இந்தியாவில், ரயில் நெட்வொர்க், உலகின் மிக முக்கிய, மிக பெரிய போக்குவரத்து சேவையில் ஒன்று. நாட்டின் உள்ள நகரங்கள் முதல் கிராமங்கள் வரை மூலை முடுக்கை எல்லாம் இணைக்கிறது இந்த ரயில் சேவை. தினமும் கோடிக்கணக்கானோர் இதில் பயணிக்கின்றனர். இன்றைய தேதியில், அனைத்து ரயில்வே அதிகாரிகளும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் பற்றி பெருமையாக பேசிக் கொண்டாலும், ராஜ்தானி எக்ஸ்பிரஸுக்கு இணையான ரயில் இல்லை என்றே எல்லோரும் கூறுவார்கள். சௌகரியம், வசதி, நேரம் தவறாமை என பல விதமான சிறப்பு அம்சங்கள் நிறைந்த இந்த ரயில் அனைத்திலும் தனித்துவமானது. வடக்கு ரயில்வே சமீபத்தில் 2022-23 ஆம் ஆண்டில் அதிக வருவாய் ஈட்டிய 100 ரயில்களின் பட்டியலைத் தயாரித்து வெளியிட்டுள்ளது. அதில் முதல் இடத்தில் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் என்ற பெயர் உள்ளது. வருவாயை அள்ளி தரும் ராஜ்தானி ரயில்களின் விபரங்களை அறிந்து கொள்ளலாம்.
முதல் இடத்தில் பெங்களூர் ராஜ்தானி எக்ஸ்பிரஸ்
வடக்கு ரயில்வேயின் அதிக வருவாய் ஈட்டும் ரயில்களின் பட்டியலில், முதல் இடத்தில் உள்ளது 22692 என்ற ரயில் எண் கொண்ட பெங்களூர் ராஜதானி எக்ஸ்பிரஸ். இந்த ரயில் டெல்லியில் உள்ள ஹஸ்ரத் நிஜாமுதீனில் இருந்து புறப்பட்டு கே.எஸ்.ஆர். பெங்களூரு வரை செல்கிறது. 2022-23 ஆம் ஆண்டில் மொத்தம் 5,09,510 பயணிகள் இந்த ரயிலில் பயணம் செய்துள்ளனர். இதன் மூலம் ரயில்வேக்கு மொத்தம் ரூ.1,76,06,66,339 வருமானம் கிடைத்து உள்ளது.
இரண்டாம் இடத்தில் சியால்தஹ் ராஜ்தானி எக்ஸ்பிரஸ்
12314 சியால்தஹ் ராஜ்தானி எக்ஸ்பிரஸ், தேசிய தலைநகர் டெல்லியில் உள்ள புது தில்லி ரயில் நிலையத்திலிருந்து மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் உள்ள சியால்தஹ் ரயில் நிலையம் வரை இயங்கும் ரயில் தற்போது வருமானம் அதிகம் தரும் ரயில்களில் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. 2022-23 ஆம் ஆண்டில் மொத்தம் 5,09,162 பயணிகள் இதில் பயணம் செய்துள்ளனர். கடந்த ஆண்டு இந்த ரயிலில் இருந்து இந்திய ரயில்வே துறைக்கு ரூ.1,28,81,69,274 வருமானம் வந்தது.
மூன்றாம் இடத்தில் திப்ருகர் ராஹ்தானி எக்ஸ்பிரஸ்
திப்ருகர் ராஜ்தானியின் பெயர் இந்திய ரயில்வேயின் இரயில்களில் வருவாய் அதிகம் தரும் ரயில்களில் மூன்றாவது இடத்தில் உள்ளது. புதுடெல்லி - திப்ருகர் இடையே 20504 என்ற எண் கொண்ட இந்த ரயில் கடந்த ஆண்டு 4,74,605 பயணிகளை இலக்குக்கு ஏற்றிச் சென்றது. இந்த பயணிகளின் மூலம் ரயில்வேக்கு மொத்தம் ரூ.1,26,29,09,697 வருவாய் கிடைத்துள்ளது.
மேலும் படிக்க | மின்னல் வேகத்தில் செல்லும் உலகின் அதிவேக ரயில்... மணிக்கு 600 கிமீ வேகம்..!
நான்காவது இடத்தில் மும்பை ராஜ்தானி எக்ஸ்பிரஸ்
மும்பை ராஜ்தானி எக்ஸ்பிரஸ் புது டெல்லியில் இருந்து மும்பை சென்ட்ரல் வரை இயக்கப்படுகிறது. அதன் எண் 12952. 2022-23 ஆம் ஆண்டில் மொத்தம் 4,85,794 பயணிகள் இந்த ரயிலில் பயணம் செய்துள்ளனர். இந்த ரயிலின் மூலம் ரயில்வேக்கு ஆண்டு முழுவதும் ரூ.1,22,84,51,554 வருவாய் கிடைத்துள்ளது.
ஐந்தாவது இடத்தில் திப்ருகார் ராஜ்தானி எக்ஸ்பிரஸ்
ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில்களில், 12424 என்ற எண் கொண்ட பண்டிட் தீன்தயாள் உபாத்யாய் சந்திப்பு அல்லது முகல்சராய், தனாபூர், பாட்லிபுத்ரா, கதிஹார், நியூஜல்பைகுரி மற்றும் குவஹாத்தி வழியாக கான்பூருக்குச் செல்லும் ரயிலான, திப்ருகர் ராஜ்தானி நாட்டில் ஐந்தாவது அதிக வருவாய் ஈட்டும் ரயில் ஆகும். கடந்த ஆண்டு இந்த ரயிலில் 4,20,215 பயணிகள் தங்கள் பயணத்தை முடித்துள்ளனர். ஒரு வருடத்தில் இந்த ரயிலின் மூலம் ரயில்வேக்கு ரூ.1,16,88,39,769 வருமானம் கிடைத்துள்ளது.
மேலும் படிக்க | 44 நடைமேடைகள்... 67 ரயில்தடங்கள்... உலகின் மிகப்பெரிய ரயில் நிலையம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ