நம் அனைவருக்கும், வாழ்வின் ஏதேனும் ஒரு கட்டத்தில் காதல் வந்திருக்கும். அந்த காதல் கை சேர்ந்திருக்கலாம், கை நழுவி போய் இருக்கலாம், இருவருக்கும் பிடித்திருந்து சேருவதற்கு வாய்ப்பு கிடைக்காமல் போய் இருக்கலாம். அல்லது, இது போன்ற அனைத்து வகையான காதலை நாம் அனுபவித்தவராக இருக்கலாம். ஒரு சிலர், தங்களின் முன்னாள் காதலருடன், அவர்களுடனான உறவு முடிந்த பின்பும் கூட நண்பர்களாக தொடருவர். இது சரியா? இதனால் வரும் பிரச்சனைகள் என்ன?
முன்னாள் காதலர்கள் நண்பர்களாக இருக்க காரணம்..
>ஒரு சிலர், அந்த காதல் உறவில் இருக்கும் போது உண்மையாகவே நட்புணர்வை எதிரில் இருக்கும் நபரிடம் உணர்ந்திருப்பர். அந்த உறவு நல்ல புரிதலுடன் இருந்திருக்கும். இதனால், ஒரு சில முன்னாள் காதலர்கள் நண்பர்களாக இருக்கின்றனர்.
>இருவரும் ஒருவர் மீது ஒருவர் அதீத மரியாதை வைத்த நபராக இருந்திருப்பர். இதனால், அந்த உறவு அதே மரியாதையுடன் நட்பாக தொடரலாம்.
>இருவரும் ஒரே மாதிரியான எண்ணங்கள் கொண்டவர்களாக இருப்பர். இது, அவர்களின் காதலருடன் அடிக்கடி நட்பு பாராட்ட ஒரு வாய்ப்பாக இருக்கலாம்.
>காதல் உறவில் இருக்கும் போது உணர்வு ரீதியாக மிகவும் ஒற்றுதலுடன் இருப்பர். இதனால் அவர்கள் அந்த உறவு முடிந்தவுடன் இருவரும் இதனாலும் நண்பர்களாக இருக்க காரணம் இருக்கிறது.
மேலும் படிக்க | ஆண்களே..! காதலிக்கும் போது ‘இந்த’ 4 தவறுகளை மட்டும் செய்து விடாதீர்கள்!
இது சரியா? தவறா?
ஒருவர், தனது முன்னாள் காதலருடன் நண்பராக இருப்பது சரியா, தவறா என்பது அவர்கள் எடுத்துக்கொள்வதை பொறுத்தும், அவர்கள் கையாள்வதை பொறுத்தும்தான் இருக்கிறது. தான் முன்னர் காதலித்த நபரை ஒரு ஆப்ஷனாக வைத்துக்கொள்ளாமல், காதல் ரீதியான ஒட்டுதல் இன்றி, உண்மையான அக்கறையுடன் நண்பராக இருப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை என்று சிலர் கூறுகின்றனர். இன்னும் சிலர், தன் வாழ்வில் இன்னொரு உறவு வந்த பிறகு, ஒருவர் தனது முன்னாள் காதலருடன் நண்பராக இருப்பது நல்லதல்ல என்றும் கூறுகின்றனர். அறிவில் முதிர்ச்சி பெற்ற மனிதர்கள், இதை கையாள தெரிந்தவர்களாக இருந்தால், தாராளமாக தங்களது முன்னாள் காதலருடன் நண்பராக இருக்கலாம் என்று ஒரு தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
உங்களை நீங்களே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்விகள்..
உங்கள் முன்னாள் காதலருடன் நீங்கள் நண்பர்காக இருப்பது குறித்து சந்தேகம் இருந்தால் இந்த 2 கேள்விகளை உங்களிடம் நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்.
1.நான் ஏன் அவருடன் நண்பராக இருக்க வேண்டும்?
இந்த கேள்வியை கேட்டு, அவருடன் நண்பராக இருப்பதால் என்னென்ன விளைவுகள் வரலாம், என்னென்ன பயன்கள் பெறலாம் என்பதை பட்டியலிடுங்கள். இதில், நல்லது அதிகமாக இருந்தால் நீங்கள் நண்பராக இருக்கலாம்.
2.என் முன்னாள் காதலருடன் நண்பராக இருக்கும் அளவிற்கு முதிர்ச்சி பெற்றிருக்கிறேனா?
உங்கள் முன்னாள் காதலருடன் எந்த உள் நோக்கத்துடன் நீங்கள் நண்பராக விரும்புகிறீர்கள் என்பதை ஆராயுங்கள். அவருடன் மீண்டும் சேர வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருக்கிறதா? அல்லது உண்மையாகவே இது அக்கறையின் வெளிபாடுதானா? என்பதை உங்களிடம் நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். உங்கள் முன்னாள் காதலருக்கு வேறு ஒரு பெண்ணை அல்லது ஆணை பிடித்திருந்தால் உங்களால் அதை தாங்கிகொள்ள முடியுமா என்பதை எடை போடுங்கள்.
யாரெல்லாம் நண்பர்களாக இருக்க கூடாது?
>முன்னாள் காதலர், மிகவும் டாக்ஸிக் ஆன நபராக இருந்தால் அவருடன் மீண்டும் நண்பராக இருப்பதை தவிர்க்கவும்.
>உங்களின் முன்னாள் காதலர், உங்கள் உடல் ரீதியாக மற்றும் மன ரீதியாக உங்களை துன்புறுத்தியவராக இருந்தால் அவருடன் தொடர்பில் இருப்பதை தவிர்க்கவும்.
>உங்களின் பிரேக்-அப், மிகவும் மோசமான வகையில் முடிந்திருந்தால், அதில் மூன்றாம் நபர் நுழையும் அளவிற்கு பிரச்சனை நடந்திருந்தால் அந்த நபருடன் மீண்டும் நண்பராக இருப்பதை தவிர்க்கவும்.
மேலும் படிக்க | ஒன் சைட் லவ்வை டபுள் சைடாக மாற்றுவது எப்படி? ஈசியான காதல் டிப்ஸ்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ