இது காதலா? காமமா? ரிலேஷன்ஷிப்பில் குழப்பத்தை தவிர்க்க..சில சிம்பிள் டிப்ஸ்..!

Relationship Tips: ஒரு சிலர், தனக்கு பிடித்த நபர் மீது இருக்கும் ஈர்ப்பு காதலா காமமா என தெரியாமல் தவிப்பர். இதைப்போக்க காதலுக்கும் காமத்திற்கும் உள்ள வித்தியாசங்களை படித்து பயன்பெறுங்கள்.  

Written by - Yuvashree | Last Updated : Jun 14, 2023, 04:41 PM IST
  • காதலுக்கும் காமத்திற்குமான வித்தியாசம்.
  • சிம்பிள் ரிலேஷன்ஷிப் டிப்ஸ்.
  • இதைப்படித்து குழப்பத்தை தவிறுங்கள்.
இது காதலா? காமமா? ரிலேஷன்ஷிப்பில் குழப்பத்தை தவிர்க்க..சில சிம்பிள் டிப்ஸ்..! title=

உதாரணத்திற்கு, உங்களுக்கு ஒருவரை பிடித்திருக்கிறது என வைத்துக்கொள்வோம். ஒரு சில சமயங்களில் அந்த பிடித்த நபருடன் நேரம் செலவிடவேண்டும் என தோன்றும். அன்றைய நாளில் நமக்கு நடந்தவற்றை எல்லாம் சொல்ல வேண்டும் போல தோன்றும். ஆனால், இன்னும் சில சமயங்களில் அந்த நபர் குறித்து பல விதமான இச்சைக்குரிய பகல் கனவிலும் ஆழ்ந்திருப்போம். இதனால், இது காதலா அல்லது காமமா என்பதை பெரிதாக யோசித்து நிகழ்காலத்தில் இருக்க தவறி விடுவோம். இதைதவிர்க்க, காதலுக்கும் காமத்திற்கும் உள்ள வித்தியாசங்களை தெரிந்து கொள்வது நல்லது.

உணர்ச்சிகளினால் கட்ட்ப்போடப்படுவது:

காதல்: 
காதல் உணர்வை பொருத்த வரை, சம்பந்தப்பட்ட இரு நபர்களுக்குள்ளும் ஒருவிதமான உணர்ச்சி பிணைப்பு இருக்கும் (emotional bonding) இது, உடலை தாண்டி, மனதுடன் சம்பந்தப்பட்டது. இவ்வகையான உணர்வு, ஒருவரின் மீதுள்ள அன்பு, அவருக்கும் நமக்கும் இடையேயுள்ள நெருக்கம், ஒற்றுமை இதையெல்லாம் வைத்துதான் வரும். 

காமம்:

காமத்தில் மேற்கூறிய எதுவுமே இருக்காது. இது, முழுக்க முழுக்க உடல் மற்றும் வெளிப்புறத்தோற்றத்தால் ஏற்பட்ட ஈர்ப்பு. காதல், பாதுகாப்பான உணர்வை தரும். காமத்தி, அந்த வகையான உணர்வை கண்டிப்பாக எதிர்பார்க்க முடியாது. காமம், உடல் தேவைகளை மட்டுமே நாடும். அது கிடைத்தவுடன், இந்த உணர்வும் விலகி விடும். 

நிலைப்பு தன்மை:

காதல்:

‘காதல் அழிவதில்லை..’ என்று பழமொழியல்ல, படம் கூட உள்ளது. இதுதான் நிதர்சனமும் கூட, உண்மையான காதல் என்றுமே அழியாது. காதல், நீண்ட நாட்கள் தாக்குப்பிடிக்கும் சக்தியை உடையது. காதலில் விழுந்த ஜோடிகள், அதை காப்பாற்றிக்கொள்ள எத்தனை தூரம் வேண்டுமானாலும் செல்வர்.

காமம்:

மேற்கூறியவைக்கு அப்படியே நேர் மாறாக இருப்பதுதான் காமம். இதில், இருவரின் தேவைகளும் முடிந்தவுடன் ஒருவரையொருவர் எப்போது கழட்டி விடலாம் என்றுதான் யோசிப்பர். இதில் ஒருவருக்கு இன்னொருவர் மீது ஃபீலிங்க்ஸ் வந்துவிட்டு, இன்னொருவருக்கு வரவில்லை என்றால் பிரச்சனைதான். குறிப்பாக, இந்த உறவை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என இரண்டு பேருமே விரும்ப மாட்டார்கள். 

நெருக்கம்:

காதல்:
காதலில், உடல் தேவைகளை விட உணர்வு தேவைகள் அதிகமாக இருக்கும். இதனால், உடல் அளவிலும் மனதளவிலும் இரண்டு நபர்களுமே நெருக்கமாக இருப்பர். மரியாதை, அன்பு, பாசம், நம்பிக்கை என பல உணர்வுகள் காதலிப்பவர்களுக்கும் பரிமாறப்படும். 

மேலும் படிக்க | தூக்கமின்மை பிரச்சனையா? இந்த ஈசி வழிமுறைகளை கடைபிடியுங்கள்…கை மேல் பலன் கிடைக்கும்..!

காமம்:

காமம், உடல் தேவைகளை பூர்த்தி செய்வதில் மட்டுமே குறியாக இருக்கும். சம்பந்தப்பட்ட நபருடன், நமக்கு எமோஷனலாக எந்த வித சம்பந்தமும் இல்லாதது போல தோன்றும். ஆனால், அவரது உடல் மற்றும் புற அழகு மட்டும் நம்மை ஈர்க்கும்படி இருக்கும், 

சுயநலம்:

காதல்:

காதலிப்பவர்களுக்குள் தனிமனித மரியாதை இருக்கும், சரிசமமான அன்பு மற்றும் பாசமும் இருக்கும். தனக்கு வராத விஷயங்களையும் பார்னருக்காக கற்றுக்கொண்டு அதைசெய்ய முற்படுவது, நல்ல ரிலேஷன்ஷிப்பின் சிறிய உதாரணம். இதில், சுயநலம் இருக்காது. “உன் மகிழ்ச்சி..என் மகிழ்ச்சி..உன் சோகம்..என் சோகம்..” என எல்லா உணர்வுகளும் இரண்டு பேர்களூக்குள்ளும் பிண்ணி பிணைய பட்டிருக்கும். 

காமம்: 

காமத்தில், சுயநலம் தான் மேலோங்கி இருக்கும். சம்பந்தப்பட்ட இன்னொருவரின் உணர்வுகள் எவ்வளவு டேமேஜ் ஆகிறது என்பதை மற்றவர் கண்டுகொள்ள மாட்டார், 

புரிந்து கொள்ளும் தன்மை:

காதல்:

காதல் ரிலேஷன்ஷிப்பில் அதிக அளவிலான புரிந்து கொள்ளும் தன்மை (empathy) இருக்கும். இது, தனக்கு பிடித்த ஒருவரின் கஷ்டமான அல்லது நெருடலான நிலையை கேள்வி கேட்க செய்யாது. மாறாக, அவரை முற்றிலுமாக காதல் புரிந்து கொள்ள வைக்கும். 

காமம்:

காம உணர்வில் புரியும் தன்மை சுத்தமாக இருக்காது. என்ன ஆனாலும் சரி, அது அடுத்தவரை எவ்வளவு காயப்படுத்தினாலும் சரி, தனக்கு பிடித்ததைதான் செய்வேம் என்றிருக்கும் இரண்டு நபர்களுக்குள்ளும் காதல் இருக்காது. காமம்தான் இருக்கும். 

மேலும் படிக்க | உடற்பயிற்சி செய்யாமல் உடல் எடையை குறைக்க வேண்டுமா? இதை ஃபாலோ பண்ணுங்க..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News