குளிக்கும் போது சிறுநீர் கழிப்பது நல்லதா கெட்டதா? பதில் இதோ!

சிலருக்கு குளிக்கும் போது சிறுநீர் கழிக்கும் பழக்கம் இருக்கும். இது உண்மையில் நல்லதா கெட்டதா? இங்கே பார்ப்போம்.   

Written by - Yuvashree | Last Updated : Nov 20, 2023, 06:02 PM IST
  • நம்மில் பலருக்கு குளிக்கும் போது சிறுநீர் கழிக்கும் பழக்கம் இருக்கும்.
  • இது குறித்து வெளியில் பேச மாட்டோம்.
  • இது உண்மையில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாதா?
குளிக்கும் போது சிறுநீர் கழிப்பது நல்லதா கெட்டதா? பதில் இதோ! title=

நம்மில் பலர் நாம் தனிமையில் இருக்கும் போது செய்யும் விஷயங்கள் குறித்து பொது வெளியில் பேச மாட்டோம். அப்படிபட்ட விஷயங்களுள் ஒன்று, குளிக்கும் போது சிறுநீர் கழிக்கும் பழக்கம். பலரும் இது குறித்து பேசுவதில்லை என்பதற்காக இது யாருக்கும் இல்லாத பழக்கம் என்றாகி விடாது. ரிலாக்ஸாக ஒரு நாள் குளித்துக்கொண்டிருக்கும் போது திடீரென்று சிறுநீர் கழிக்க வேண்டும் என்பது போன்ற உணர்வு ஏற்படும். அப்படி ஏற்படுகையில், தனியாக சென்று சிறுநீர் கழிப்பதற்கு பதிலாக அப்படியே கழித்துவிடுவோம். இது நல்ல பழக்கமா? 

மருத்துவர்கள் கூறுவது என்ன? 

குளிக்கும் போது சிறுநீர் கழிப்பது சுத்தமானதா என்பதுதான் பலரின் கேள்வியாக இருக்கிறது. இதனால் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டு விடுமோ என்றும் பயப்படுகின்றனர். ஆனால், உண்மையில் இந்த பழக்கத்தால் எந்த பிரச்சனையும் ஏற்படாது என்கின்றனர் ஒரு தரப்பு மருத்துவர்கள். ஆனால், இதை நம் வீட்டில் உள்ள கழிவறையில் செய்தால் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் பொதுவாக இருக்கும் குளியறையில் இது போன்று செய்யக்கூடாது எனவும் அறிவுருத்துகின்றனர். சிறுநீரில் வாழும் பாக்டீரியாக்கள் எதுவும் இருக்காது. அப்படி, பொது கழிப்பிடத்தில் இது போன்று செய்தால்தான் நம் உடலில் பிரச்சனைகள் ஏற்படும் என்பது ஒரு சில மருத்துவர்களின் கருத்தாக உள்ளது. 

மேலும் படிக்க | வாய் துர்நாற்றத்தை போக்க எளிமையான 5 வீட்டு வைத்தியங்கள்!

மாற்றுக்கருத்துகள்..

குளிக்கும் போது சிறுநீர் கழிப்பது நல்லதா கெட்டதா எனும் விவாதம் மருத்துவர்கள் சிலருக்குள்ளேயே உள்ளது. அதன்படி, இன்னொரு தரப்பினர் கூறுவது என்னவென்றால் குளிக்கும் போது சிறுநீர் கழிப்பது நமது சிறுநீர்ப்பையிலும் இடுப்பின் அடியில் இருக்கும் தசைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. ஏனென்றால், குளிக்கும் போது சிறுநீர் கழிக்கும் நிலைக்கும் சிறுநீர் கழிக்கும் போது அமரும் நிலைக்கும் பல வித்தியாசங்கள் உண்டு. இதனால் இந்த தாக்கம் ஏற்படக்கூடும் என்பது அவர்களின் கருத்தாக உள்ளது. 

சருமத்திற்கு நல்லதா? 

காலில் ஏற்படும் சேற்றுப்புண்ணை சிறுநீர் குணப்படுத்தும் என உலகில் உள்ள மக்கள் பலர் நம்புவதுண்டு. ஏனென்றால் சிறுநீரில் யூஇயா எனப்படும் வேதிப்பொருள் உள்ளது. இது, நம் சருமத்தில் ஏற்பட்ட புண்ணை விரைவில் குணப்படுத்தும் வல்லமையை கொண்டுள்ளது. ஆனால், இதனால்தான் சேற்றுப்புண்ணை குணப்படுத்த முடியும் என்பதற்கான எந்த மருத்துவ ஆராய்ச்சிகளும் இல்லை. 

நல்லதா கெட்டதா? 

மருத்துவர்கள் கலவையான கருத்துக்களை கூறுவதால் குளிப்பதற்கு பின்னர் அல்லது குளிப்பதற்கு முன்னர் சிறுநீர் கழிப்பது நல்லது என சிலர் கருதுகின்றனர். எப்போதாவது குளிக்கும் போது அப்படி சிறுநீர் கழித்தாலும் அதை தினசரி பழக்கமாக மாற்ற வேண்டாம். 

மேலும் படிக்க | உடல் எடையை உடனடியாக குறைக்க வேண்டுமா? ‘இந்த’ 4 உணவுகளை மட்டும் எடுத்துக்கோங்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News