இந்தியர்களால் மட்டுமே இயங்கும் இந்த நாடு! வரியில்லாத வருமானம் கிடைக்கும்!

Kuwait Country: குவைத் போன்ற வளைகுடா நாடுகளில் இந்தியர்களுக்கு அதிக தேவை உள்ளது. நல்ல சம்பளத்துடன் கூடிய வேலையும் இந்த பகுதிகளில் கிடைக்கிறது.  

Written by - RK Spark | Last Updated : Jun 13, 2024, 06:51 AM IST
  • பல காரணங்களுக்காக இந்தியர்கள் குவைத் செல்கின்றனர்.
  • குவைத்தில் நல்ல சம்பளம் கொடுக்கப்படுகிறது.
  • நல்ல மருத்துவ உதவியும் கிடைக்கிறது.
இந்தியர்களால் மட்டுமே இயங்கும் இந்த நாடு! வரியில்லாத வருமானம் கிடைக்கும்! title=

இந்தியாவில் இருந்து உலகில் உள்ள பல்வேறு நாடுகளுக்கு வேலை தேடி செல்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. படித்துவிட்டு வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வோர் அங்கேயே செட்டிலும் ஆகிவிடுகின்றனர். சிலர் அங்கு சம்பாதிக்கும் பணத்தை தங்களது சொந்த ஊர்களில் முதலீடு செய்கின்றனர். சிங்கப்பூர், மலேசியா, துபாய் போன்ற நாடுகளுக்கு அதிகம் வேலைக்காக செல்கின்றனர். இந்தியர்கள் அதிகமாக இருக்கும் மற்றொரு நாடு குவைத் ஆகும். இந்த நாடு முழுவதும் இந்தியர்களால் இயங்குகிறது என்றே சொல்லலாம். இந்நிலையில் குவைத்தில் உள்ள மங்காப் நகரில் இந்திய தொழிலாளர்கள் தங்கி இருந்த கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 49 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்.

மேலும் படிக்க | Union Budget 2024-25: ஜூலை 1 பட்ஜெட்டில் சம்பள வர்க்கத்தினருக்கு நல்ல செய்தி சொல்வாரா நிதியமைச்சர்?

வேலை மற்றும் நல்ல சம்பளம் தேடி வெளிநாடுகளுக்கு சென்ற இவர்களின் நிலைமை தற்போது பரிதாபத்திற்குள்ளாகி உள்ளது. கடந்த புதன்கிழமை அதிகாலை இந்த விபத்து நடந்துள்ளது. தீ விபத்துக்குள்ளான இந்த கட்டிடம் மலையாள தொழிலதிபர் கேஜி ஆபிரகாமின் NBTC குழுமத்திற்கு சொந்தமானது என்று தகவல் வெளியாகி உள்ளது. அந்த நிறுவனத்தில் வேலை செய்பவர்கள் இந்த கட்டிடத்தில் தான் தங்கி வந்துள்ளனர். எதிர்பாராதவிதமாக ஏற்பட்டுள்ள இந்த தீ விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

குவைத்தில் உள்ள இந்தியர்கள்

ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் வேலை தேடி ளைகுடா நாடுகளுக்கு செல்கின்றனர். காரணம் இங்கு சிறிய வேலைகளுக்கு கூட நல்ல சம்பளம் வழங்கப்படுகிறது. எனவே இங்கு அதிகமாக இந்தியர்கள் செல்கின்றனர். சொல்லப்போனால் குவைத்தின் முதுகெலும்பாக இந்திய தொழிலாளர்கள் உள்ளனர். குவைத்தின் மொத்த மக்கள் தொகையில் 21% பேர்  அதாவது சுமார் 10 லட்சம் பேர் இந்தியர்களாக உள்ளனர். குவைத்தில் பணி புரியும் மொத்த தொழிலாளர்களில் 30% பேர் அதாவது சுமார் 9 லட்சம் பேர் இந்தியத் தொழிலாளர்களாக உள்ளனர். குவைத் நாட்டில் அந்த நாட்டை பூர்விகமாக கொண்டவர்கள் வெறும் 30% பேர் தான் வசிக்கின்றனர். அதே சமயம் 70% பேர் வேலைக்காக சென்றவர்களாக உள்ளனர். 

காரணம் அங்கு வேலைக்கு செல்வோருக்கு நல்ல சம்பளம் வழங்கப்படுகிறது. தோட்டத்தை பராமரிக்க, கார் கழுவ, கட்டுமான வேலைகள் செய்ய, விவசாயம் கூலிகள், உதவியாளர் போன்ற வேலைகளை செய்ய அதிகமானோர் தேவைப்படுகின்றனர். குவைத்தில் தொழிலாளர்களுக்கு 100 குவைத் தினார் சம்பளமாக கொடுக்கப்படுகிறது. இதன் இந்திய ரூபாயின் மதிப்பு சுமார் ரூ. 27266 ஆகும். கேஸ் கட்டர் மற்றும் லேத் தொழிலாளி போன்ற வேலை என்றால் 140 முதல் 170 குவைத் தினார் வழங்கப்படுகிறது. அதே சமயம் இந்திய மதிப்பில் மூன்று லட்சம் முதல் ஐந்து லட்சம் வரை சம்பளம் பெரும் தொழிலாளர்களும் அங்கு உள்ளனர். இந்தியாவில் வேலை பார்த்தால் கிடைக்கும் சம்பளத்தைவிட குவைத்தில் பல மடங்கு அதிகம் கிடைக்கிறது. எனவே தான் அங்கு வேலைதேடி பலர் செல்கின்றனர். 

மேலும் படிக்க | 432% வருமானம் கொடுத்த பங்குகள்! இவை அட்டகாச வருவாய் கொடுத்த இன்ஃப்ரா பங்குகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News