இன்றைய காலகட்டத்தில், மக்கள் பெரும்பாலும் வீட்டு வைத்திய முறைகளை விரும்பி செல்கின்றனர். காரணம் வீட்டு வைத்திய முறைகளால் பக்கவிளைவுகள் அதிகம் இன்றி நல்ல பலன் கிடைப்பதாக நம்புகின்றனர்.
இந்நிலையலில் இளைஞர்களின் பிரதான பிரச்சனையான முடி உதிர்வு பிரச்சனைக்கு வீட்டு முறை வைத்தியம் என்னவென்று இந்த பதிவில் நாம் பகிர இருக்கிறோம்.
READ | அந்நியர்களுடன் அதிகம் பழக விரும்புகிறவர்கள் பெண்கள்: ஆய்வு...
இளம் வயதிலேயே, முடி உதிர்தல் மற்றும் வழுக்கை போன்ற பிரச்சினைகள் இந்த கால இளைஞர்களின் முக்கிய பிரச்சனையாக உள்ளது. காரணம் இந்த பிரச்சனை அழகு தொடர்பான கடுமையான பிரச்சினையாக மாறி வருகிறது. நாகரீகமாகவும், ஸ்டைலாகவும் தோற்றமளிக்க விரும்பும் இளைஞர்களுக்கு இந்த பிரச்சினை ஒரு தீவிரமான பிரச்சினையாக இருந்தாலும், மாறிவரும் பருவத்தின் காரணமாகவும், கவனக்குறைவு உணவு பழக்கம் போன்றவை அவர்களது முடி உதிர்தல் பிரச்சனைக்கு பொதுவான காரணம் என உணர்வதில்லை.
நீங்களும் இதேபோன்ற பிரச்சினையை கையாளுகிறீர்கள் மற்றும் விரைவில் அதை சரிசெய்ய விரும்பினால், இன்று நாம் பார்க்க இருக்கும் இஞ்சியின் இந்த செய்முறை உங்களுக்கு உதவும்.
முடி உதிர்தல் காரணமாக பல எண்ணெய் மற்றும் மருந்துகளை இதுவரை நீங்கள் பயன்படுத்தியிருக்கலாம், சிலருந்து இவை பயன் அளித்திருக்காலம், பலருக்கு பயன் அளிக்காமல் இருந்திருக்கலாம். அப்படி இருந்தால் கவலை வேண்டாம். ஏனெனில் நீங்கள் உங்கள் வீட்டில் இருக்கும் இஞ்சியை கொண்டு வழுக்கைக்கு தீர்வு பெறலாம்.
READ | விரதம் இருப்பதால் நமக்கு கிடைக்கும் நன்மைகளைப் பற்றித் தெரியுமா?...
இஞ்சி ஒரு பாக்டீரியா எதிர்ப்பு மருந்தாக கருதப்படுகிறது. ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருப்பதால், அதன் இயற்கையான பண்புகளும் முடி உதிர்வதைத் தடுக்கின்றன. வழுக்கை நீங்க, இஞ்சி சாற்றை எலுமிச்சை சாறுடன் கலந்து, கூந்தலில் தடவுவது நன்மை பயக்கும் என்று கூறப்படுகிறது. இதைச் செய்வதன் மூலம், தலை பொடுகு பிரச்சனையும் கூந்தலில் இருந்து அகற்றப்படும், மேலும் முடி உதிர்தல் நின்றுவிடும் எனவும் கூறப்படுகிறது.
கூந்தலுக்கு இஞ்சியைப் பயன்படுத்தும்போது, சாற்றின் அமில தன்மை காரணமாக, இது உங்கள் தலைமுடியின் அடர்த்தியை குறைக்கும் என்பதையும் நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். எனவே இஞ்சி சாற்றைப் பயன்படுத்திய பிறகு, எப்போதும் உங்கள் தலைமுடியை நன்றாக அலசுதல் வேண்டும். மேலும் உணவில் இஞ்சி சேர்த்துக்கொள்வதும் உங்களுக்கு நன்மை அளிக்கும்.