ஒவ்வொரு மாதமும் முதியோருக்கு 10 கிலோ உணவு தானியம் இலவசம்; எப்படி பயனடைவது?

ரேஷன் கார்டு மூலம் முதியோருக்கு சிறப்பு சலுகை. ஒவ்வொரு மாதமும் 10 கிலோ கிராம் தானியங்கள் இலவசமாக வழங்கப்படும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 29, 2020, 08:35 PM IST
ஒவ்வொரு மாதமும் முதியோருக்கு 10 கிலோ உணவு தானியம் இலவசம்; எப்படி பயனடைவது? title=

Ration Card Benefit: ரேஷன் அட்டை மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகும். இதன் மூலம் அரசு ரேஷன் பொருட்களை மக்களுக்கு வழங்குகிறது. அனைத்து மாநில அரசும் குடும்ப அட்டையை (Ration Card) ஏழைகளுக்கு வழங்கி வருகிறது. அதேபோல இந்த அட்டை முதியோருக்கும் பல நன்மைகளை வழங்குகிறது. புதிய ரேஷன் அட்டை உருவாக்குவது முதல் பெயர் நீங்குவது, சேர்ப்பது போன்ற பணிகளை மாநில அரசின் உணவு மற்றும் விநியோகத் துறை செய்து வருகிறது.

அதே சமயம், முதியோர் ஓய்வூதியம் பெறாத ஆனால் அதற்கு தகுதியுள்ள அனைத்து முதியவர்களுக்கு இந்த அட்டை மூலம் ஒவ்வொரு மாதமும் இலவச தானியங்கள் வழங்கப்படுகிறது. இது அன்னபூர்ணா திட்டத்தின் மூலம் மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் முதியவர்களுக்கு அரசாங்கம் மாதத்திற்கு 10 கிலோ தானியங்களை (6 கிலோ கோதுமை மற்றும் நான்கு கிலோ அரிசி) வழங்குகிறது.

அன்னபூர்ணா யோஜனா (Annapurna Yojana) அட்டை வைத்திருக்கும் முதியவர்களுக்கு இந்த சலுகை கிடைக்கும். இந்த வகை குடும்ப அட்டைகளில் உதவியற்றவர்கள், ஏழைகள், வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கும், வருமான ஆதாரங்கள் இல்லாதவர்களுக்கு,  குடும்பத்தினரிடமிருந்து எந்த உதவியும் கிடைக்காமல் தனியாக இருக்கும் வயதானவர்களுக்கு கிடைக்கும்.

ALSO READ |  One Nation, One Ration Card தொடர்பான முக்கிய தகவல்கள்..!!!

இந்த திட்டத்தின் முழு செலவும் மத்திய அரசு செலுத்துகிறது. இந்த திட்டத்தின் கீழ் ரேஷன் அட்டைகளை வழங்குதல் மற்றும் மக்களுக்கு ரேஷன் பொருட்களை விநியோகிப்பது போன்ற பணிகளை மாநில அரசு மேற்கொள்கிறது. அன்னபூர்ணா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரேஷன் கார்டுகள் வெள்ளை நிறத்தில் இருக்கும். 

One Nation, One Ration Card, அதாவது ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு மூலம், நீங்கள் நாட்டின் எந்த மூலையில் வசித்தாலும், எந்த மாநிலத்தில் இருந்தாலும், நீங்கள் அரசு வழங்கும் ரேஷனை வாங்க முடியும். நீங்கள் இட மாற்றம் செய்யும் புதிய ரேஷன் கார்டை பெற வேண்டிய அவசியமில்லை. உங்கள் பழைய ரேஷன் கார்டு முழுமையாக செல்லுபடியாகும். 

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு (One Nation - One Ration Card) திட்டத்தில் இணைய உங்கள் ரேஷன் கார்டு ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News