கனரா வங்கியில் புதிய வேலை வாய்ப்பு - டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

கனரா வங்கியில் புதிய வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Written by - க. விக்ரம் | Last Updated : Aug 29, 2022, 11:47 AM IST
  • கனரா வங்கியில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது
  • மொத்தம் 14 பணியிடங்கள் காலியாக இருக்கின்றன
  • செப்டம் 5ஆம் தேதி விண்ணப்பிப்பதற்கு கடைசி நாளாகும்
 கனரா வங்கியில் புதிய வேலை வாய்ப்பு - டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் title=

கனரா வங்கி செக்யூரிட்டீஸ் லிமிடெட் (CBSL) பொது ஆட்சேர்ப்பு திட்டம் மற்றும் சிறப்பு ஆட்சேர்ப்பு இயக்ககம் 2022-23 (பின்னணி – SC, ST & OBC) ஆனது துணை மேலாளர், உதவி மேலாளர் மற்றும் ஜூனியர் அதிகாரி பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது.கனரா ஆட்சேர்ப்பு 2022 க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அனைத்து விவரங்களையும் அறிந்து விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள்:

Deputy Manager-Company Secretary – 01

Assistant Manager – 03

Junior Officer – 04

Assistant Manager-IT Database Administrator – 01

Assistant Manager Backoffice – 01 என மொத்தம் 14 பணியிடங்கள் காலியாக உள்ளன.

சம்பள விவரம்:

Deputy Manager: ரூ.31800-1300(5), 37000-1400-(5), 44000 (Pay scale 31800-44000) + D.A, HRA & Conveyance Allowance.

Assistant Manager: ரூ.21200 – 1200 (5)- 26000-1300 (5) -32500 (Pay scale21,200- 32500) + D.A, HRA & Conveyance Allowance

மேலும் படிக்க | இந்த அஞ்சலக திட்டத்தின் மூலம் பணத்தை இரட்டிப்பாக்கலாம்! முழு விவரம்!

Junior Officer on Contract: Monthly emoluments – ரூ.29,000 (1) – 31000(2) – 34000(3)(Approx. CTC Rs.3.48 lacs excluding Leave Components)

தேர்வு செய்யப்படும் முறை:

மேற்கூறிய பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் முதலில் குறுகிய பட்டியல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பின்னர் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.

மேலும் படிக்க | எல்ஐசியில் வேலை வாய்ப்பு - 25,000 ரூபாய் சம்பளம்

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் https://www.canmoney.in/pdf/Aplication%20for%20GEN%20&%20SPL%20RECRUITME... என்ற இணையதள முகவரியில் இருக்கும் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து செப்டம்பர் 5, 2022க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் படிக்க | 8th Pay Commission: ஊழியர்களுக்கு நல்ல செய்தி கிடைக்குமா? ஊதிய உயர்வு பற்றிய அப்டேட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News