Army Agniveer: ராணுவத்தில் பணிபுரிய ஆர்வமா? இந்தத் தகுதிகள் இருந்தால் அக்னிபாத் அக்னிவீரர் நீங்களே!

Army Agniveer Recruitment 2023: அக்னிபாத் திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்தில் பணிபுரிய அரிய வாய்ப்பு! அக்னிபத் திட்டத்தின் கீழ் 2023-24 ஆட்சேர்ப்பு ஆண்டுக்கான அக்னிவீர் வேலைவாய்ப்புகள்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 16, 2023, 03:39 PM IST
  • அக்னிபாத் திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்தில் பணிபுரிய அரிய வாய்ப்பு!
  • அக்னிபத் திட்டத்தின் கீழ் 2023-24 ஆட்சேர்ப்பு ஆண்டுக்கான வேலைவாய்ப்புகள்
  • அக்னிவீரராக இந்திய ராணுவத்தில் பணிபுரிய தகுதிகள்
Army Agniveer: ராணுவத்தில் பணிபுரிய ஆர்வமா? இந்தத் தகுதிகள் இருந்தால் அக்னிபாத் அக்னிவீரர் நீங்களே! title=

Employment IN Indian Army: அக்னிபாத் திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்தில் பணிபுரிய அரிய வாய்ப்பு! அக்னிபத் திட்டத்தின் கீழ் 2023-24 ஆட்சேர்ப்பு ஆண்டுக்கான அக்னிவீர் வேலைவாய்ப்புகள் தொடர்பான அறிவிக்கை வெளியானது. அக்னிபாத் திட்டத்திற்கான இந்திய ராணுவ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அக்னிபத் திட்டத்தின் கீழ் 2023-24 ஆட்சேர்ப்பு ஆண்டுக்கான அக்னிவீர் நியமனம் தொடர்பான தகவல்களைத் தெரிந்துக் கொள்ளுங்கள்.

இந்தப் பணிகளுக்கு திருமணமாகாத ஆண் விண்ணப்பதாரர்கள் மட்டுமே இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க முடியும். தகுதியும், ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள், joinindianarmy.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

அக்னிவீர் பணிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மார்ச் 15, 2023. தேர்வு ஏப்ரல் 17, 2023 முதல் நடத்த, இந்திய ராணுவம் திட்டமிடப்பட்டுள்ளது.

ஆட்சேர்ப்பு நடைபெறும் இடங்கள்

ஆக்ரா, ஐஸ்வால், மிசோரம், அல்மோரா, அமேதி, பரேலி, பராக்பூர் (WB), பெர்ஹாம்பூர் (WB), கட்டாக் (ஒடிசா), லான்ஸ்டவுன், லக்னோ, மீரட், பித்தோராகர்: மணிப்பூர், ரங்கபாஹர், ஆகிய இடங்களுக்கான ராணுவ மண்டல அலுவலகங்களுக்கான ராணுவ அக்னிவீர் ஆட்சேர்ப்பு நடத்தப்படும்.

அதேபோல, சம்பல்பூர் (ஒடிசா), சிலிகுரி (சிக்கிம் மாநிலத்திற்கு), சிலிகுரி (WB), வாரணாசி, RO கொல்கத்தா, RO ஷில்லாங், மேகாலயா, ZRO புனே NA மற்றும் NA Vet, ZRO புனே சிபாய் பார்மா, ஹவில்தார் (சர்வேயர் தானியங்கி கார்ட்டோகிராபர்) , RO தலைமையகம் டானாபூர், பீகார், கோயம்புத்தூர், கயா, குண்டூர், ஜோர்ஹாட், அருணாச்சலப் பிரதேசம், கதிஹார், முசாபர்பூர், நரங்கி, ராஞ்சி, ரங்காபஹர், நாகாலாந்து, செகந்திராபாத், சில்சார், விசாகப்பட்டினம், ஷில்லாங், மத்திய அசாம், திருச்சிராப்பள்ளி மற்றும் சென்னை 

மேலும் படிக்க | Tripura Election 2023: திரிபுராவில் காங்கிரசுடன் கூட்டு வைத்த இடதுசாரிகள் அரசு அமைக்குமா?

ராணுவ அக்னிவீர் பேரணி ஆட்சேர்ப்பு 2023 தகுதி:

Agniveer (General Duty) (All Arms):10 ஆம் வகுப்பு / மெட்ரிக் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.மொத்தம் 45% மதிப்பெண்களுடன், ஒவ்வொரு பாடத்திலும் 33% என்ற அளவில் மதிப்பெண்கள் வைத்திருக்கவேண்டும். கிரேடிங் முறையைப் பின்பற்றும் போர்டுகளில் படித்தவர்களுக்கு, .தனிப்பட்ட பாடங்களில் D கிரேடு (33% - 40%) 33% மற்றும் ஒட்டுமொத்தமாக C2 கிரேடில் அல்லது மொத்தத்தில் 45%க்கு சமமான கிரேடுக்கு சமமானதாக இருக்க வேண்டும்.

Agniveer (General Duty) (All Arms): 10+2/இடைநிலைத் தேர்வில் இயற்பியல், வேதியியல், கணிதம் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் ஒவ்வொரு பாடத்திலும் 40% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

அக்னிபத் திட்டம் 2023 மூலம் இந்திய ராணுவத்தில் அக்னிவீரருக்கான தேர்வு செயல்முறை பின்வரும் நிலைகளை உள்ளடக்கியது:
ஆன்லைன் எழுத்துத் தேர்வு (CBT)
உடல் திறன் சோதனை மற்றும் உடல் அளவீட்டு சோதனை (PET மற்றும் PMT)
வர்த்தக சோதனை (ஒரு பதவிக்கு தேவைப்பட்டால்)
ஆவண சரிபார்ப்பு
மருத்துவத்தேர்வு
ராணுவ அக்னிபத் திட்டம் PET மற்றும் PMT விவரங்கள்
உயரம், மார்பு, எடை (உடல் அளவீட்டு சோதனை, PMT) தேவை மற்றும் உடல் திறன் தேர்வு (PET) நடைபெறும். விண்ணப்பிபவரின் எடை, உயரத்திற்கு விகிதாசாரமாக இருக்க வேண்டும்.

மேலும் படிக்க | சிட்டிசன் திரைப்பட பாணியில் தவிக்கும் நவீன அத்திப்பட்டி! கண்மாயை காணவில்லை

ராணுவ அக்னிபத் திட்ட காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிப்பது 2023
ராணுவ அக்னிபத் திட்டத்தில் அக்னிவீர் காலியிடங்கள் 2023க்கு விண்ணப்பிக்க இந்தப் படிகளைப் பின்பற்றவும்

இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்

joinindianarmy.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்
விண்ணப்ப படிவத்தை நிரப்பவும்
தேவையான ஆவணங்களை பதிவேற்றவும்
விண்ணப்பப் படிவத்தை அச்சிடவும்

குறிப்பு: அனைத்து விண்ணப்பதாரர்களும் தங்கள் மொபைல் எண்ணை ஆதாருடன் இணைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள், மேலும் பதிவு செய்வதற்கு முன் டிஜி லாக்கர் கணக்கை வைத்திருப்பது நல்லது. விண்ணப்பதாரர்கள் ஆதார் அட்டையில் உள்ள தங்களின் பெயர் மற்றும் பிறந்த தேதி ஆகியவை மெட்ரிகுலேஷன் சான்றிதழின்படி இருப்பதை உறுதிசெய்துக் கொள்ளவும்.

மேலும் படிக்க: மொபைலில் சார்ஜ் விரைவில் காலியாகிறதா? இந்த ஆப்ஸ்லாம் உடனே டெலீட் பண்ணிடுங்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News