மழை பெய்யும் பொழுது இந்த தவறை மட்டும் பண்ணிடாதீங்க!

மழைக்காலத்தில் மின் கம்பிகளைத் தொடாமல் இருப்பதை போல, மழை பெய்யும் போது எலக்ட்ரானிக் உபகரணங்களைத் துண்டித்துவிடுவதே நல்லது.    

Written by - RK Spark | Last Updated : Dec 9, 2022, 10:22 AM IST
  • மழை பெய்யும் போது சில விஷயங்களில் கவனமுடன் இருக்க வேண்டும்.
  • சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
  • குறிப்பாக எலக்ட்ரிக் விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை.
மழை பெய்யும் பொழுது இந்த தவறை மட்டும் பண்ணிடாதீங்க!  title=

பெரும்பாலான மக்களுக்கு மழை பிடிக்கும், மழையின் சத்தம், மண்வாசனை என இந்த மழைக்காலத்தில் பல சுவாரஸ்யமான விஷயங்கள் நடக்கும்.  என்னதான் நமக்கு மழை பிடித்தமானதாக இருந்தாலும் இந்த காலத்தில் தான் அதிகளவில் நோய்த்தொற்றுகள் பரவுகிறது.  இந்த காலத்தில் சாலை விபத்துகள், மின் தடைகள் மற்றும் பேரிடர்கள் என நிறைய பிரச்சனைகளை ஏற்படுகிறது.  மழைக்காலத்தில் சில பாதுகாப்பு குறிப்புகளை நாம் பின்பற்றுவதன் மூலமாக நாம் எவ்வித ஆபத்திலும் சிக்காமல் நலமாக இருக்க முடியும்.

1) மழையின் போது மின் கம்பிகளில் கவனமாக இருக்க வேண்டும், எப்போது வேண்டுமானாலும் அவை அறுந்து விழுகலாம்.  உடைந்த கம்பிகளைத் தொடுவதை தவிர்க்கவும் மற்றும் மின்சார ஒயர்களை கையாள்வதில் கவனமாக செயல்பட வேண்டும்.  மின்கம்பிகள் அறுந்து விழுந்துவிட்டால் அதனருகில் நீங்கள் செல்லக்கூடாது மற்றும் உங்கள் குழந்தைகளையும் வெளியே செல்ல அனுமதிக்காதீர்கள்.  கம்பிகள் நீர் நிரம்பிய குட்டையில் கிடப்பதை கண்டால் முடிந்தவரை அதிலிருந்து விலகி இருங்கள், இல்லாவிட்டால் மின்சாரம் தாக்க நேரிடும்.

2) மழைநீரில் நடப்பதை தவிர்க்க வேண்டும், ஏனெனில் இது பூஞ்சை தொற்றுக்கு வழிவகுக்கும்.  மழைநீரில் நடப்பது சிலருக்கு பிடித்தமானதாக இருக்கும், இருப்பினும் சாலையில் தேங்கி நிற்கும் மழை தண்ணீரிலிருந்து விலகி இருப்பது நல்லது.  அந்த நீரில் பலவிதமான பாக்டீரியாக்கள், வைரஸ்கள் மற்றும் புஞ்சைகள் ஏராளமாக நிரம்பியிருக்கும்.  அப்படி மழைநீரில் நடக்க வேண்டிய சூழ்நிலை வந்தால், நடந்து சென்ற பின்னர் உங்கள் கால்களை நன்றாக சோப்பு போட்டு நன்னீரில் கழுவிவிடுங்கள்.

மேலும் படிக்க | Cyclone Mandous Live: மாண்டஸ் புயல் அலெர்ட் - மக்களுக்கு அரசு கொடுத்திருக்கும் அறிவுறுத்தல்கள் என்ன?

3) மழைக்காலத்தில் கொசுக்களின் வரவும் அவை கொண்டுவரும் நோய்களின் வரவும் சற்று அதிகமாகவே இருக்கும்.  அதனால் எப்போதும் கொசுவர்த்தி சுருள்களை பயன்படுத்துங்கள், கொசுக்கள் மட்டுமின்றி இன்னும் சில பூச்சிகளும் மழைக்காலத்தில் வரக்கூடும் என்பதால் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை நீங்கள் எடுக்கவேண்டியது அவசியமாகும். கொசுக்களால் மலேரியா, டெங்கு மற்றும் சிக்குன்குனியா போன்ற நோய்கள் ஏற்படக்கூடும் என்பதால் கவனமுடன் இருக்க வேண்டியது அவசியம்.  முழுக்கை சட்டைகள் அணிவது, இருட்டில் வெளியில் உட்காருவதைத் தவிர்ப்பது, ஜன்னல் கதவுகளை மூடி வைப்பது மற்றும் படுக்கையைச் சுற்றி கொசு வலைகளைப் பயன்படுத்துவது போன்றவற்றை செய்யவேண்டும்.

மேலும் படிக்க | Cyclone Mandous Live: மிரட்டும் மாண்டஸ் புயல்: 24 மாவட்ட பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று லீவ் - முழு விவரம்

4) மழைக்காலத்தில் வாகனங்களை கவனமாக ஓட்டவேண்டியது அவசியம் ஏனெனில் தேங்கி நிற்கும் மழைநீரில் சாலை விபத்துகள் அதிகம் ஏற்படக்கூடும்.  எனவே இந்த காலத்தில் வாகன ஓட்டிகள் வேகமாகச் செல்வதையும், வால்கேட்டிங் செய்வதையும் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.  மழை பெய்யும் போது மோட்டார் சைக்கிள்களை ஓட்டுவதில் எச்சரிக்கையாக இருங்கள், கார் ஓட்டினால் உங்களைச் சுற்றியுள்ள பைக் ஓட்டுபவர்களிடம் கவனமாக இருங்கள்.  கனமழை பெய்தாலும் உங்கள் கார் தெரியும்படி உங்கள் ஹெட்லைட்களை ஆன் செய்வது, வாகனம் ஓட்டுவதற்கு முன் எரிபொருள், பிரேக்குகள், டயர்கள் மற்றும் வைப்பர்களைப் பார்ப்பது போன்றவற்றை செய்ய மறக்காதீர்கள். 

5) மழை வெள்ளத்தால் உங்கள் பகுதி பாதிக்கப்படுமெனில் முன்கூட்டியே அனைத்து மின்னணு சாதனங்களையும் நிறுத்தி வையுங்கள்.  மழைக்காலத்தில் மின் கம்பிகளைத் தொடாமல் இருப்பதை போல  மழை பெய்யும் போது எலக்ட்ரானிக் உபகரணங்களைத் துண்டித்துவிடுவதே நல்லது.  

6) மழைக்காலத்தில் எப்போதும் ஒரு குடையை உங்களோடு வைத்திருங்கள், இதனால் நீங்கள் மழையில் நனைந்து நோய்வாய்ப்படுவது மட்டுமின்றி உங்கள் மொபைல் போன், பணம் மற்றும் கார்டுகள் போன்ற மதிப்புமிக்க பொருட்கள் மழையில் நனையாமல் பாதுகாத்து கொள்ளலாம்.  குடையை எடுத்துச் செல்வது சிரமமாகத் தோன்றினால் நீங்கள் ரெயின்கோட் கொண்டு செல்லலாம் வாங்கவும் மற்றும் நீங்கள் எடுத்துச்செல்லும் மதிப்புமிக்க பொருட்களை ஒரு சிறிய பிளாஸ்டிக் பைகளில் போட்டு எடுத்து செல்வது நல்லது.

மேலும் படிக்க: மிரட்டும் மாண்டஸ் புயல்: எச்சரிக்கை பணிகள் தீவிரம்- தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News