்.
  • பிரபாஸ் மற்றும் சைஃப் அலிகான் நடிக்கும் ஆதிபுருஷ் குறித்த பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.
  • சைஃப் அலிகான் (Saif Ali Khan), இலங்கை வேந்தன் ராவணன் கதாபாத்தில் நடிக்கிறார்
Adipurush: ராமர் குறித்த சர்ச்சை கருத்திற்கு மன்னிப்பு கோரிய சயீப் அலி கான் title=

2022 ஆகஸ்ட் 11ஆம் தேதியன்று வெளியாகவிருக்கும் பிரம்மாண்டமான திரைப்படம் ஆதிபுருஷ். பிரபாஸ் மற்றும் சைஃப் அலிகான் நடிக்கும் ஆதிபுருஷ் குறித்த பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது. 

பிரபாஸ் (Prabhas) கடவுள் ராமர் கதாபாத்திரத்திலும்,   சைஃப் அலிகான் (Saif Ali Khan),  இலங்கை வேந்தன் ராவணன் கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்கள். ஆதிபுருஷில், அஜய் தேவ்கன் சிவபெருமானாக நடிப்பார் என்ற ஊகங்களும்,  நிலவுகின்றன. 

இந்நிலையில் பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் ஞாயிற்றுக்கிழமை, வரவிருக்கும்பிரம்மாண்ட திரைப்படமான ஆதிபுருஷில் எனது நடிப்பில், அரக்கன் மன்னன் ராவணனை ‘ஒரு சிறந்த மனிதனாக’ சித்தரிப்படுவார்” என்பது குறித்து அவர் கூறிய கருத்துக்கு மன்னிப்பு கோரினார்.

ஒரு அறிக்கையை வெளியிட்ட சைஃப் அலி கான், “ஒரு நேர்காணலின் போது நான் கூறிய ஒரு கருத்து மக்களின் உணர்வுகளை புண்படுத்தி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது என்பதை நான் அறிவேன். அதை உள்நோக்கத்துடன் செய்யவில்லை. அனைவரிடமும் மன்னிப்பு கேட்டு எனது கருத்தை திரும்பப் பெற விரும்புகிறேன். "

ALSO READ | Adipurush படத்தில் லக்ஷ்மனாக நடிப்பவர் யார் தெரியுமா?

"ராமர் எப்போதுமே எனக்கு நீதியின் மற்றும் வீரத்தின் அடையாளமாக இருந்து வருகிறார். ஆதிபுருஷ் என்பது தீமைக்கு எதிரான நன்மையின் வெற்றியைக் கொண்டாடுவது பற்றியது, மேலும் இந்த காவியத்தை, உள்ளது உள்ளபடியே  முன்வைக்க முழு அணியும் ஒன்றிணைந்து செயல்படுகின்றன," என்று அவர் கூறினார்.

இயக்குனர் ஓம் ரவுத் உடன் வரவிருக்கும் 'ஆதிபுருஷ்' (Adipurush) படத்தில் அவரது கதாபாத்திரம் பற்றி பேசும் போது, ராவணனாக நடிக்க உள்ள, சைஃப் அலி கான், எனது நடிப்பில்  ராவணனின் பாத்திரத்திரம், ஒரு சிறந்த மனிதனாக இருப்பார் என்றார். இந்த கருத்து ஒரு பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது, அவரை திரைப்படத்தில் மாற்றுமாறு பலர் கேட்டுக் கொண்டனர்.

“ஒரு அரக்கனின் ராஜாவின் வேடத்தில் நடிப்பது மிகவும் சுவாரஸ்யமானது, அதில் குறைவான கட்டுப்பாடுகள். நாங்கள் அவரை சிறந்த மனிதராக காட்டுவோம், சீதாவைக் கடத்தியதையும், ராம்ர் உடனான போரையும் நியாயப்படுத்துவோம். அவரது சகோதரி சூர்பனகாவின் மூக்கை வெட்டியதற்காகத் தான் அவர் பழிவாங்கினார். " என சைஃப் கூறியிருந்தார். 

இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை,. நடிகர்கள் முழுவதும் தேர்வாகவில்லை.

2022 ஆம் ஆண்டில் இப்படத்தை வெளியிட இயக்குனர் திட்டமிட்டுள்ளார்.

ALSO READ | Adipurush: பிரபாஸ்-சைஃப் அலி கானின் மெகா பட்ஜெட் திரைப்படம் எப்போது வெளியாகும் தெரியுமா?

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News