இராசாசி அரசு மருத்துவமனையில் வேலை வாய்ப்பு - B.sc தேர்ச்சி போதும்

மதுரை இராசாசி அரசு மருத்துவமனையில் வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.  

Written by - க. விக்ரம் | Last Updated : May 26, 2022, 03:54 PM IST
  • மதுரை இராசாசி அரசு மருத்துவமனையில் வேலை வாய்ப்பு
  • அரசு மருத்துவமனையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு
இராசாசி அரசு மருத்துவமனையில் வேலை வாய்ப்பு - B.sc தேர்ச்சி போதும் title=

மதுரை இராசாசி அரசு மருத்துவமனையில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் ESWL Technician பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

தகுதி:

ESWL Technician பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ கல்வி நிலையங்களில் Urology Technology பாடப்பிரிவில் B.Sc டிகிரி முடித்திருக்க வேண்டும்.

ஊதியம்:

தேர்வாகும் பணியாளர்களுக்கு மாத ஊதியமாக ரூ.18,500 வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேரடியாக நேர்காணல் (Interview) மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் 

மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு மாஸ் செய்தி, ஜூலை ஊதியத்தில் பம்பர் ஏற்றம்

ஆர்வமுள்ளவர்கள், ‘முதல்வர், அரசு இராசாசி மருத்துவமனை மதுரை – 20 பிரிவு பொது – 8 (G8)’ என்ற முகவரிக்கு 30.05.2022 அன்று மாலை 05.45 மணிக்குள் நேரில் சென்று புகைப்படத்துடன் கூடிய தங்களின் விண்ணப்பங்கள் மற்றும் தேவையான சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்க வேண்டுமென கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | போசோகோ பவர் சிஸ்டம் ஆபரேஷன் கார்ப்பரேஷன்:டிப்ளமோ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News