எந்தெந்த 33 பொருட்களின் GST வரி குறைப்பு.... முழுவிவரம் உள்ளே....

சாமானிய மக்கள் பயன்படுத்தக்கூடிய அனைத்து பொருட்களின் ஜிஎஸ்டியும் குறைக்கப்பட்டு வந்துள்ளன என மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்! 

Last Updated : Dec 22, 2018, 06:59 PM IST
எந்தெந்த 33 பொருட்களின் GST வரி குறைப்பு.... முழுவிவரம் உள்ளே.... title=

சாமானிய மக்கள் பயன்படுத்தக்கூடிய அனைத்து பொருட்களின் ஜிஎஸ்டியும் குறைக்கப்பட்டு வந்துள்ளன என மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்! 

ஜி.எஸ்.டி. வரி விதிப்புகளில் முக்கிய மாற்றமாக 33 பொருட்களின் வரி விகிதத்தை 18 சதவீதத்திலிருந்து 12 மற்றும் 5 சதவீதமாக குறைத்து மத்திய நிதியமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. முன்பு 99 சதவீத பொருட்களின் வரி விதிப்பு 18 சதவீதத்திலிருந்து குறைக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்த நிலையில், 33 பொருட்களுக்கான வரி விதிப்பு மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது.

சொகுசு, ஆடம்பரம் என்ற வகையில் வரக்கூடிய 28 பொருட்கள் மட்டுமே 28 சதவீத GST வரி வரம்பில் உள்ளதாகவும், மற்ற அனைத்துப் பொருட்களும் 18 சதவீத வரி வரம்புக்குள் வந்துவிட்டதாக அருண்ஜேட்லி தெரிவித்துள்ளார். சிமெண்ட் மற்றும் ஆட்டோமொபைல் பொருட்களுக்கு GST வரி குறைக்கப்படவில்லை. 

GST கவுன்சில் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி, மானிட்டர்கள், டிவி, டயர்கள், லித்தியம்-அயன் பேட்டரிகளுக்கான சக்தி சேமிப்பான்கள் 28 சதவீத GST வரி வரம்பில் இருந்து 18 சதவீத வரி வரம்புக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகக் கூறினார்.

மாற்றுத்திறனாளிகளுக்கான வாகன பாகங்கள் 5 சதவீத வரி வரம்புக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். சிமெண்ட் மற்றும் ஆட்டோமொபைல் பொருட்களுக்கு வரி குறைக்கப்படவில்லை எனவும் அருண்ஜேட்லி தெரிவித்தார்.

சிக்கன வகுப்பு விமான டிக்கெட் மீதான GST வரி 5 சதவீதமாகவும், பிசினஸ் வகுப்பு விமான டிக்கெட் மீதான GST வரி 12 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

100 ரூபாய்க்கு மேல் உள்ள சினிமா டிக்கெட்டுகள் மீதான GST வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகவும், 100 ரூபாய்க்கு கீழ் உள்ள சினிமா டிக்கெட்டுகள் மீதான GST வரி 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளதாக அருண்ஜேட்லி தெரிவித்தார்.

புதிய அறிவிப்புகளை தொடர்ந்து விமான டிக்கெட்டுகள், சினிமா டிக்கெட்டுகளுக்கான கட்டணம், டிவி, கம்ப்யூட்டர்களின் விலை குறைகிறது.  இந்த GST வரிக்குறைப்பு வரும் ஜனவரி 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும் நிதியமைச்சர் கூறினார்.

சொகுசு, ஆடம்பரம் என்ற வகையில் வரக்கூடிய 28 பொருட்கள் மட்டுமே 28 சதவீத ஜிஎஸ்டி வரி வரம்பில் உள்ளதாகவும், மற்ற அனைத்துப் பொருட்களும் 18 சதவீத வரி வரம்புக்குள் வந்துவிட்டதாகவும் அருண்ஜேட்லி தெரிவித்துள்ளார். 

 

Trending News