இந்தியாவில் Realme 4K Smart TV; விலை, சிறப்பு அம்சங்கள் விபரம் உள்ளே..!!

ரியல்மி  (Realme) இரண்டு புதிய 4k ஸ்மார்ட் டிவிகளை இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது. அதன் விலை, அசத்தலான அம்சங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 1, 2021, 06:28 PM IST
  • இரண்டு தொலைக்காட்சிகளிலும் டால்பி விஷன் மற்றும் டால்பி அட்மோஸ் ஆகியவற்றை பயன்படுத்துவதற்கான அம்சங்கள்.
  • Realme Smart TV 4K மாடல்களில் அண்ட்ராய்டு டிவி 10 வழங்கப்பட்டுள்ளது.
  • டிவியுடன் புளூடூத் இணைப்புடன் கூடிய ரிமோட்டும் கிடைக்கும்
இந்தியாவில் Realme 4K Smart TV; விலை, சிறப்பு அம்சங்கள் விபரம் உள்ளே..!!  title=

ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர் ரியல்மி (Realme)  தனது இரண்டு புதிய 4K ஸ்மார்ட் டிவிகளை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. Realme நிறுவனம் 43 இன்ச் மற்றும் 50 இன்ச் அளவு கொண்ட இரண்டு 4K மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ரியல்மி அறிமுகப்படுத்தியுள்ள  இந்த டிவி Redmi, xiaomi TV மற்றும் OnePlus TV, Kodak TV மற்றும் ThomsonTV  ஆகியவற்றுடன் போட்டியிடும் வகையில் உள்ளது. ரியல்மி அறிமுகப்படுத்தியுள்ள இந்த இரண்டு தொலைக்காட்சிகளின் விலை மற்றும் அம்சங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.

விலை
விலை பற்றி குறிப்பிடும் போது, ​​Realme Smart TV 4K 43 அங்குலம் மாடலின் விலை ₹27,999. மேலும், 50 அங்குல மாடலின் விலை ₹39,999. ரியல்மின் இந்த டிவிக்களும் பிளிப்கார்ட் (Flipkart), ரியல்மி (Realme) ஆகியவற்றின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் சில்லறை விற்பனை கடைகளில் ஜூன் 4 முதல் விற்பனை செய்யப்படும். இந்த இரண்டு தொலைக்காட்சிகளிலும் டால்பி விஷன் மற்றும் டால்பி அட்மோஸ் ஆகியவற்றை பயன்படுத்துவதற்கான அம்சங்கள் உள்ளன

ALSO READ | 'திரும்பி வந்துட்டேன்னு சொல்லு’: Jio வழங்கும் அசத்தல் ₹98 திட்டம்..!!

ஸ்பெசிபிகேஷன்

Realme Smart TV 4K  மாடல்களில் அண்ட்ராய்டு டிவி 10 வழங்கப்பட்டுள்ளது. இரண்டு தொலைக்காட்சிகளின் தெளிவுத்திறன் 3840 × 2160 பிக்சல்கள். அதன் வ்யூயிங் ஆன்கிள் 178 டிகிரி. சிறந்த செயல்திறனுக்காக, இந்த இரண்டு ஸ்மார்ட் டிவிகளிலும் மீடியாடெக் குவாட்கோர் செயலியைக் கொண்டுள்ளன. இது தவிர, 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி சேமிப்பு இடம் உள்ளது. சிறந்த ஒலிக்கு, இந்த இரண்டு ஸ்மார்ட் டிவிகளிலும் நான்கு ஸ்பீக்கர்கள் உள்ளன, மொத்தம் 24W திறன் கொண்டது. இதன் சிறப்பு என்னவென்றால், இந்த டிவிகளில் மைக்ரோஃபோன் உள்ளது மற்றும் கூகிள் அஸிஸ்டெண்ட் அம்சத்தையும் பயன்படுத்தலாம். அதே நேரத்தில், டிவியுடன் புளூடூத் இணைப்புடன் கூடிய ரிமோட்டும்  கிடைக்கும்.

மற்ற சிறப்பு அம்சங்கள்

ரியல்மே ஸ்மார்ட் டிவி 4கே மாடலில் அமேசான் பிரைம் வீடியோ, நெட்ஃபிக்ஸ், யூடியூப் போன்ற முன்பே நிறுவப்பட்ட செயலிகள் உள்ளன. கூகிள் ப்ளே-ஸ்டோர் மற்றும் உள்ளமைக்கப்பட்ட Chromecast ஆகியவை இந்த டிவிகளில் கிடைக்கின்றன. இது தவிர, இணைப்பிற்காக, Wi-Fi, புளூடூத் v.5.0, இன்ப்ரா ரெட் (ஐஆர்), (IR), 2HDMI, 2USB போர்ட் மற்றும் ஒரு HDMI ARC போர்ட், LAN, AV  ஆகிய அம்சங்கள் உள்ளன

ALSO READ | Aadhaar-PF இணைப்பு கட்டாயம்; இணைக்கவில்லை என்றால் பெரும் நிதி இழப்பு ஏற்படலாம்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News