குருவின் அருளால் இந்த ராசிக்காரர்கள் மீது பண மழை: இனி யோசிக்காம செலவு செய்யலாம்

Astrology: வியாழன் தனது சொந்த ராசியில் அல்லது 2, 5, 9 மற்றும் 12 வது வீட்டில் சஞ்சரிக்கும் போது பல சுப பலன்கள் கிடைக்கும். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 23, 2022, 03:54 PM IST
  • மூதாதையர் சொத்துக்களால் லாபம் உண்டாகும்.
  • குடும்பத்தில் மகிழ்ச்சியும், செழிப்பும் உண்டாகும்.
  • வியாபாரிகளின் வியாபாரத்தில் லாபம் கிடைக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.
குருவின் அருளால் இந்த ராசிக்காரர்கள் மீது பண மழை: இனி யோசிக்காம செலவு செய்யலாம் title=

மீனத்தில் வியாழனின் பெயர்ச்சி: வியாழன் கிரகம் மிகப்பெரிய கிரகமாக கருதப்படுகிறது. ஜோதிட சாஸ்திரப்படி இது ஒரு நல்ல கிரகமாக கருதப்படுகிறது. வியாழன் கிரகம் அறிவு, மரியாதை, கல்வி, திருமண வாழ்க்கைக்கு காரணமான கிரகமாகும். தேவ குருவான வியாழன் ஒரு ராசியில் 13 மாதங்கள் இருக்கிறார். 

ஜோதிட சாஸ்திரப்படி ஏப்ரல் 12ம் தேதி தேவகரு மீன ராசிக்குள் நுழைவார். வியாழன் தனது சொந்த ராசியில் அல்லது 2, 5, 9 மற்றும் 12 வது வீட்டில் சஞ்சரிக்கும் போது பல சுப பலன்கள் கிடைக்கும். குரு பகவானின் இந்த மாற்றம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பலன் தரும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். 

மேஷம்

வியாழன் பெயர்ச்சி மேஷத்தின் 12 ஆம் வீட்டில் இருக்கும். அதனால், மூதாதையர் சொத்துக்களால் லாபம் உண்டாகும். இதனுடன் குடும்பத்தில் மகிழ்ச்சியும், செழிப்பும் உண்டாகும். வியாபாரிகளின் வியாபாரத்தில் லாபம் கிடைக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நடக்கும் யோகம் உள்ளது. இது தவிர, இந்த காலத்தில் அதிர்ஷ்டமும் அதிகமாக இருக்கும். 

கடகம்:

ஏப்ரல் மாதம் வியாழன் 9வது வீட்டில் சஞ்சரிக்கிறார். குரு பகவானின் பெயர்ச்சி காலம் கடக ராசிக்காரர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஒரு அசையாச் சொத்திலிருந்து வலுவான பண ஆதாயம் கிடைக்கும். வியாபாரிகளின் வருமானம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வுக்கான வாய்ப்பு அமையும். இருப்பினும், தேவையற்ற பயணங்களால் ஓரளவு நிதி இழப்பு ஏற்படக்கூடும்.

மேலும் படிக்க | இந்த 6 ராசிக்காரர்களின் வாழ்க்கை ஒளிமயமாக்குவார் சனி பகவான்

விருச்சிகம்

வியாழன் விருச்சிகத்தின் ஐந்தாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இதனால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு பொருளாதார நிலை வலுவாக இருக்கும். தொழிலில் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்க பலமான வாய்ப்புகள் உள்ளன. மேலும் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.

கும்பம்

குரு பகவான் ஏப்ரல் மாதத்தில் ஜாதகத்தின் இரண்டாவது வீட்டில் சஞ்சரிக்கிறார். இந்த காலகட்டத்தில் கும்ப ராசிக்கார்ரகளுக்கு வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். மேலும், உத்தியோகத்தில் பதவி உயர்வுடன் சம்பளம் உயரவும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். இது தவிர தந்தையின் சொத்துக்களால் ஆதாயமும் உண்டாகும்.

மீனம்

வியாழனின் இந்த ராசி மாற்றம் மீன ராசியினருக்கு சிறப்பானதாக அமையும். வியாழனின் பெயர்ச்சி 12வது வீட்டில் இருக்கும். அதன் காரணமாக நீங்கள் வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. இந்த பயணமும் உங்களுக்கு பல ஆதாயங்களை அளிக்கும். இதனுடன் செல்வமும் பெருகும். உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் வருமானம் கூடும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சனியால் இந்த ராசிக்காரர்களுக்கு 141 நாட்கள் சோதனையான காலமாக இருக்கும்: ஜாக்கிரதை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News