புதுடெல்லி: கொரோனா காலத்திற்குப் பிறகு முதல் முறையாக மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் தடை செய்யப்பட்டிருந்த பொதுப் பெட்டிகளை மீண்டும் செயல்படுத்த வடக்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. புத்தாண்டு முதல் 10 ஜோடி ரயில்களில் பொது டிக்கெட் மூலம் பயணிகள் பயணிக்க முடியும். இந்த மாற்றங்கள் ஜனவரி 1, 2022 முதல் அமல்படுத்தப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. பொதுப் பெட்டியை மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தபின், குறைந்த கட்டணத்தில் டிக்கெட் எடுத்து பயணிகள் இந்த ரயில்களில் பயணிக்க முடியும். குறுகிய தூரம் செல்லும் பயணிகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த ரயில்களில் அன்ரிசர்வ் டிக்கெட் வசதி:
கீழே குறிப்பிடப்பட்டுள்ள ரயில்களின் பொதுப் பெட்டிகளில் பயணிகளுக்கு பயணிக்க ஜனவரி 1-ம் தேதி முதல் டிக்கெட் வழங்கப்படும்.
5069-5070- கோரக்பூர்-ஐஷ்பாக்-கோரக்பூர் இன்டர்சிட்டி
5008-5007- வாரணாசி-லக்னோ-வாரணாசி
2531-2532- கோரக்பூர்-லக்னோ-கோரக்பூர் இன்டர்சிட்டி
5103-5104- கோரக்பூர்-வாரணாசி-கோரக்பூர் இன்டர்சிட்டி
5113-5114- கோம்திநகர்-சப்ரா கச்சாரி-கோம்திநகர்
5083-5084- ஃபரூக்காபாத்-சாப்ரா-ஃபரூக்காபாத்
5105-5106- சாப்ரா-நௌதன்வா-சாப்ரா எக்ஸ்பிரஸ்
5009-5010- கோரக்பூர்-மைலானி-கோரக்பூர் எக்ஸ்பிரஸ்
5043-5044- லக்னோ-கத்கோடம்-லக்னோ எக்ஸ்பிரஸ்
5054-5053- லக்னோ-சாப்ரா-லக்னோ எக்ஸ்பிரஸ்
ALSO READ | IRCTC வழங்கும் புதிய சேவை! டிக்கெட்டை ரத்து செய்தால் உடனடியாக பணம் கிடைக்கும்!
ரயில்வேவின் வருமானம் அதிகரிக்கும்:
எக்ஸ்பிரஸ் ரயில்களில் பொது டிக்கெட் வசதி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, முன்பதிவு என்ற பெயரில் கூடுதல் கட்டணத்தில் இருந்து பயணிகளுக்கு நிவாரணம் கிடைக்கும். முன்பதிவு என்ற பெயரில் 15 முதல் 30 ரூபாய் வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது பயணிகளின் பாக்கெட்டை தான் பாதிக்கிறது மற்றும் அன்ரிசர்வ் டிக்கெட் வசதி அறிமுகம் செய்யப்படுவதால், ரயில்வேயின் வருமானமும் உயர வாய்ப்புள்ளது.
"டிக்கெட் புக்" செய்யவில்லை என்ற கவலை வேண்டாம்:
சில காரணங்களால் முன்பதிவு செய்ய முடியாத பயணிகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அத்தகைய பயணிகள் இனி நேரடியாக நிலையத்திற்குச் சென்று அன்ரிசர்வ் டிக்கெட்டுகளை வாங்க முடியும். மேலும் சிரமமின்றி பயணிக்க முடியும். தற்போதைக்கு இதை சில வழித்தடங்களில் இயங்கும் ரயில்களில் மட்டும் தொடங்க வடக்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. அதேநேரத்தில் ஒருவேளை நாட்டில் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்கவில்லை என்றால், வரும் நாட்களில் இந்த வசதி மற்ற ரயில்களிலும் செயல்படுத்தப்படும்.
ALSO READ | அம்ம்ம்மா.... செல்லமா வரவேற்ற மகனை செருப்பாலயே அடித்த தாயின் வைரல் வீடியோ
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR