டூர் பிளான் பண்ணியாச்சா.. IRCTC வழங்கும் அசத்தலான மாஸ் டூர் பேக்கேஜ்

IRCTC Royal Rajasthan Tour Package: IRCTC இன் இந்த டூர் பேக்கேஜ் ஜனவரி 21 முதல் தொடங்கி ஜனவரி 28 வரை இருக்கும். ஐஆர்சிடிசியின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் சுற்றுலாப் பயணிகள் டூர் பேக்கேஜூக்காக முன்பதிவு செய்யலாம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Dec 23, 2023, 08:38 AM IST
  • 8 நாட்கள் டூர் பேக்கேஜ், கொல்கத்தாவில் இருந்து தொடங்குகிறது.
  • இந்த ராஜஸ்தான் டூர் பயணிகளுக்கான இடமாகும்.
  • ஒரு நபருக்கு ரூ.54,800 கட்டணம் செலுத்த வேண்டும்.
டூர் பிளான் பண்ணியாச்சா.. IRCTC வழங்கும் அசத்தலான மாஸ் டூர் பேக்கேஜ் title=

ஐஆர்சிடிசி ராயல் ராஜஸ்தான் டூர் பேக்கேஜ்: புதிய ஆண்டிற்கான ராஜஸ்தான் டூர் பேக்கேஜை ஐஆர்சிடிசி (IRCTC) அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த டூர் பேக்கேஜில், ராஜஸ்தானின் பல்வேறு இடங்களுக்குச் செல்லும் வாய்ப்பை நீங்கள் பெறுவீர்கள். இந்த டூர் பேக்கேஜ் டேகோ அப்னா தேஷின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நீங்களும் புத்தாண்டை மகிழ்ச்சியுடன் மற்றும் மறக்கமுடியாத தருணத்துடன் தொடங்க விரும்பினால், இந்த டூர் பேக்கேஜ் உங்களுக்காக ஒரு அற்புதமான மற்றும் பிரமாண்டமான சலுகையைக் கொண்டு வந்துள்ளது.

ஐ.ஆர்.சி.டி.சி., அவ்வப்போது (Indian Railway Catering and Tourism Corporation-IRCTC) சுற்றுலாப் பயணிகளுக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பேக்கேஜ்களை வழங்கி வருகிறது. இதன் மூலம் நாட்டில் சுற்றுலா மேம்படுவதுடன், சுற்றுலாப் பயணிகளும் மலிவாக பயணம் செய்கின்றனர். இதில், சுற்றுலா பயணிகளுக்கான உணவு மற்றும் தங்குமிடத்திற்கான முழுமையான ஏற்பாடுகள் இலவசமாக வழங்கப்படுகிறது. இப்போது ஐஆர்சிடிசியின் இந்த டூர் பேக்கேஜ் பற்றி விரிவாக இங்கே தெரிந்துக்கொள்வோம்.

மேலும் படிக்க | அரசு ஊழியர்களுக்கு புத்தாண்டு பரிசு.. 4% DA ஹைக், சம்பளம் உயர்வு

8 நாட்கள் டூர் பேக்கேஜ், கொல்கத்தாவில் இருந்து தொடங்குகிறது:
ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ் 7 இரவுகள் மற்றும் 8 பகல்களுக்கானது. மேலும் இந்த டூர் பேக்கேஜ் கொல்கத்தாவில் இருந்து தொடங்கும். இந்த டூர் பேக்கேஜுக்கு ராயல் ராஜஸ்தான்  (ROYAL RAJASTHAN) என்று பெயரிடப்பட்டுள்ளது. ராஜஸ்தான் "மகாராஜாக்களின் நாடு" என்றும் அழைக்கப்படுகிறது. ராஜஸ்தானின் பெருமை அதன் கம்பீரமான அரண்மனைகள், கோட்டைகள் மற்றும் நினைவுச்சின்னங்களால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த சமஸ்தானத்தின் துடிப்பான கலாச்சாரம் மற்றும் வளமான பாரம்பரியம் உலகம் முழுவதிலுமிருந்து எண்ணற்ற சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. பிரமிக்க வைக்கும் அரண்மனைகள், பிரமாண்டமான கோட்டைகள், சுவையான உணவு வகைகள், பலதரப்பட்ட கலாச்சாரங்கள் மற்றும் அன்பான மனிதர்களின் வண்ணமயமான கலவையுடன் ராஜஸ்தான், 'இந்தியாவின் பெருமை' என்று பெருமையுடன் அழைக்கப்படலாம்.

இந்த ராஜஸ்தான் டூர் பயணிகளுக்கான இடமாகும், ஐஆர்சிடிசி (IRCTC) இன் இந்த டூர் பேக்கேஜ் ஜனவரி 21 முதல் தொடங்குகிறது, மேகும ஜனவரி 28, 2024 வரை நீடிக்கும். இந்த டூர் பேக்கேஜில் ஜெய்ப்பூரில் உள்ள ரெட் ஃபாக்ஸ், புஷ்கர்-சாவித்ரி ரிசார்ட், ஜெய்சால்மரின் சாரா கோட்டை, சாம் பாலைவனம், ஜோத்பூர் மற்றும் உதய்பூரில் உள்ள ரெட் ஃபாக்ஸை நீங்கள் பார்வையிட வாய்ப்பு தரப்படம். 

டூர் பேக்கேஜ் கட்டண விவரம்:
IRCTC இன் இந்த டூர் பேக்கேஜுக்கான கட்டணம் வித்தியாசமாக வைக்கப்பட்டுள்ளது. இந்த டூர் பேக்கேஜில் தனியாக பயணம் செய்தால், ஒரு நபருக்கு ரூ.54,800 கட்டணம் செலுத்த வேண்டும். அதே சமயம், இந்த டூர் பேக்கேஜில் இரண்டு பேருடன் பயணம் செய்தால், ஒரு நபருக்கு ரூ.45,010 கட்டணம் செலுத்த வேண்டும். அதே நேரத்தில், இந்த டூர் பேக்கேஜில் நீங்கள் மூன்று பேருடன் பயணம் செய்தால், ஒரு நபருக்கு 42,100 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். அதேசமயம் 5 முதல் 11 வயது வரையிலான குழந்தைகள் இந்த டூர் பேக்கேஜில் உங்களுடன் பயணம் செய்தால், அவர்களின் கட்டணம் 38,850 ஆக இருக்கும். அதே நேரத்தில், 2 முதல் 4 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இந்த டூர் பேக்கேஜில் உங்களுடன் பயணம் செய்தால், அவர்களின் கட்டணமாக ரூ.37,100 செலுத்த வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்:
ஐஆர்சிடிசியின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் சுற்றுலாப் பயணிகள் இந்த டூர் பேக்கேஜை முன்பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு 8595904071,9002040126 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளவும்.

மேலும் படிக்க | நாம் வீட்டில் எவ்வளவு பணம் வைத்திருக்கலாம்? வருமான வரியின் புதிய விதிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News