புதிய விதி அமல்; பழைய வாகனங்கள் மறுபதிவு கட்டணம் 8 மடங்கு உயரும்!

சர்வதேச அளவில் காற்று மாசுபாடு அதிகம் உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ள நிலையில், காற்று மாசுபாட்டை தடுக்க மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 14, 2022, 02:08 PM IST
  • ஏப்ரல் 1 முதல் புதிய விதி அமல்.
  • 15 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான அனைத்து வாகனங்களுக்கும் பொருந்தும்.
  • மாசுபாட்டை தடுக்க இந்த புதிய விதி வந்துள்ளது.
புதிய விதி அமல்; பழைய வாகனங்கள் மறுபதிவு கட்டணம் 8 மடங்கு உயரும்! title=

சர்வதேச அளவில் காற்று மாசுபாடு அதிகம் உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ள நிலையில், காற்று மாசுபாட்டை தடுக்க மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஏப்ரல் 1 ஆம் தேதி புதிய விதி அமல்படுத்தப்பட உள்ளது. 

சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் (MoRTH) அக்டோபர் 2021 இல் புதிய விதியை ஏப்ரல் 1, 2022 முதல் அமல்படுத்துவதற்கான அறிவிப்பை வெளியிட்டது. புதிய விதியின்படி, 15 ஆண்டுகள் பழமையான இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன உரிமையாளர்கள், வாகன பதிவை புதுப்பிக்க இனி  8 மடங்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டும்.

உதாரணமாக, முன்பு 15 ஆண்டுகள் பழமையான காரின் பதிவை புதுப்பிக்க ரூ.600  என்ற இருக்கும் நிலையில், புதிய விதியின் கீழ் இனி  ரூ.5,000 செலுத்த வேண்டி இருக்கும். அதே போன்று, பழைய பைக்கிற்கு, 300 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு வரும் நிலையில், புதிய விதியின் ​​1,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

லாரி-பஸ் போன்ற கன ரக வாகனங்கள் பற்றி கூறுகையில், 15 ஆண்டுகள் பழமையான வாகனங்கள் ரூ.1,500க்கு புதுப்பிக்கப்பட்டு வந்த நிலையில், இனி, ரூ.12,500 செலவாகும். முன்பு சிறிய பயணிகள் வாகனங்களைப் புதுப்பிக்க ரூ.1,300 கட்டணமாக வசூலிக்கப்பட்டது. ஆனால் இப்போது இதனை புதுப்பிக்க ரூ.10,000 வசூலிக்கப்படுகிறது.

மேலும் படிக்க | ரூ.10000 அபராதம் விதித்த டிராஃபிக் போலீஸ்! ஆத்திரத்தில் தீக்குளித்த வாலிபர்!

வாகன மாசுபாட்டைக் குறைக்க மத்திய அரசு நீண்ட காலமாக கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது, இப்போது இந்த விஷயத்தில் ஒரு பெரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து தனியார் மற்றும் வர்த்தக வாகனங்களின் முன் கண்ணாடியில் வாகனங்களுக்கான பிட்னஸ் சான்றிதழ் தகடு பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த ஃபிட்னஸ் பிளேட் வாகனங்களின் நம்பர் பிளேட் போன்று இருக்கும், அதில் பிட்னஸ் காலாவதி தேதி தெளிவாக எழுதப்பட்டிருக்கும். இங்கு நீல நிற ஸ்டிக்கரில் மஞ்சள் நிறத்தில், பிடன்ஸ் சான்றிதழ் காலாவதி ஆகும்  தேதி எழுதப்பட்டிருக்கும். தேதி-மாதம்-ஆண்டு (DD-MM-YY) என்ற வடிவத்தில் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

நாட்டில் 20 ஆண்டுகளுக்கு முந்தைய 51 லட்சம் இலகுரக வாகனங்களும், 15 ஆண்டுகளுக்கு மேல் 34 லட்சம் வாகனங்களும் இயக்கப்படுகின்றன. இந்த சட்டத்தை மீறும் வாகன உரிமையாளர்களுக்கு கடும் அபராதம் விதிக்கவும் அரசு ஏற்பாடு செய்து வருகிறது.

சுமார் 17 லட்சம் நடுத்தர மற்றும் கனரக வணிக வாகனங்கள் 15 ஆண்டுகளுக்கு மேல் பழமையானவை மற்றும் சரியான பிட்னஸ் சான்றிதழ் இல்லாமல் இயக்கப்படுகின்றன என சாலைப் போக்குவரத்து அமைச்சகத்தின் கூறுகிறது. புதிய விதி அமலுக்கு வந்த பிறகு, தகுதிச் சான்று இல்லாத பழைய வாகனங்கள் சாலையில் ஓடுவது கண்டறியப்பட்டால், அவை உடனடியாக ஸ்கிராப்புக்கு அனுப்பப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | Paytm மூலம் இலவச LPG சிலிண்டர் பெறலாம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News