How To Build Self Confidence As A Women : “ஆணும் பெண்ணும் சமம்” என்ற வாசகம், இன்றளவும் வெறும் வாசகமாக மட்டுமே இருப்பதாக பலர் கருதுகின்றனர். இன்றைய சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் அவளங்களை வைத்து பார்க்கும் போது, இது உண்மை என்றே தோன்றுகிறது. இருப்பினும், 20 வருடங்களுக்கு முன்பு இருந்ததை விட, இன்று ஓரளவிற்கு முன்னேறி இருக்கிறோம். இருப்பினும், பல பெண்கள் இன்னும் தங்களின் மனம் எனும் கூட்டை விட்டு வெளியே வராமல் சிறைப்பட்ட பறவை போல வீட்டிற்குள்ளேயே பறந்து கொண்டிருக்கின்றனர். இவர்கள், தங்கள் தன்னம்பிக்கையை வளர்க்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
புரிதல்:
பிறர் உங்களை புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பதற்கு முன்னர், உங்களை நீங்கள் நன்றாக புரிந்து வைத்திருக்கிறீர்களா இல்லையா என்பதை நன்கு ஆராய வேண்டும். பிறரிடம் காட்டும் இரக்கத்தை, கொஞ்சம் உங்கள் மீதும் நீங்கள் காட்டிக்கொள்ள வேண்டியது மிகவும் முக்கியமாகும். நீங்கள் வாழ்வில் எந்த தவறு செய்திருந்தாலும், எவ்வளவு தொய்வான இடத்தில் இருந்தாலும், உங்களிடம் பேசும் போது ஒரு நண்பரிடம் அல்லது தோழியிடம் பேசுவது போல பேச வேண்டும்.
அடையக்கூடிய இலக்குகளை அமைக்கவும்:
ஒரு சில பெண்கள், மிகவும் பெரிய இலக்குகளை நிர்ணயித்து விட்டு, பிறகு அதை அடைய முடியவில்லை என்றால் சோர்ந்து போய்விடுவர். எனவே, முதலில், சிறிது சிறிதாக உங்களால் முடியும் இலக்குகளை மட்டும் நிர்ணயிக்க வேண்டும்.
திறன்களை வளர்த்தல்:
உங்கள் நேரத்தையும், பணத்தையும், புதிதாக சில திறன்களை கற்றுக்கொள்வதில் முதலீடு செய்யவும். உங்களுக்கு பிடித்த பொழுது போக்கு, வர்க்ஷாப் உள்ளிட்ட விஷயங்களில் ஈடுபாடு காட்டவும். இதை செய்தால், உங்களுக்கு பிடித்த விஷயங்களை நீங்கள் செய்வதோடு மட்டுமன்றி, உங்கள் திறன்களை வளர்த்து, தொழில் ரீதியாக் புதிய பயணங்களை மேற்கொள்ளலாம்.
நேர்மறை எண்ணங்கள்:
உங்கள் வாழ்க்கையில் ஏதேனும் நன்மை நடக்கும் போது, உங்களுக்காக கைத்தட்டும் நபர்களையும், உங்களுக்கு சோகம் வந்தால் தோள் கொடுக்கும் நண்பர்களையும் எப்போதும் அருகில் வைத்துக்கொள்ள வேண்டும். இவர்கள், உங்கள் வாழ்வில் மிகவும் முக்கியமானவர்களாவர். இவர்கள் அருகில் இருந்தால் உங்களுக்கு நேர்மறை எண்ணங்கள் (பாசிடிவ் எனர்ஜி) அதிகரிக்கும். இது, உங்கள் மன நலனை காக்க உதவும். இவர்கள் அருகில் இருக்கும் போது, உங்களுக்கே தெரியாமல் உங்கள் மனதில் புதிய தைரியம் பிறக்கும்.
மன உறுதி:
உங்கள் தேவைகள், விருப்பங்கள், கருத்துகள் என அனைத்தையும் மரியாதையுடனும் தைரியத்துடனும் தெரிவிக்க கற்றுக்கொள்ளுங்கள். இந்த உறுதி, உங்களை தன்னம்பிக்கையுடனும் தகுதியுடனும் உங்களை உணச்சியடைய வைக்கும்.
மேலும் படிக்க | 5 நிமிடத்தில் வயதான தோற்றத்தை மறைத்து இளமையாக்கும் சூப்பர் டிப்ஸ்
உங்கள் பலங்களில் கவனம் செலுத்துங்கள்:
மனிதனுக்கு பலவீனம் ஆயிரம் இருந்தாலும், பலம் என்பது ஓரிரண்டாவது இருக்கும். அதனால், அதில் கவனம் செலுத்துவது மிகவும் நன்று. உங்கள் பலத்தை இன்னும் ஆழமாக பலப்படுத்துவது, உங்களை பற்றிய பாசிடிவான எண்ணத்தை உங்களுக்கு வளர்க்க உதவும்.
எதிர்மறை எண்ணங்களுக்கு சவால் விடுங்கள்:
நாம் ஏதேனும் ஒரு விஷயத்தை செய்ய ஆரம்பிக்கும் போது, நம் மண்டைக்குள் இருந்து யாரோ ஒருவர் “இல்லை, உன்னால் அது முடியாது. அதை செய்யாதே..தோற்றுவிடுவாய்” என்று கூறிக்கொண்டே இருக்கும். அப்போது நாம் செய்ய வேண்டியது என்ன தெரியுமா? “செய்து காட்டுகிறேன் பார்” என அதற்கு சவால் விட்டு செய்து முடிக்க வேண்டும். இதனால், உங்களை பற்றிய கெட்ட பிம்பங்கள் உங்களுக்கே மாறும்.
உடல் முக்கியம்:
தினசரி உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக கொள்ள வேண்டும். நல்ல உணவுகளை, 3 வேலையும் சாப்பிட வேண்டும். உடலை நன்றாக பார்த்துக்கொள்வதும், மனதை நன்றாக பார்த்துக்கொள்வதும் உங்கள் கைகளில் இருக்கிறது என்பதை மறந்து விடாதீர்கள்.
மேலும் படிக்க | முகப்பருவுக்கு குட்பை-பொடுகுக்கு டாட்டா…இரண்டுக்கும் ஒரே டிப்ஸ்! என்ன தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ