IRCTC Meghalaya Tour Package:: கடவுளே குடியிருக்க விரும்பும் இயற்கை அழகு கொட்டிக் கிடக்கும் மாநிலம் தான் மேகாலயா. சுற்றுலா தான் இந்த மாநிலத்தின் முக்கிய வருமானம். உலகின் மிக சுத்தமான இடங்களின் பட்டியலிலும் இடம்பிடித்துள்ளது. நாட்டின் மிக அழகான இடங்களைக் குறிப்பிடும் போதெல்லாம், மேகாலயாவின் பெயர் மனதில் கண்டிப்பாக தோன்றும்.
மேகாலயா வடகிழக்கு இந்தியாவில் பசுமை, அழகு மற்றும் அமைதி ஆகியவை நிறைந்த ஒரு மாநிலமாகும். இந்த மாநிலம் அதன் நீர்வீழ்ச்சிகள், ஏரிகள், குகைகள் மற்றும் பயிர்களுக்கு பெயர் பெற்றது. மேகாலயாவில் பார்க்க வேண்டிய பல இடங்கள் உள்ளன. உங்கள் குடும்பத்தினருடன் மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்க மிகவும் அழகான இடத்திற்கு அழைத்துச் செல்ல நினைத்தால், மேகலாவை விட வேறு சிறந்த தேர்வு எதுவும் சிறப்பாக இருக்க முடியாது. ஐஆர்சிடிசி ஒரு சிறந்த பேக்கேஜை அறிமுகப்படுத்தி உங்கள் வேலையை எளிதாக்கியுள்ளது. இந்த தொகுப்பில் நீங்கள் 7 நாட்களுக்கு மேகாலயாவுக்குச் செல்ல வாய்ப்பு கிடைக்கும். உணவு மற்றும் தங்கும் இடங்களுக்கான ஏராளமான ஏற்பாடுகளும் உள்ளன.
ஐஆர்சிடிசியின் இந்த சூப்பாரான பேக்கேஜின் பெயர் ESSENCE OF MEGHALAYA GROUP PACKAGE EX GUWAHATI (EGH05). இந்த பேக்கேஜ் மூலம் நீங்கள் 7 பகல் மற்றும் 6 இரவுகள் மேகாலயாவிற்கு செல்லலாம். குவஹாத்தி நிலையத்திலிருந்து உங்களை வரவேற்க வரும் ஏசி வாகனங்கள் உங்களை மேகாலயாவைச் சுற்றி கண்டு களிக்க அழைத்துச் செல்லும்.
இந்த மேகாலயா பேக்கேஜில், முதல் நாளில் நீங்கள் குவஹாத்தி ஸ்டேஷனில் இருந்து அழைத்து செல்லப்பட்டு ஒரு ஹோட்டலில் தங்கவைக்கப்படுவீர்கள், அங்கு உங்களுக்கு ஸ்நாக்ஸ் மற்றும் இரவு உணவு வழங்கப்படும். இதற்குப் பிறகு, மறுநாள் காலை உணவுக்குப் பிறகு, மா காமாக்யா கோயிலுக்குச் சென்று பின்னர் ஷில்லாங்கிற்குப் புறப்படுலாம். அங்கு நீங்கள் டான் போஸ்கோ அருங்காட்சியகம், லேடி ஹைடாரி பூங்காவிற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள். இதற்குப் பிறகு, ஷில்லாங்கில் சிற்றுண்டி மற்றும் இரவு உணவுடன் இரவு தங்கலாம்.
மேலும் படிக்க | மதுரை டூ பத்ரி - கேதார்நாத்... IRCTC வழங்கும் பாரத் கவுரவ் யாத்திரை பேக்கேஜ்..!!
மூன்றாம் நாள், ஷில்லாங்கில் காலை உணவுக்குப் பிறகு, சிரபுஞ்சிக்குப் புறப்படுவீர்கள். சிரபுஞ்சியில் பல இடங்களுக்குச் செல்வீர்கள். அதன் பிறகு நீங்கள் மீண்டும் ஷில்லாங்கில் உள்ள ஹோட்டலுக்கு வந்து ஷில்லாங்கிலேயே தங்கி உணவும் சாப்பிடுவீர்கள். நான்காவது நாளில் வங்கதேச எல்லை காட்டப்படும். பிறகு ஐந்தாம் நாள் ஜெயந்தியா ஹில்ஸ் காட்டப்படும். இது மட்டுமின்றி பல அழகான இடங்களை பார்வையிடும் வாய்ப்பும் கிடைக்கும்.
ஆறாவது நாளில், நீங்கள் மீண்டும் கவுகாத்திக்கு அழைத்து வரப்பட்டு, அங்குள்ள சுற்றுலா இடங்களை காணலாம்.
மேகாலயா பேக்கேஜின் கட்டணம்
இப்போது மேகாலயாவில் இந்த பேக்கேஜின் கட்டணம் பற்றி பேசுகையில், நீங்கள் ஒரு நபர் பயணம் செய்ய முன்பதிவு செய்தால், நீங்கள் ரூ.35,000 செலுத்த வேண்டும். அதேசமயம் இருவராக செல்ல முன்பதிவுக்கு ரூ.27,850 மற்றும் மூன்று பெர்ராக செல்ல முன்பதிவு செய்ய ரூ.25,730 செலவாகும். உங்களுக்கு 5 முதல் 11 வயது வரையிலான குழந்தைகள் இருந்தால், குழந்தைகளுக்கான படுக்கை வசதி பெற ரூ.21,490 மற்றும் படுக்கையை வேண்டாம் என்றால் ரூ.18,220 செலுத்த வேண்டும். இந்தத் பேக்கேஜை முன்பதிவு செய்ய விரும்பினால், நீங்கள் IRCTC இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
மேலும் படிக்க | வெளிநாடு டூர் இனி எளிது தான்... IRCTC வழங்கும் சில வெளிநாட்டு பேக்கேஜ்..!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ