Flipkart தனது இரண்டாவது எடிஷனின் Big Saving Days Sale-ஐப் பற்றி அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 6 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு இந்த Sale தொடங்கும். இது ஆகஸ்ட் 10 வரை தொடரும்.
இந்த Sale-லில் பயனர்கள் City Bank-ன் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டில் 10% உடனடி தள்ளுபடியைப் பெற முடியும். ICICI Bank கார்ட் வைத்திருப்பவர்கள், இந்த Sale-லில், வாங்கும் பொருட்களில் 10% தள்ளுபடி பெற முடியும். மேலும், ஆன்லைன் விற்பனையில் மொபைல் போன்களின் விற்பனையிலும் பெரும் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
Big Saving Days Sale விற்பனையில், சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட Apple iPhone SE-ன் அடிப்படை வகையில், தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் காரணமாக வாடிக்கையாளர்கள் இந்த ஃபோனை 36,999 ரூபாயில் வாங்க முடியும். அதேபோல், iPhone 7 Plus-ன் 32GB வேரியண்ட்களை 34,999 ரூபாய்க்கு வாங்கலாம். மாதத்திற்கு 5,834 ரூபாய் என்ற No-Cost EMI-யிலும் இந்த ஃபோனை வாங்க ஆப்ஷன் உள்ளது.
Xiaomi Redmi k20-ன் 6 GB RAM மற்றும் 128 GB Internal Storage ஆப்ஷன் கொண்ட ஃபோனை இந்த Sale-ல், 6000 ரூபாய் தள்ளுபடியில் வாங்கலாம். அதாவது Sale-ல் இந்த ஃபோனை 22,999 ரூபாய்க்கு வாங்க முடியும். மேலும், 64 MP குவாட் கேமரா ஃபோன் Poco X2-வை 19,999 ரூபாய்க்கு பதிலாக 17,499 ரூபாய்க்கு வாங்க முடியும். இந்த ஃபோனில் 256 GB internal storage உள்ளது.
ALSO READ: சாம்சங் கேலக்ஸி நோட் 20 வரிசை ஸ்மார்ட்போனின் பிரமிக்க வைக்கும் புகைப்படம் கசிந்தது
இதேபோல், Motorola Razr-ஐ 1,24,999 ரூபாய் என்ற தள்ளுபடி விலையில் வாங்க முடியும். இதன் உண்மையான விலை 1,49,999 ரூபாயாகும். இந்த ஃபோனை வாடிக்கையாளர்கள் மாதத்திற்கு 5,029 ரூபாய் என்ற EMI-ல் வாங்கிக்கொள்ளலாம். 90 Hz ஸ்க்ரீன் ரெஃப்ரெஷ்ட் ரேஷியோ 64 MP-யுடனான Realme X2 ஃபோனை இந்த சேலில் வாடிக்கையாளர்கள் 28,999 ரூபாயில் வாங்கலாம். மேலும் Realme 6 மற்றும் Realme 6 Pro ஆகிய ஸ்மார்ட் ஃபோன்களை முறையே 15,999 ரூபாய் மற்றும் 17,999 ரூபாயில் வாங்க முடியும். Oppo Reno 2F ஸ்மார்ட் ஃபோனை 23,490 க்கு பதிலாக 17,990 ரூபாயில் வாங்கலாம். 49,000 ரூபாய் விலை கொண்ட iPhone XR ஸ்மார்ட்ஃபோன் Flipkart Big Saving Days Sale-ல் 44,999 ரூபாய்க்கு கிடைக்கும்.