இந்திய அஞ்சல் அலுவலகத்தில் வேலை வாய்ப்பு - முழு விவரம்

இந்திய அஞ்சல் அலுவலகத்தில் வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Written by - க. விக்ரம் | Last Updated : Sep 22, 2022, 01:48 PM IST
  • இந்திய அஞ்சல் அலுவலகத்தில் வேலை வாய்ப்பு
  • 19 காலி பணியிடங்கள் இருக்கின்றன
  • செப்டம்பர் 26ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள்
 இந்திய அஞ்சல் அலுவலகத்தில் வேலை வாய்ப்பு - முழு விவரம் title=

இந்திய அஞ்சல் துறையின் கீழ் இயங்கிவரும் அஞ்சல் மோட்டார் சேவை எனும் Mail Motor Service (MMS) ஆனது Staff Car Driver காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 19 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலி பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Staff Car Driver பணிக்கென மொத்தம் 19 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 27 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.19, 900 மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் Driving Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | EPFO: உங்கள் பிஎஃப் எண்ணில் மறைந்துள்ள விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி? விவரம் இதோ

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/IP_30082022_MMS_Eng.pdf என்ற தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். விண்ணப்பிப்பதற்கு செப்டம்பர் 26ஆம் தேதி கடைசி நாளாகும்.

மேலும் படிக்க | Train ticket Booking: ஆன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவு விதிகளில் மாற்றம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News