புதுடெல்லி: இன்று புத்தாண்டை முன்னிட்டு இந்தியன் ஆயில் நிறுவனம் மக்களுக்கு ஒரு பெரிய பரிசை வழங்கியுள்ளது. வர்த்தக ரீதியிலான எல்பிஜி சிலிண்டரின் விலையை 100 ரூபாய் குறைக்க இந்தியன் ஆயில் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதனால் மக்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது. இருப்பினும், வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
வணிக ரீதியிலான எல்பிஜி சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது
முன்னதாக டிசம்பர் மாதத்தில், வணிக ரீதியான எல்பிஜி (Commercial Gas Cylinder) சிலிண்டர்களின் விலை உயர்த்தப்பட்டது. டிசம்பரில் எல்பிஜி சிலிண்டர் (LPG Gas Cylinder) விலை ரூ.100 உயர்த்தப்பட்டது. தற்போது வணிக சிலிண்டரின் விலை குறைப்பால் உணவக உரிமையாளர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
ALSO READ | ஆதார் அட்டையை மட்டும் காட்டி நிமிடங்களில் எல்.பி.ஜி இணைப்பு பெறலாம்
கமர்ஷியல் எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு
டெல்லியில் தற்போது 19 கிலோ வணிக எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.2001 ஆக மாற்றப்பட்டுள்ளது. அதே நேரத்தில், கொல்கத்தாவில் வணிக ரீதியான எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.2077 ஆக உள்ளது. மும்பையில் 19 கிலோ வர்த்தக எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.1951 ஆக உள்ளது.
வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை
இம்முறையும் வீட்டு சிலிண்டர் விலையில் எவ்வித மாற்றம் இல்லை. கடந்த அக்டோபர் மாதம் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்களின் விலை உயர்த்தப்பட்டது. டெல்லி மற்றும் மும்பையில் மானியம் (LPG Gas Subsidy) இல்லாத 14.2 கிலோ வீட்டு எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.899.50 ஆகும். அதே நேரத்தில், கொல்கத்தாவில் இதன் விலை ரூ.926, சென்னையில் ரூ.915.50க்கு 14.2 கிலோ எல்பிஜி சிலிண்டர் விற்கப்படுகிறது.
ALSO READ | LPG சிலிண்டர் மானியம் மீண்டும் கிடைக்கிறதா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR