Platform Ticket Price: பிளாட்பார்ம் டிக்கெட் விலை அதிரடி குறைப்பு

வடக்கு ரயில்வே பிளாட்பார்ம் டிக்கெட் விலையை குறைத்துள்ளது  

Written by - S.Karthikeyan | Last Updated : Nov 5, 2022, 09:07 PM IST
Platform Ticket Price: பிளாட்பார்ம் டிக்கெட் விலை அதிரடி குறைப்பு  title=

Railway News: தீபாவளி மற்றும் சாத் போன்ற பண்டிகைகளின்போது உத்தரபிரதேசத்தில் பல ரயில் நிலையங்களில் பிளாட்ஃபார்ம் டிக்கெட் விலை உயர்த்தப்பட்டது. பண்டிகைக் காலத்துக்குப் பிறகு மீண்டும் விலையை ரயில்வே குறைத்துள்ளது. வடக்கு ரயில்வே 14 ரயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட் கட்டணத்தை ரூ.10 ஆக குறைத்துள்ளது. உண்மையில் தீபாவளி மற்றும் சாத் என்பதால் ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது. இதையடுத்து டிக்கெட் கட்டணத்தை உயர்த்த ரயில்வே முடிவு செய்தது.

புதிய பிளாட்பார்ம் கட்டணம் 

லக்னோ, வாரணாசி, பாரபங்கி, அயோத்தி கான்ட், அயோத்தி சந்திப்பு, அக்பர்பூர், ஷாகஞ்ச், ஜான்பூர், சுல்தான்பூர், ரேபரேலி, ஜங்காய், பதோஹி, பிரதாப்கர் மற்றும் உன்னாவ் சந்திப்பு ஆகிய இடங்களில் நடைமேடை டிக்கெட் விலைகள் பண்டிகைக்கு முன்னதாக இருந்த விலையே இருக்கும் என்று வடக்கு ரயில்வேயின் மூத்த கோட்ட வணிக மேலாளர் ரேகா சர்மா தெரிவித்தார். அதாவது அப்போது இருந்த 10 ரூபாய் என்ற விலை மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளது. வடக்கு ரயில்வே முதுநிலைப் பிரிவு வணிக மேலாளர் (டிசிஎம்) ரேகா சர்மா கூறுகையில், “மொத்தம் 14 ரயில் நிலையங்களில் பிளாட்ஃபார்ம் டிக்கெட் கட்டணம் ரூ.10 ஆக குறைக்கப்பட்டுள்ளது. தீபாவளி மற்றும் சத்பூஜை காரணமாக ₹50 ஆக உயர்த்தப்பட்ட விலை தற்போது குறைக்கப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.

மேலும் படிக்க | எச்சரிக்கை: நீங்கள் வைத்திருக்கும் ஆதார் அட்டை உண்மையானது தானா?

தெற்கு ரயில்வேயும் விலையை உயர்த்தியது

"லக்னோ, வாரணாசி, பாரபங்கி, அயோத்தி கான்ட், அயோத்தி சந்திப்பு, அக்பர்பூர், ஷாகஞ்ச், ஜான்பூர், சுல்தான்பூர் சந்திப்பு, ரேபரேலி, ஜங்காய், பதோஹி, பிரதாப்கர் மற்றும் உன்னாவ் சந்திப்பு ஆகிய இடங்களில் டிக்கெட் விலை குறைந்துள்ளது" என்று சர்மா கூறினார். கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த தெற்கு மற்றும் மேற்கு ரயில்வே பல ரயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட்டுகளின் விலையை உயர்த்தியது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள எட்டு முக்கிய ரயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட் விலையை ரூ10ல் இருந்து ரூ.20 ஆக தெற்கு ரயில்வே உயர்த்தியுள்ளது. உயர்த்தப்பட்ட டிக்கெட் விலை ஜனவரி 31, 2023 வரை அமலில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | Viral Video: காப்பாற்றிய பெண்ணிற்கு 'நன்றி' கூறிய குட்டி யானை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News