கொரோனா காலத்தில் அதிரடி வளர்ச்சி! லாபத்தில் திளைக்கும் காப்பீட்டு நிறுவனங்கள்!

கொரோனா நோய் தொற்றின் பயம் காரணமாக பொது மக்கள் அதிக அளவில் காப்பீடுகளை எடுத்துள்ளனர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 29, 2022, 11:59 AM IST
  • தனியார் நிறுவனங்களில் பெண்களுக்கான பாலிசிகளின் விகிதம் 27 சதவீதமாகவும், எல்ஐசியில் 35 சதவீதமாக அதிகரிப்பு.
  • பிப்ரவரியில் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் புதிய பாலிசிகளின் ஃப்ரீமியம் தொகை வசூல் 22.47 சதவிகிதம் உயர்வு.
கொரோனா காலத்தில் அதிரடி வளர்ச்சி! லாபத்தில் திளைக்கும் காப்பீட்டு நிறுவனங்கள்! title=

காப்பீடு திட்டங்கள் என்பது வாழும் போதும், வாழ்ந்த பின்பும் மக்களின் வாழ்க்கையைப் பாதுகாப்பதற்கான திட்டங்களாக விலங்குகின்றன. இதில் உயிர் காக்கும் மருத்துவ காப்பீடு, அசையா பொருட்களின் காப்பீடு, ஆயுள் காப்பீடு என பல வகைகள் இருப்பினும், இதில் மிகவும் முக்கியமான திட்டமாக ஆயுள் காப்பீட்டு திட்டமே கருதப்படுகிறது.

ஆயுள் காப்பீட்டு திட்டம் கடந்த 30 ஆண்டுகளில் மாபெரும் வளர்ச்சி அடைந்துள்ளது என்று கூறுவது மிகையாகாது. 30 வருடங்களுக்கு முன்பு படித்தவர்களுக்கும், அரசு பணியாளர்களுக்கும் மட்டுமே பரிட்சயமான இந்த ஆயுள் காப்பீட்டு திட்டம், இப்போது தனியார் நிறுவன பணியாளர்கள், கூலி பணியாளர்கள் முதற்கொண்டு அனைவருக்கும் தெரிந்திருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் கடந்த 2 ஆண்டுகளில் இதன் வளர்ச்சி பல்மடங்கு அதிகரித்துள்ளது.

பல்லாயிரம் குடும்பங்களுக்கு பயனளித்து வரும் இந்த திட்டமானது குடும்பத் தலைவர்களின் எதிர்கால நிகழ்வுகள் குறித்த பயத்தை கையாளுவதற்கு பெரும் உதவி செய்து வருகிறது.

எதிர்பாராத நிகழ்வுகளான மாரடைப்பு, விபத்து போன்றவற்றில் தங்களது உயிர் பறிபோகும் தருவாயில் குடும்பத்தின் எதிர்காலம் என்னவென்ற கேள்விக்குறியுடன் பலர் கண்களை மூடுகின்ற நிலையை தற்போது ஆயுள் காப்பீடு திட்டங்கள் குறைத்துள்ளன.

மேலும் படிக்க | SBI Alert: இதை மட்டும் செய்யாதீர்கள், கணக்கில் உள்ள பணம் காலியாகிவிடும் 

அண்மையில் லட்சக் கணக்கானோரைப் பாதித்த கொரோனா தொற்றுநோய் உலக மக்களின் உயிர் பயத்தைத் தூண்டிவிட்டுள்ளது. இந்தத் தொற்று சிறியவர் பெரியவர் என்று வயது பாராமல் தனது கோர முகத்தைக் காட்டியது குறிப்பிடதக்கது.

இதற்கிடையில் மக்கள் ஆயுள் காப்பீட்டு திட்டத்தின் மீது ஆர்வத்தை காட்டத் தொடங்கியுள்ளனர். கொரோனா 3-வது அலையால் டிசம்பர் 2021ம் ஆண்டு முதல் ஜனவரி 2022 வரை ஊரடங்கு நடைமுறைகளுக்கு அமல்படுத்தப்பட்ட பிறகு, பிப்ரவரியில் வணிக பீரியம் 22.47 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இதன் மூலம் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் 27,464 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளன.

எஸ்பிஐ தனது அறிக்கையில், "பிப்ரவரியில் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் புதிய பாலிசிகளின் ஃப்ரீமியம் தொகை வசூல் 22.47 சதவிகிதம் உயர்ந்து. ரூ.27,464.76 கோடியாக உள்ளது, LIC இன் புதிய பாலிசிகளின் ஃப்ரீமியம் தொகை வசூல், 35.4 சதவிகிதம் உயர்ந்து ரூ.17,849.34 கோடியாகவும், தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் 5 சதவிகிதம் வளர்ச்சியடைந்து ரூ. 9,975 கோடியாகவும் உள்ளது" என குறிப்பிட்டுள்ளது.

இதில், பெண்களின் பெயரில் காப்பீடு விற்பனையும் அதிகரித்துள்ளது குறிப்பிடதக்கது. தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களில் பெண்களுக்கான பாலிசிகளின் விகிதம் 27 சதவீதமாகவும், எல்ஐசியின் பாலிசிகள் 35 சதவீதமாகவும் தற்போது உள்ளது.

மேலும் படிக்க | குறைந்த வட்டியில் நகைக்கடன் வழங்கும் ‘சில’ வங்கிகள் விபரம் இதோ..!!! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News