மீண்டும் இணையும் `விக்ரம் வேதா' காதல் ஜோடி!

இறுதிச்சுற்று’ படத்திற்குப் பிறகு நடிகர் மாதவன் தமிழில் ‘விக்ரம் வேதா’ படத்தில் நடித்திருந்தார். தற்போது மாதவனின் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

Last Updated : Jun 16, 2018, 04:19 PM IST
மீண்டும் இணையும் `விக்ரம் வேதா' காதல் ஜோடி! title=

இறுதிச்சுற்று’ படத்திற்குப் பிறகு நடிகர் மாதவன் தமிழில் ‘விக்ரம் வேதா’ படத்தில் நடித்திருந்தார். தற்போது மாதவனின் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

`கல்கி' என்ற குறும்படத்தை இயக்கிய திலீப் குமார் இந்தப் படத்தை இயக்க, `விக்ரம் வேதா' படத்தில் நடித்த மாதவன் - ஷ்ரத்தா ஶ்ரீநாத் ஜோடி நடிகின்றனர். இவர்களின் கெமிஸ்ட்ரி `விக்ரம் வேதா' படத்தில் அதிகம் பேசப்பட்டது. தற்போது இந்த ஜோடி மீண்டும் புதிய படம் மூலம் இணைய இருக்கிறது.

ரொமான்டிக் ட்ராமா ஜானரில் உருவாகவிருக்கும் இந்தப் படத்துக்கு `மாறா' எனப் பெயரிட்டுள்ளனர். தீபக் பகவான் ஒளிப்பதிவு செய்ய ஜிப்ரான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Trending News