பொய்யான நண்பர்களை கண்டுபிடிப்பது எப்படி? ‘இந்த’ 5 அறிகுறி இருக்கான்னு பாருங்க!

How To Find A Fake Friend : நம்முடன், பலர் நண்பர் என்ற பெயரில் பலர் இருப்பர். அவர்களில் யார் பொய்யான நண்பர்-உண்மையான நண்பர் யார் என்றே தெரியாது. அவர்களை கண்டு பிடிப்பது எப்படி?   

Written by - Yuvashree | Last Updated : Dec 5, 2024, 06:57 PM IST
  • பொய்யான நண்பர்களை கண்டுபிடிப்பது எப்படி?
  • அவர்களுக்கு உங்கள் மீது சீக்ரெட் ஆக பொறாமை இருக்கும்..
  • பிற அறிகுறிகள் சில இதோ!
பொய்யான நண்பர்களை கண்டுபிடிப்பது எப்படி? ‘இந்த’ 5 அறிகுறி இருக்கான்னு பாருங்க! title=

How To Find A Fake Friend : நம்முடன் இருப்பவர்களுள், யார் உண்மையான நண்பர், யார் பொய்யான நண்பர் என்றே கண்டு பிடிக்க முடியாத நிலை வந்து விட்டது. காரணம், நம் கண் முன் அப்படி நம்மிடம் ஸ்வீட்டாக பேசுபவர்கள், பின்னால் சென்று அப்படியே வேறு மாதிரியான ஆளாக மாறிவிடுவார்கள். இப்படிப்பட்ட பொய்யான நண்பர்களை கண்டுபிடிப்பது எப்படி? 

எப்போதும் சோர்வான உணர்வு: 

நாம் பொய்யான நண்பர்களுடன் இருக்கும்போது உடலில் இருந்து அனைத்து எனர்ஜிகளும் தீர்ந்துவிட்டது போன்ற உணர்வு இருக்கும். இதனால், அவர்களுடன் இருக்கும்போது சோர்வான உணர்வும் அங்கிருந்து சென்றுவிட வேண்டும் என்பது போன்ற உணர்வும் இருக்கும். இது ஏன் என்றால் பொய்யான நண்பர்களுடன் நாம் இருக்கும்போது நமது உள்ளுணர்வு இதுபோன்ற உடல் அறிகுறிகளை காட்டிக் கொண்டே இருக்கும். நீங்கள் ஒருவர் உங்கள் அருகில் இருக்கும் போது அசௌகரியமாக உணருகிறீர்கள் என்பதற்கான அறிகுறிதான் அது. எனவே, இப்படி உங்களை உணர வைக்கும் நபர்களிடமிருந்து தள்ளி இருக்கவும். 

உங்கள் மேல் அக்கறை இல்லாதது போன்ற உணர்வு:

நீங்கள் நண்பராக நினைத்துக் கொண்டிருக்கும் ஒருவருடன் பேசும் போது உங்களை அவர் கண்டு கொள்ளாதது போல் தோன்றி இருக்கிறதா? குறிப்பாக உங்களுக்கு பிடித்த ஏதேனும் ஒரு விஷயத்தைப் பற்றி பேசும்போது அவர் உங்களை மதிக்காதது போல் நடந்து கொண்டால், அவர் உங்களுக்கு பொய்யான நண்பராக இருக்கிறார் என்று அர்த்தம். உங்களது உண்மையான நண்பர் உங்களுக்கு பிடித்த விஷயங்களையும் உங்களை மகிழ்ச்சி கொள்ள வேண்டும் விஷயங்களையும் உண்மையாகவே காத்து கொடுத்து கேட்பார்.

மகிழ்ச்சியாக இருக்க மாட்டார்கள்: 

நீங்கள் ஏதேனும் ஒரு விஷயத்தில் வெற்றி அடையும் போது, சாதனை புரியும்போது நீங்கள் நண்பர் என்று நினைத்துக் கொண்டிருப்பவர், உங்கள் சாதனை குறித்து மகிழ்ச்சியாக இருக்க மாட்டார். மாறாக அதை மட்டமாக பேசுவதையும் அது குறித்து நகைச்சுவை செய்வதையும் வாடிக்கையாக வைத்திருப்பார். 

வீண் விமர்சனங்கள்: 

உங்களுடன் பொய்யான நண்பராக சுற்றிக் கொண்டிருப்பவர் உங்களை ஒரு வட்டத்திற்கு உள்ளேயே வைத்திருக்க வேண்டும் என்று நினைப்பார். அதைத் தாண்டி நீங்கள் போக நினைத்தால் தேவையில்லாமல் உங்கள் மீது வீண் விமர்சனங்களை வைப்பார். நீங்கள் செய்வது தவறு என்று கூற மாட்டார். உங்கள் தவறுகளை மோட்டிவேட் செய்பவராக இருப்பார். ஆனால் உண்மையான நண்பர்கள் நீங்கள் தவறு செய்யும் போது அதை சுட்டிக் காட்டுவர், உங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு கொடுப்பவர்களாக இருப்பர். அவர்கள் எப்போதும் உங்களை ஒரு போட்டியாக கருத மாட்டார்கள். 

கவனத்தை அவர்கள் மீது வைத்திருப்பர்: 

பல பேர் இருக்கும் இடத்தில் உங்களுக்கு அன்று முதன்மை கொடுக்கப்பட்டால் இவர்களால் தாங்கிக் கொள்ள முடியாது. அது உங்கள் பிறந்தநாளாக இருந்தாலும் கூட, பிறரின் கவனம் முழுவதும் அவர்கள் மீது இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். 

மேலும் படிக்க | கணவன்-மனைவிக்குள் பெரிய சண்டை வந்தாலும் பிரியாமல் இருக்க..‘இந்த’ மேஜிக்கை செய்யலாம்!

மேலும் படிக்க | பிரச்சனைகளை சிரித்துக்கொண்டே சமாளிக்க வேண்டுமா? ‘இந்த’ வழியை தெரிஞ்சிக்கோங்க..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News