இந்தியாவில் நீங்கள் முன்கூட்டியே ரயிலில் முன்பதிவு செய்யாவிட்டால், உறுதிசெய்யப்பட்ட ரயில் டிக்கெட்டுகளைப் பெறுவது சவாலானதாக இருக்கும். முன்பு, கடைசி நிமிட பயணத்திற்கான தட்கல் டிக்கெட்டுகளை பெற மக்கள் ரயில் நிலையங்களில் நீண்ட வரிசையில் நின்று கொண்டிருந்தனர். இருப்பினும், இந்த டிஜிட்டல் யுகத்தில் IRCTC உதவியுடன் ஆன்லைனில் தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது மிகவும் எளிதாகிவிட்டது. இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) என்பது வாடிக்கையாளர்களுக்கு ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய உதவும் ஒரு அரசு தளமாகும். ஐஆர்சிடிசி தட்கல் டிக்கெட் ஆன்லைன் முன்பதிவை, பயண தேதிக்கு 24 மணி நேரத்திற்கு முன்பே செய்யப்படலாம். AC வகுப்பு டிக்கெட்டுகள் (CC/2A/3A/3E/EC) 10:00 மணிக்கும், AC அல்லாத டிக்கெட்டுகளை (FC/SL/2S) 11:00 மணி முதல் முன்பதிவு செய்யலாம். உதாரணமாக, ஒரு வாடிக்கையாளர் நவம்பர் 10 அன்று பயணம் செய்ய வேண்டும் என்றால், நவம்பர் 9 முதல் ஏசி கோச்க்கு 10:00 மணி மற்றும் ஏசி அல்லாத கோச்க்கு 11:00 மணி முதல் டிக்கெட்டுகளை புக் செய்யலாம்.
மேலும் படிக்க | அடிச்சது ஜாக்பாட்! ஃபிக்சட் டெபாசிட்களுக்கு 9.11% வரை வட்டி, எந்த வங்கி கொடுக்கிறது?
ஆன்லைனில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி?
- IRCTC இணையதளத்தில் பதிவு செய்யவும் - https://www.irctc.co.in/nget/train-search அல்லது மொபைல் ஆப்பை பயன்படுத்தவும்.
- தேதி, வகுப்பு, தொடங்கும் இடம் மற்றும் சேருமிடம் போன்ற பயண விவரங்களை உள்ளிடவும் (தட்கல் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க மறக்காதீர்கள்.)
- ரயில் பெயர்களின் பட்டியல் வலைப்பக்கத்தில் காட்டப்படும். வேறு ரயில்களைத் தேட நேரங்களையும் வகுப்புகளையும் மாற்றலாம்.
- ரயிலைத் தேர்ந்தெடுத்து டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யவும்
- பயணிகளின் விவரங்கள், மொபைல் எண் மற்றும் கேப்ட்சாவை உள்ளிட்ட வேண்டும்.
- பணம் செலுத்தி வெற்றிகரமான கட்டணத்திற்குப் பிறகு, eTicket ஐப் பெறலாம்.
ஐஆர்சிடிசியின் இணையதளத்தில் உள்ள தகவலின்படி, உறுதிப்படுத்தப்பட்ட தட்கல் டிக்கெட்டுகளுக்குத் திரும்பப் பணம் வழங்கப்படாது. காத்திருப்புப் பட்டியல் மற்றும் உறுதி செய்யப்பட்டதா தட்கல் டிக்கெட்டுகளுக்கான பணத்தை திருப்ப பெறலாம். நீங்கள் குரோம் அல்லது வேறு ஏதேனும் புரவுசர்களை பயன்படுத்தினால், cache டேட்டாவை கிளியர் செய்யவும், அப்படி செய்தால் முன்பதிவு செய்வதற்கான வாய்ப்புகளை அதிகரித்து டிக்கெட் கிடைக்காமல் போகும் வாய்ப்பு குறையும். மேலும் AD பிளாக்கர் பயன்படுத்துவதும் நல்லது. ஐஆர்சிடிசி கிரெடிட் கார்டுகள், டெபிட் கார்டுகள், டிஜிட்டல் வாலட்கள் மற்றும் யுபிஐ உள்ளிட்ட பலவிதமான கட்டண விருப்பங்களை வழங்குகிறது. இருப்பினும், கிரெடிட் அல்லது டெபிட் கார்டு விவரங்களை உள்ளிடுவதற்கு அதிக நேரம் எடுக்கும், இதன் விளைவாக டிக்கெட்டுகள் கிடைக்காமல் போகும். முன்பதிவு செயல்முறையை விரைவுபடுத்தவும், உறுதிப்படுத்தப்பட்ட முன்பதிவுகளை விரைவாகப் பெறவும், உங்கள் IRCTC இ-வாலட்டில் பணத்தைப் பராமரிக்க வேண்டும். நெட் பேங்கிங் அல்லது டெபிட் கார்டு பரிவர்த்தனைகளைப் பயன்படுத்தி உங்கள் IRCTC இ-வாலட்டில் பணத்தை டெபாசிட் செய்யலாம். அவ்வாறு செய்வதன் மூலம் டிக்கெட் முன்பதிவுகளை விரைவுபடுத்தலாம் மற்றும் நீங்கள் விரும்பிய பயண டிக்கெட் பெரும் வாய்ப்பை அதிகரிக்கலாம். குறிப்பாக ஆன்லைன் பேங்கிங்கில் ஈடுபடும்போது மோசடிகள் மற்றும் குறித்து ஜாக்கிரதை இருக்க வலியுறுத்தப்படுகிறது. OTPகள் மற்றும் முக்கியமான தகவல்களை பகிர வேண்டாம்.
மேலும் படிக்க | மூத்த குடிமக்களுக்கான செம ஜாக்பாட்.. டபுள் வருமானம் கிடைக்கும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ