பூமிக்கு மிக அருகில் வரும் செவ்வாய்! இரவு பிரகாசமாக காணலாம்!

பூமிக்கு மிகவும் அருகில் செவ்வாய் கிரகம் வர இருக்கிறது. இதனால் செவ்வாய் கிரகத்தை மிகவும் எளிதாக தெளிவாக பார்க்க இயலும். இந்த செவ்வாய் கிரகமானது 15 ஆண்டுகளுக்கு பிறகு, பூமிக்கு மிக அருகே நிகழ்கிறது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 31, 2018, 01:24 PM IST
பூமிக்கு மிக அருகில் வரும் செவ்வாய்! இரவு பிரகாசமாக காணலாம்! title=

இன்று பூமிக்கு மிகவும் அருகில் செவ்வாய் கிரகம் வர இருக்கிறது. இதனால் செவ்வாய் கிரகத்தை மிகவும் எளிதாக தெளிவாக பார்க்க இயலும். இந்த செவ்வாய் கிரகமானது 15 ஆண்டுகளுக்கு பிறகு, பூமிக்கு மிக அருகே நிகழ்கிறது.

 

 

 

 

நாசா, இஸ்ரோ, ப்ளூ ஒரிஜின், ஸ்பேஸ் எக்ஸ் எல்லோரும் நிலவு குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் தற்போது பூமிக்கு மிக அருகில் செவ்வாய் காட்சி அளிக்க இருக்கிறது. பூமியில் இருந்து குறைந்தபட்சம் 5 கோடியே 76 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தில் செவ்வாய் கிரகம் இருக்க போகிறது. 

இந்த நிலையில் செவ்வாய் கிரகத்தில் தற்போது பெரிய புயல் வீசி வருகிறது. இந்த புயல் இன்னும் சில நாட்களுக்கு செவ்வாய் கிரகத்தை அப்படியே சுற்றி சுற்றி வரும் என்று கூறப்படுகிறது.

இதனால் செவ்வாய் மிகவும் வெளிச்சமாக இருக்கும். இதனால் தற்போது நாம் செவ்வாய் கிரகம் காண இயலும் என்று, நாசா தெரிவித்து இருக்கிறது. இதை அப்படியே வெறும் கண்களால் பார்க்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. 

இனி இதே போன்ற செவ்வாய் பூமிக்கு அருகில் 2020-ம் ஆண்டு வரும். இதற்கு முன்பு 15 ஆண்டுகளுக்கு முன்பு 2003-ம் ஆண்டில் செவ்வாய் கிரகம் பூமியில் இருந்து 5 கோடியே 30 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தில் வந்தது. அதன்பின் இப்போது தான் பூமிக்கு அருகில் வருகிறது. இன்றிரவு செவ்வாய் கிரகத்தை மிக பிரகாசமாக காணலாம். இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பார்க்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

Trending News