பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துகொண்டே இருக்கிறது. இந்தியாவின் பல நகரங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ .100-ஐத் தாண்டியுள்ளது. காரில் பயணம் செய்வதற்கு அதிகம் செலவிட வேண்டிய நிலை உள்ளது. இதற்கு ஏதாவது தீர்வு கிடைக்காதா என மக்கள் ஏங்குகிறார்கள்.
அதற்கு ஒரு அற்புத தீர்வாக இருப்பதுதான் சி.என்.ஜி வண்டிகள். பெட்ரோல் விலை அதிகரித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் சி.என்.ஜி கார்கள் உங்களுக்கு உதவியாக இருக்கும். தற்போது சந்தையில் பல சி.என்.ஜி கார்கள் உள்ளன. அவற்றில் சிறந்த சில செ.என்.ஜி கார்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
மாருதி சுசுகி ஆல்டோ
மாருதி சுசுகி ஆல்டோ ஒரு மலிவான சி.என்.ஜி காராக (Car) உள்ளது. சிஎன்ஜி கார்களில் அதிக மைலேஜ் தரும் காராக ஆல்டோ உள்ளது. இதில், நீங்கள் 32 கி.மீ க்கும் அதிகமான மைலேஜ் பெறுவீர்கள். இந்த காரின் விலை ரூ .2.88 லட்சத்திலிருந்து தொடங்குகிறது.
மாருதி சுசுகி வேகன்ஆர்
மாருதி சுசுகி வேகன் ஆர்-ரும் (Maruti WagonR) சிஎன்ஜி கார்களில் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். இந்த காரிலும் ஃபாக்டரி ஃபிட்டட் சி.என்.ஜி கிட் கிடைக்கிறது. இதில் வாடிக்கையாளர்களுக்கு 32 கி.மீ வரையிலான மைலேஜ் கிடைக்கும். இதன் விலை சுமார் ரூ .5.25 லட்சம் ஆகும்.
ALSO READ: Maruti Suzuki கார் வாங்கப்போறீங்களா? உங்களுக்கு ஒரு சூப்பர் செய்தி
மாருதி சுசுகி செலிரியோ
ஆல்டோ மற்றும் வேகன்ஆர்-ஐத் தவிர, செலெரியோவும் சி.என்.ஜிக்கு நல்ல தேர்வாக இருக்கும். இந்த கார் மிக நல்ல மைலேஜை அளிக்கின்றது. இதில் வாடிக்கையாளர்கள் 32 கி.மீ வரை மைலேஜ் பெறலாம். செலிரியோவின் விலை சுமார் ரூ .5.37 லட்சத்திலிருந்து தொடங்குகிறது.
ஹூண்டாய் சாண்ட்ரோ
சி.என்.ஜி பிரிவில், மாருதியைத் தவிர, சில ஹூண்டாய் கார்களும் நல்ல தேர்வுகளாக உள்ளன. இவற்றில் மிகவும் பிரபலமானது ஹூண்டாய் சாண்ட்ரோ. இந்த ஹேட்ச்பேக் 30.48 கி.மீ மைலேஜ் தருகிறது. ஹூண்டாய் சாண்ட்ரோ விலை ரூ .4.58 லட்சத்திலிருந்து தொடங்கி 6.26 லட்சம் வரை செல்கிறது.
ஹூண்டாய் கிராண்ட் ஐ 10 நியோஸ்
ஹூண்டாய் (Hyundai) சாண்ட்ரோவைத் தவிர, சி.என்.ஜி பிரிவில் ஹுண்டாய் நிறுவனத்தின் கிராண்ட் ஐ 10 நியோசும் ஒரு நல்ல தேர்வாக இருக்கும். இந்த கார் 20.7 கிமீ வரை மைலேஜ் தருகிறது. இந்த ஹூண்டாய் காரின் விலை ரூ .6.63 லட்சம் ஆகும்.
ALSO READ: வாகனத்தின் மைலேஜை அதிகரிக்க “இவற்றை” இன்றே காரில் இருந்து நீக்கவும்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR