Indian Railways: ரயிலில் சும்மா கூட இத செய்யாதீர்கள்... அப்புறம் அதோ கதி தான்!

Indian Railways Rules: ரயிலில் பயணிகளின் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் தரப்படும் நிலையில், சிகரெட் பிடிப்பது, தீக்குச்சியை கொழுத்துவதும் கூட தடை செய்யப்பட்டுள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

Written by - Sudharsan G | Last Updated : Aug 14, 2023, 06:03 PM IST
  • ரயில்வே சட்டத்தின் 167வது பிரிவின் கீழ் புகைப்பிடிப்பது குற்றமாகும்.
  • ரயிலில் தீக்குச்சிகளை கொளுத்துவதும் கூட தடைசெய்யப்பட்டுள்ளது.
  • ரயிலில் தீ விபத்து போன்ற சம்பவங்களை தடுக்க சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளது.
Indian Railways: ரயிலில் சும்மா கூட இத செய்யாதீர்கள்... அப்புறம் அதோ கதி தான்! title=

Indian Railways Rules: சிகரெட் பிடிப்பது அனைவருக்கும் மிகவும் தீங்கு விளைவிக்கும் என்றாலும், ரயிலில் புகைபிடித்தால் என்ன நடக்கும்?. இதைப் பற்றி நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?. இல்லை என்றால் புகை பிடிப்பது தொடர்பாக ரயில்வே விதித்துள்ள விதிகள் என்ன என்பதை இப்போது தெரிந்துகொள்ளுங்கள். 

சமீபத்தில் வந்தே பாரத் ரயிலில் பயணி ஒருவர் சிகரெட்டை பற்றவைத்ததும், அதன் பிறகு புகைபிடிக்கும் சென்சார்கள் எச்சரிக்கை விடுத்து சத்தம் எழுப்பியுள்ளன. இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். எனவே ரயில்வேயின் இந்த விதி உங்களுக்கும் கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும். 

ரயில்வே துறையின் விதி

ரயிலில் புகைபிடிப்பது ரயில்வே சட்டத்தின் 167வது பிரிவின் கீழ் குற்றமாக கருதப்படுகிறது. இதனுடன், சக பயணிகள் ஆட்சேபனை தெரிவித்த பிறகும், பயணத்தின் போது யாராவது சிகரெட் புகைத்தால், அவருக்கு ரயில்வே அபராதமும் விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

100 முதல் 500 ரூபாய் வரை ரயில்வே அபராதம் விதிக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. ரயிலில் தீக்குச்சிகளை கொளுத்துவதும் கூட தடைசெய்யப்பட்டுள்ளது. ரயிலில் இதுபோன்ற செயல்களைச் செய்வதால் தீ விபத்து ஏற்படும் என்றும், அவர்களுடன் பயணிக்கும் பயணிகளும் சிரமத்தை சந்திக்க நேரிடும் என்றும் ரயில்வே தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | இந்தியாவின் அதிவேக ரயில் RapidX... 12 நிமிடங்களில் 17 கி.மீ...!

ரயிலில் இருக்கும் சென்சார்கள்

ரயிலில் தீ விபத்து போன்ற சம்பவங்களை தடுக்க சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளதாக ரயில்வே தெரிவித்துள்ளது. 2500க்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகளில் இதுபோன்ற சென்சார் அமைப்புகள் பொருத்தப்பட்டுள்ளதால், ரயிலில் யாராவது தீ வைத்தால், அது குறித்து சென்சார் மற்றவர்களுக்கு தெரியப்படுத்திவிடும். 

ரயில்வே சட்டத்தின் 164ஆவது பிரிவின்படி, ரயிலில் எரியக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்வது தண்டனைக்குரிய குற்றமாகும். ரயில்வேயின் இந்த விதிகளை மீறும் பயணிகளுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

இது தவிர, பல பயணிகள் கழிப்பறையில் சிகரெட் பிடிக்கலாம் என்று நினைக்கிறார்கள், ஆனால் அது அவ்வாறு இல்லை. ரயிலில் எங்கும் புகை பிடிக்க முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். எரியும் தீப்பெட்டியை ரயிலிலோ, சுற்றுவட்டாரத்திலோ எறிந்தால், தீ விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதுடன், பயணிகளின் உயிருக்கும் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. 

வசதிகளும் சலுகைகளும்

இந்தியன் ரயில்வேயில் தினமும் லட்சக்கணக்கானோர் பயணிக்கும் நிலையில், பல்வேறு வசதிகளையும் சலுகைகளையும் பயணிகள் பெறுகின்றனர். முன்பதிவு இல்லாத பெட்டிகள், முன்பதிவு செய்யப்படும் பெட்டிகளிலேயே படுக்கை வசதிக்கொண்டது, இருக்கை வசதிக்கொண்டது, அதுவும் ஏசி இருக்கும் வகுப்பு, ஏசி இல்லாத வகுப்பு, மகளிர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு என தனி வகுப்பு என அனைவரையும் உள்ளடக்கிய சேவையை ரயில்வே பரந்த அளவில் வழங்கி வருகிறது. 

இதுபோக, மாற்றுதிறனாளிகள், மூத்த குடிமக்கள் ஆகியோருக்கு டிக்கெட் விலையிலும் சலுகைகள் அளிக்கப்படுகின்றன. அதோபோல் கர்ப்பமான பெண்கள், மாற்றுதிறனாளிகள், மூத்த குடிமக்கள் ஆகியோருக்கு ஸ்லீப்பர் வகுப்புகளில் லோயர் பெர்த் கிடைக்கவும் வழிவகை செய்து தரப்படுகிறது. இப்படி சலுகைகளும், வசதிகளும் தரப்படும் நிலையில், சில கட்டுப்பாடுகளையும் ரயில்வே விதிக்கிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். 

மேலும் படிக்க | Indian Railways முக்கிய அப்டேட்: உங்களுக்கு லோயர் பர்த் கிடைக்குமா கிடைக்காதா? புதிய விதி இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News